மழை நீர் சவால்.. அமைச்சர் வேலுமணியின் மழை நீர் சேகரிப்பு பிரசாரத்துக்கு சத்குரு ஜக்கி வாசுதேவ் ஆதரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மழை நீர் சேமிப்பை சவாலாக எடுத்துக்கொண்டு அனைவரும் செயல் பட வேண்டும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்பி.வேலுமணி விடுத்த கோரிக்கையை சத்குரு ஜக்கி வாசுதேவ் ஏற்றுக்கொண்டுள்ளார்.

தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனிப்பட்ட முறையில் மழை நீர் சேகரிப்பு திட்டத்தை வீட்டுக்கு வீடு நடைமுறைப்படுத்த டிஜிட்டல் பிரச்சாரத்தை கடந்த மாதம் 22ஆம் தேதி தொடங்கினார். தமிழ்நாடு நீர் வளம் நமக்காக, நாட்டுக்காக, நாளைக்காக என்ற பெயரில் இணைய தள பிரச்சாரத்தை தொடங்கிய அமைச்சர் வேலுமணி, ட்விட்டர் வழியாக மழை நீர் சேமிப்பு தொடர்பாக வீடியோ ஒன்றை கடந்த 6ம் தேதி வெளியிட்டார்.

Sadhguru supports Rain Water Challenge

அதில் தண்ணீர் பிரச்சினைக்கு நிரந்திர தீர்வு மழை நீர் சேகரிப்பு மட்டுமே என்று குறிப்பிட்டார். மழை நீர் சேமிப்பு பிரச்சாரத்தை பொதுமக்களிடம் கொண்டு செல்ல அரசியல் சார்பில்லாத பிரபலங்களின் ஆதரவை நாடினார். மழை நீர் சேமிப்பை சவாலாக எடுத்துக் கொண்டு செயல்படலாமே என்று கோவை ஈஷா யோகா மைய தலைவர் சத்குரு ஜக்கி வாசுதேவ் உள்ளிட்டோருக்கு ட்விட்டர் மூலம் அமைச்சர் வேலுமணி அழைப்பு விடுத்தார்.

இந்த கோரிக்கையை ஏற்று கோவை ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ், மழை நீர்சேகரிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், ட்விட்டரில் வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாடு நீர்வளம் என்ற இயக்கம் மேற்கொண்டு வரும் மழை நீர் சேகரிப்பு பிரச்சாரத்துக்கு தமது முழு ஆதரவை தெரிவித்திருக்கிறார். அதில், பேசிய அவர் மழை நீர் சேமிப்பு எதிர்காலத்துக்கு மிகவும் முக்கியமானது. நம்மிடம் நீர் வளத்துக்காக இருக்கும் ஒரே ஆதாரம் மழை மட்டுமே.

Sadhguru supports Rain Water Challenge

மழை பெய்யும் போது நாம் அதனை பூமிக்குள் சேமித்து நீண்ட நாட்களுக்கு பயன்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் மழை பொழிவு ஆண்டுக்கு 45 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை தான் உள்ளது. 60 நாட்களில் பெய்யும் மழை நீரை 365 நாட்களுக்காக முறையாக சேமித்து வைக்க வேண்டும். மழை நீரை சேகரிக்க அனைத்து வழிகளையும் பயன்படுத்துவது அவசியமானது.

கிராமபுறங்களில் மட்டுமின்றி நகரம் மற்றும் மாநகரங்களில், மழை நீர் சேகரிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஒவ்வொருவரும் மழை நீரை சேமிக்க வேண்டும். இந்த விஷயத்தில், விழிப்புணர்வு இல்லையென்றால், எதிர்காலத்தில் நமது குழந்தைகள் தண்ணீர் கிடைக்காமல் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். மழை நீரை சேகரிக்க அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். இவ்வாறு அந்த வீடியோவில் சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறியுள்ளார்.

ஜக்கி வாசுதேவ் வெளியிட்ட வீடியோவில், கோவை ஈஷா யோகா மையத்தில் மழை நீர் சேகரிப்பு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ள காட்சிகள் இடம் பெற்றுள்ளன. சத்குரு ஜக்கி வாசுதேவை தொடர்ந்து மேலும் பல பிரபலங்கள் அமைச்சர் வேலுமணியின் மழை நீர் சவால் பிரச்சாரத்துக்கு பெரிதும் ஆதரவு அளித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+