தமிழ்நாட்டின் காஸ்ட்லி மேம்பாலம்.. சைதாப்பேட்டை- தேனாம்பேட்டை இரும்பு பாலம்.. சென்னைக்கே குட்நியூஸ்
சென்னை: சென்னையில் இதயம் போன்ற பகுதியாக அண்ணாசாலை இருக்கிறது. இங்கு கிண்டி தொடங்கி அண்ணா மேம்பாலம் வரை எந்த சிக்னலுக்கும் மேம்பாலம் கிடையாது. அதேபால் அதற்கு அடுத்துமே சென்ட்ரல் வரையிலுமே மேம்பாலங்கள் கிடையாது. இந்த சூழலில் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை இடையே ரூ.621 கோடியில் 3.2 கி.மீ. நீளத்துக்கு நான்கு வழிச்சாலையாக உயர்மட்ட இரும்பு பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த நான்கு வழி இரும்பு மேம்பாலத்தின் ஒரு பகுதி மார்ச் மாதம் பயன்பாட்டுக்கு வரும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்
சென்னை அண்ணாசாலையில் தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை இடையே ரூ.621 கோடியில் 3.2 கி.மீ. நீளத்துக்கு நான்கு வழிச்சாலையாக உயர்மட்ட இரும்பு பாலம் அமைக்கும் பணி நடக்கிறது. சாதாரண மேம்பாலங்கள் கான்கிரீட் தூண்களால் அமைக்கப்படும்.

ஆனால் இங்கு, கான்கிரீட்டுக்கு பதிலாக இரும்பு பயன்படுத்தப்படுகிறது. இந்த மேம்பாலம், கீழே உள்ள மெட்ரோ ரயில் சுரங்கப்பாதைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் வடிவமைக்கப்பட்டு கட்டப்படுகிறது. இது ஒரு ' பொறியியல் அதிசயம்' என கருதப்படுகிறது. தற்போது இதில் ஒரு பகுதி பணி நிறைவடைந்துள்ளது.
மெட்ரோவை பாதிக்காத வகையில் பணிகள்
கான்கிரீட் தூண்கள் அமைப்பதற்கு அதிக இடமும், நேரமும் தேவைப்படும். இரும்புத் தூண்கள் தொழிற்சாலையிலேயே தயார் செய்யப்பட்டு, கட்டுமான இடத்திற்கு கொண்டு வரப்பட்டு விரைவாகப் பொருத்தப்படுகின்றன. இதனால் கட்டுமானப் பணி மிக வேகமாக நடக்கிறது. மேம்பாலத்தின் எடை மற்றும் அதிர்வுகள் கீழே இருக்கும் மெட்ரோ சுரங்கப்பாதையை எவ்விதத்திலும் பாதிக்காத வகையில் கட்டுகிறது. இந்த பாலத்தின் ஒரு பகுதி மார்ச் மாதம் பயன்பாட்டிற்கு வருகிறது.
சைதாப்பேட்டை தேனாம்பேட்டை
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், அண்ணாசாலையில் உள்ள மெட்ரோ சுரங்கப்பாதையின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சிறப்புத் திட்டமிடலுடன் கட்டுமானப் பணிகள் நடக்கிறது. தற்போது நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலில் தேனாம்பேட்டையில் இருந்து சைதாப்பேட்டை செல்ல நீண்ட நேரம் ஆகிறது. இந்தப் பாலம் பயன்பாட்டுக்கு வந்தால், தேனாம்பேட்டை-சைதாப்பேட்டை இடையே பயண நேரம் 10 நிமிடங்களுக்கும் குறைவாக இருக்கும்.
உயர்மட்ட சாலை
மேம்பாலம் திறக்கப்பட்ட பிறகு பயணம் மிக விரைவாக நிறைவடையும். அண்ணா சாலையில் உயர்மட்ட சாலை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடக்கிறது.. எதிர்பார்த்ததைவிட வேகமான முன்னேற்றத்தை காண முடிகிறது. கான்கிரீட் தூண்களுக்கு பதிலாக இரும்புத் தூண்கள் பயன்படுத்தப்படுவதால், தூண்கள் எழுப்பும் பணி விரைவாக முடிந்திருக்கிறது. அடித்தளம் அமைக்கும் பணி 98 சதவீதம் முடிந்துவிட்டது, தற்போது இரும்புத் தூண்கள் மற்றும் உத்திரங்கள் பொருத்தும் பணி வேகமாக நடக்கிறது.
இரும்புப் பாலம்
ஒட்டுமொத்தமாக கடந்த மாத நிலவரப்படி, 50 சதவீதத்துக்கும் அதிகமான பணிகள் முடிந்து, முதல் இரும்புப் பாலம் தூண் வெற்றிகரமாக நிறுவப்பட்டுள்ளது. பாலத்தின் ஒரு பகுதி பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்தப் பணி வருகிற மார்ச் மாதத்துக்குள் முடிந்து பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்படலாம். தமிழ்நாட்டின் மிகவும் விலையுயர்ந்த மேம்பாலத் திட்டங்களில் ஒன்றாக இது இருக்கும்.. ஏனெனில் 3.2 கி.மீ. நீளத்துக்கு ரூ.621 கோடி செலவிடப்படுகிறது. ஒரு கிலோ மீட்டருக்கு 194 கோடி பயன்படுத்தப்படுகிறது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications