Flashback: "சைலன்ட்டான" ஏ.ஆர்.ரகுமான் இத்தனை ரொமாண்டிக்கா? சாயிரா பானு சொன்ன சீக்ரெட்
சென்னை: இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானை விட்டு பிரிவதாக மனைவி சாயிரா பானு அறிவித்த நிலையில் தனது கணவர் எப்படிப்பட்ட ரொமாண்டிக் என்பதை சாயிராவே வெட்கத்துடன் விவரித்த பிளாஷ்பேக் வைரலாகி வருகிறது.
ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர்.ரகுமான். அவர் பார்ப்பதற்கு சாதாரணமாக தெரிந்தாலும் இசை என வந்துவிட்டால் அதிரடி. இவரது லுக்கும் சாப்ட்டாக இருக்கும். பேச்சு அதைவிட மென்மையாக இருக்கும்.

கூச்ச சுபாவம் கொண்டவர். இசையின் மீது அளவு கடந்த காதலால் ஆஸ்கர் விருது பெறும் அளவுக்கு உயர்ந்தார். இசை வெளியீட்டு விழாக்களில் கலந்து கொண்டாலும் அதிகம் பேசாதவர். சாயிராவும் ரகுமானும் அன்னியோன்யமான தம்பதி என அறியப்படுகிறார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் நேற்றைய தினம் மிகவும் அதிர்ச்சிகரமான பதிவை சாயிரா போட்டிருந்தார். அதாவது தான் ஏ.ஆர்.ரகுமானை விட்டு பிரிவதாக அறிவித்திருந்தார். இதன் மூலம் தங்களது 29 ஆண்டு கால வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து ஏ.ஆர்.ரகுமான் தனது பதிவில், 30ஆவது ஆண்டு திருமண நாளை எட்டுவோம் என நம்பிக்கையுடன் இருந்தோம். ஆனால் தற்போது நடந்தவறறை எல்லாம் பார்த்தால் அது நடக்க முடியாத நிகழ்வாகிவிட்டது. நொறுங்கிய எங்களின் இதயத்தின் சுமையை சுமக்க கடவுளின் சிம்மாசனம் கூட நடுங்கலாம்.
பிரிவுக்கான அர்த்தத்தை கண்டறிந்து உடைந்த இதய துண்டுகளை ஒட்ட வைக்க நினைத்த போது அதற்கான பொருத்தமான இடம் கிடைக்கவில்லை. எங்கள் மீது அன்பு காட்டி எங்கள் தனியுரிமையை மதிக்கும் நண்பர்களுக்கு நன்றி என தெரிவித்திருந்தார். இந்த சம்பவத்தால் ரசிகர்கள் கலங்கியுள்ளனர். இருவரும் ஆதர்ஷ தம்பதியாக அறியப்பட்ட நிலையில் இவர்களும் பிரிகிறார்களே என ரசிகர்கள் மனவேதனையில் உள்ளனர்.
இந்த நிலையில் தனது கணவர் குறித்து சாயிரா தெரிவித்த கருத்துகள் தற்போது வைரலாகி வருகிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு பேட்டி வைரலாகி வருகிறது. நடிகை சுஹாசினி தொகுத்து வழங்கிய ஒரு டிவி நிகழ்ச்சியில்தான் இருவரும் கலந்து கொண்டு பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்திருந்தனர்.
சாயிரா கூறுகையில் மற்ற கணவன் மனைவி போல் நாங்கள் இருவரும் பைக்கில் ரவுண்ட் செல்வோம். அவருக்கு பைக் ஓட்டுவது என்றால் அத்தனை பிரியம். விதவிதமான பைக்குகளை ஓட்டி பார்க்க ஆசைப்படுவார். வீட்டிலிருக்கும் பைக்கை எடுத்துக் கொண்டு நள்ளிரவில் நாங்கள் இருவரும் ரவுண்ட் செல்வோம். அதிலும் ரஹ்மான் ஹெல்மெட் கூட அணிய மாட்டார். என்னை அவர் எப்போதும் பைக்கில் அழைத்து செல்வதையே விரும்புகிறேன். அவரும் எனது ஆசையை அவ்வப்போது நிறைவேற்றிவிடுவார் என்றார் சாயிரா. இதை ரகுமானும் வெட்கத்துடன் ஒப்புக் கொண்டார்.












Click it and Unblock the Notifications