விற்பனை பத்திரம்.. பிரம்மாஸ்திரத்தை கையிலெடுத்த தமிழக அரசு.. அதுவும் அடுக்குமாடி குடியிருப்பா? அருமை
சென்னை: கருணாநிதி நூற்றாண்டு விழாவானது, தமிழகமெங்கும் கொண்டாடப்பட்டு வரும்நிலையில், அடுத்த அதிரடியை தமிழக அரசு செயல்படுத்த போகிறது.. என்ன அது?
தமிழக அரசின் சார்பில் ஒரு வருடம் முழுவதும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது... இதற்கென தனி இலட்சினையும் முதல்வர் ஸ்டாலின் அன்று வெளியிட்டிருந்தார்.

இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் பலகோடி ரூபாய் மதிப்புகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.. மாவட்டந்தோறும் இதற்காகவே விழாக்களும் நடந்து கொண்டிருக்கின்றன. அதேபோல, ஒவ்வொரு பகுதியிலும் மருத்துவ முகாம்கள் நடக்கின்றன.. இதனால், ஏராளமான பொதுமக்கள் பலன் பெற்று கொண்டிருக்கிறார்கள்.
உரிமைத்தொகை: இதில் மகளிருக்கான சிறப்புத்திட்டங்களும் பல அறிவிக்கப்பட்டுள்ளன.. குறிப்பாக, பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், பெண் சமுதாய வளர்ச்சிக்காகவும், தமிழக அரசு சிறப்பு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்தவகையில், கலைஞர் உரிமைத்தொகைக்கான வேலைகள் தற்சமயம் மும்முரமாகி கொண்டிருக்கும் நிலையில், கூட்டுறவுத்துறை சார்பாகவும் பெண்களுக்கு நிதியுதவி வழங்க முடிவாகி உள்ளது.
ஆம்.. பெண்களுக்கு சுய தொழில் செய்வதற்காக, குறைந்த வட்டியில் மீண்டும் கடன் வழங்கப்படுகிறது... மாநில தலைமை கூட்டுறவு வங்கி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் இந்த கடன் வழங்கப்பட உள்ளது. இந்த கடன் வசதியை பெற வேண்டுமானால், ஒரு குழுவில், 10 முதல், 20 பேர் வரை உறுப்பினர்களாக இருக்க வேண்டும்.. ஒரு குழுவுக்கு அதிகபட்சம், 20 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது.
கருணாநிதி நூற்றாண்டு விழா: கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சிறப்பு பிரிவின் கீழ், 100 சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்குமாறு, கூட்டுறவு வங்கிகளுக்கு, தமிழக அரசு அதிரடியாக இப்போது உத்தரவிட்டிருக்கிறது.. இது தவிர, முதல் தலைமுறையை சேர்ந்த, 100 தொழில் முனைவோருக்கு கடன் வழங்குமாறும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், இன்னொரு முக்கிய நடவடிக்கையையும் தமிழக அரசு அமல்படுத்த போகிறதாம்.. கருணாநிதி பிறந்த நாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர், 100 பேருக்கு வீடுகள் வழங்க, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் திட்டமிட்டுள்ளதாம்.. அடுத்த மாதத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்த போவதாக தெரிகிறது.
தமிழக அரசு: இதற்கான பூர்வாங்க பணிகளை மேற்கொள்ள வேண்டும் நகர்ப்புற வாழ்விட வாரியத்தை வாரியத்தை தமிழக அரசு அறிவுறுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமல்ல, இதேபோன்று, 100 திட்ட பகுதிகளை புதுப்பிப்பது, 100 அடுக்குமாடி குடியிருப்புகளை தேர்வு செய்து, அங்குள்ள அனைத்து ஒதுக்கீட்டாளருக்கும் விற்பனை பத்திரம் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்படும் என்று உறுதியுடன் சொல்கிறார்கள் வாரிய அதிகாரிகள்.
விற்பனை பத்திரம்: விற்பனை பத்திரம் என்பது, ஒரு சொத்தினை விற்பனை செய்பவர், அதன் உரிமையை வாங்குபவருக்கு மாற்றிக் கொடுக்கும் முக்கியமான சட்ட ஆவணமாகும்... இதன்மூலம் வாங்குபவர் அந்த சொத்தின் முழு உரிமையை பெறுகிறார்.. அந்தவகையில், 100 பேருக்கு வீடுகள் வழங்க உள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளதால், மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர் என பெருத்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications