50+ பெண்களுக்கு பாலியல் கொடுமை! சேலம் மணிகண்டனை லேசில் விடக் கூடாது! மோகன் ஜி ஆதங்கம்
சென்னை: சேலத்தில் பெண்களை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து கைதான மணிகண்டன் வழக்கில் தமிழக அரசு தனி ஆணையம் அமைத்து வழக்கு விசாரணையை உடனடியாக தொடங்க வேண்டும். சிங்க பெண் படை மூலமாக மற்ற பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என இயக்குநர் மோகன் ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது: எல்லாருக்கு வணக்கம் சில நாட்களுக்கு முன்பு சேலம் வீரப்பாண்டியைச் சேர்ந்த மணிகண்டன் என்ற நபர் வந்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

அந்த கேஸ் வந்து இன்னும் பெரிசா தமிழ்நாட்டு மக்களுக்கு போய் சேரவில்லை. அது பெண்களுக்கு எதிராக நடந்த மிகப் பெரிய பாலியல் குற்றச்சாட்டு. தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி வழக்கை விட இது மிகப் பெரிய கொடூரமான குற்றச்சாட்டு! ஆனால் இந்த விஷயம் மக்களுக்கு போய் சேரவில்லை. ஊடகங்களிலும் பெரிய விவாதங்கள் செய்யப்படவில்லை. செய்தி போடுவதுடன் நிறுத்திக் கொண்டனர்.
ஆனால் அந்த சம்பவம் குறித்து நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். அதுகுறித்து ஒரு விழிப்புணர்வு வீடியோவாக போடலாம். இந்த விஷயம் ஏன் அதிகமா விவாதம் செய்யப்படலை என்றால் குற்றம்சாட்டப்பட்ட நபர் ஆளும் கட்சியை சேர்ந்தவர் என சொல்லப்படுகிறார். மேலும் தவெக கட்சி தொடங்குவதற்கு முன்பு அந்த மணிகண்டன் திமுகவில் செயல்பட்டிருக்கிறார் என்கிறார்கள்.
சேலத்தில் பெண்களை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து கைதான மணிகண்டன் வழக்கில் தமிழக அரசு தனி ஆணையம் அமைத்து வழக்கு விசாரணையை உடனடியாக தொடங்க வேண்டும்.. சிங்க பெண் படை மூலமாக மற்ற பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.. pic.twitter.com/aCJl24cmNE
— Mohan G (@mohandreamer) June 14, 2026
எது உண்மை என தெரியவில்லை. எதுவாக இருந்தால் என்ன அவன் ஒரு குற்றவாளி. இதில் என்ன நடந்திருக்கு அப்படின்னா, இந்த நபர் கொஞ்சம் செல்வந்தர். பணம் அதிகமாக வைத்திருக்கிறார். இவர் என்ன செய்கிறார் என்றால் வேலை இல்லாமல் வறுமையில் இருக்கும் பெண்கள், குடும்ப சூழலுக்காக கடன் வாங்கும் குடும்ப தலைவிகள் உள்ளிட்டோர் மணிகண்டன் தான் உதவும் முறையில் பழக்கப்படுத்திக் கொள்கிறார்.
அந்த பெண்களிடம், மணிகண்டன், "எனக்கென யாரும் இல்லை. எங்கிட்ட இவ்ளோ பணம் இருந்து என்ன பிரயோஜனம்?" பேசி தன் மீது பரிதாபத்தை வளர்த்துக் கொள்கிறார். இப்படியே பேசி அந்த பெண்களை தன் வலையில் விழ வைக்கிறார்.
அவர்களுடன் தனிப்பட்ட முறையில் வீடியோ காலில் பேசி அந்த வீடியோ காலை ரெக்கார்ட் செய்து விடுகிறார். அந்த வீடியோவில் அந்த பெண்கள் இவரை நம்பி அந்தரங்களை காட்டியதை மணிகண்டன் ரெக்கார்டு செய்து கொள்கிறார்.
அந்த வீடியோ ரெக்கார்டிங்கை அந்த பெண்களுக்கு போட்டு காட்டி, தனது ஆசைக்கு இணங்காவிட்டால், வீடியோவை இணையத்தில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டுகிறார். இதனால் அஞ்சும் பெண்களை, தன் ஆசைக்கு இணங்க வைத்து, தனது நண்பர்களின் ஆசைக்கும் இணங்க வைக்கிறார்.
இந்த கொடூரம் எப்படி வெளியே வந்தது என்றால், வேறு ஒரு பெண்ணை இது போல் வீடியோ எடுத்து அந்த பெண்ணையும் மிரட்டி துன்புறுத்துகிறார் மணிகண்டன்.
இந்த நிலையில் மணிகண்டன் அசந்த நேரம் பார்த்து அந்த பெண், அவரது செல்போனில் இருந்த வீடியோக்களை தனது போனுக்கு காப்பி செய்து கொண்டார். அந்த நபரை மிரட்ட அந்த பெண் காப்பி செய்தாலும் இதை வெளியே சொன்னால் தனது குடும்பத்தின் பெயர் கெட்டுவிடுமே என்ற பயம் இருந்தது.
ஆனால் அந்த மணிகண்டனோ அந்த பெண்ணை பாடாய்படுத்த, இதற்கு மேலும் தம்மால் பொறுமையாக இருக்க முடியாது என கருதிய அந்த பெண், அந்த வீடியோக்களை போலீஸில் கொடுத்துவிட்டார். ஆனால் அந்த பெண்ணின் புகாருக்கு காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் அந்த பெண் அந்த வீடியோக்களை தனியார் செய்தி சேனலில் கொடுத்தவுடன் அந்த மணிகண்டன் கைது செய்யப்பட்டார். இந்த விஷயம் தேசிய ஊடகங்களிலும் வந்திருக்க வேண்டியது. இந்தியா முழுக்க பேசப்பட்டிருக்க வேண்டியது.
பகாசுரன் படத்திலும் இது போன்ற ஒரு விஷயத்தை சொல்லியிருக்கிறோம். ஆனால் எதுவுமே மாறவில்லை. இந்த வீடியோவை பார்த்தாலாவது சிலருக்கு புரியும் என்பதால் நான் பேசுகிறேன். இந்த சம்பவத்திற்கான அத்தனை ஆதாரங்களும் செய்தி சேனலிடம் பத்திரமாக இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களை மோகன் ஜியின் டிவிட்டர் பக்கத்தில் உள்ள வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications