ஆஹா.. ஒன்னு கூடிட்டாங்களே! சிட்டிங் சீனியர் ராஜேந்திரனுக்கு எதிராக உ.பி.கள்! மாம்பழ நகர் பாலிடிக்ஸ்!
சேலம்: மாம்பழ மாவட்டமான சேலத்தில் தற்போது தேர்தல் சீசன் களை கட்டி உள்ளது. அதிமுகவின் கோட்டையாக இருக்கும் சேலத்தில் வெற்றி பெற்றதால் அமைச்சராகி இருக்கிறார் ராஜேந்திரன். தற்போது சுற்றுலாத்துறை அமைச்சராக இருக்கும் அவர் வரும் வெற்றியை தொடரும் முனைப்பில் இருக்கிறார். இந்த நிலையில் கடந்த காலங்களில் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு எதிராக அரசியல் செய்ய திமுகவின் முக்கிய புள்ளிகளை வளைத்து போட்ட ராஜேந்திரன், தற்போது அவர்களை ஓரம் கட்டி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதை அடுத்து அமைச்சர் ராஜேந்திரனுக்கு எதிராக ஒன்று சேர்ந்திருக்கும் உடன்பிறப்புகள் தலைமைக்கு புகார் பட்டியலை அனுப்ப தயாராகி வருகிறார்களாம்.
சேலம் மாவட்டத்தில் கடந்த 2011 , 2016,2021 என மூன்று சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக சேலம் மாவட்டத்தை தனது கோட்டையாகவே வைத்துள்ளது. இந்த நிலையில் சேலம் வடக்கு தொகுதியில் மட்டுமே கடந்த 2016 மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தலில் தற்போது சுற்றுலாத்துறை அமைச்சராக இருக்கும் ராஜேந்திரன் வெற்றி பெற்று வருகிறார்.
பனமரத்துப்பட்டி சட்டமன்ற தொகுதியில் இருந்து சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு ராஜேந்திரன் மாறியதற்கு முக்கிய காரணம் 'சேலத்து சிங்கம்' என கலைஞர் கருணாநிதியால் அழைக்கப்பட்ட வீரபாண்டி ஆறுமுகத்து எதிராக அரசியல் செய்வதற்காக அப்போதைய இளைஞர் அணி தலைவர் ஸ்டாலினால் உருவாக்கப்பட்டவர் தான் ராஜேந்திரன் என்ற பேச்சும் உண்டு.

ஆனால் ராஜேந்திரனால் வீரபாண்டி ஆறுமுகத்தை எதிர்த்து களம் ஆட முடியாத சூழ்நிலையில் ராஜேந்திரனுக்காக பக்கபலமாக இருந்தவர்கள் தான். கன்னங்குறிச்சி குபேந்திரன், சர்க்கரை சரவணன், செவ்வாய்பேட்டை ஜெயக்குமார், பழைய முதல், குமரவேல், தற்போது அதிமுகவில் இருக்கக்கூடிய மோகன், நடேசன், பத்தாவது வார்டு செயலாளராக இருந்த மோகன், மோகன் என அனைவரும் ராஜேந்திரன் அரசியல் ஈடுபட்டபோது பக்கபலமாக இருந்தவர்கள். ஆனால் தற்போது அவர்களை ஓரம் கட்டுவதற்கு காரணங்களை தேடி வருகிறார் தற்போதைய அமைச்சர் பனைமரத்தப்பட்டி ராஜேந்திரன் என்கின்றனர் சேலம் உடன்பிறப்புகள்.
இந்த நிலையில் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் ராஜேந்திரனின் வெற்றி தொடருமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது. சேலம் வடக்கு தொகுதியை பொறுத்தவரை வன்னியர் மற்றும் ஆதிதிராவிடர்கள் பெரும்பான்மையாகவும், அடுத்தபடியாக இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், அரசு ஊழியர்களின் வாக்குகள் உள்ளது. இந்த நிலையில் ராஜேந்திரன் வெற்றி பெற்ற இரண்டு தேர்தலிலும் வெற்றிக்கு மிக முக்கியமாக காரணமாக இருந்தது சேலம் கன்னங்குறிச்சி பேரூராட்சி. குறிப்பாக அங்கு பேரூராட்சி சேர்மேனாக உள்ள குபேந்திரன் கன்னங்குறிச்சியை திமுகவின் கோட்டையாகவே மாற்றி வைத்துள்ளார்.
மேலும் ராஜேந்திரனுக்கு மிகுந்த தீவிர விசுவாசியாகவும் செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் ராஜேந்திரன் அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு வன்னியர் சமுதாயத்திலேயே அரசு, பந்தல் என இரு பிரிவாக பிரித்து தன்னுடைய சொந்த உட்பிரிவுக்கு அதிக முக்கியத்துவத்தை ராஜேந்திரன் கொடுத்து வருவதாக சொல்கின்றனர். இதனால் மனமுடைந்த கன்னங்குறிச்சி பேரூராட்சி தலைவர் குபேந்திரன் கட்சி நிர்வாகிகளிடம் புலம்பியதை ஆதாரமாக கொண்டு சென்று அமைச்சர் ராஜேந்திரனும் காட்டியதால் இதனால் உச்சபட்ச கோபத்திற்கு சென்ற ராஜேந்திரன் குபேந்திரனை கட்டம் கட்டி வைத்துவிட்டார் என்கின்றனர்.
அதற்கு காரணம் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் ஓமலூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக குபேந்திரன் அறிவிக்க இருந்த நிலையில் அந்த தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால் இவருக்கு சீட்டு வாய்ப்பு மறுக்கப்பட்டது, இந்த நிலையில் தான் குபேந்திரனுக்கு 2026 சட்டமன்றத் தேர்தலில் வாய்ப்பு பெற்று சட்டமன்ற உறுப்பினராக குபேந்திரன் வெற்றி பெற்று விட்டால் நமக்கு போட்டி ஆகிவிடும். மேலும்
தன்னுடைய வளர்ச்சிக்கு ஆபத்து என கருதிய ராஜேந்திரன் அவரை முதற்கட்டமாக ஓரம் கட்டி தனக்கு அமைச்சர் பதவி கிடைப்பதற்கு காரணமாக இருந்த அமைச்சர் எ.வ வேலுவிடம் தெரிவித்து அவரை ஆறு மாதத்திற்கு கட்சியிலிருந்தும் நீக்கவும் வைத்து விட்டார் என புகார் கடிதம் வாசிக்கின்றனர்.
கட்சியிலிருந்து நீக்கியது எதற்காக என விசாரித்ததில் தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்ப மனு கூட பெற்று அது தலைமைக்கு சென்று விடக்கூடாது என கச்சிதமா காய் நகர்த்தி அந்த வேலையை முடிச்சிட்டார் என்றும் சொல்கின்றனர். அதுமட்டுமல்லாமல் கட்சியில் நன்றாக விவரம் அறிந்தவர்களையும் கட்சி தலைமையிடம் நெருங்க விடாமல் பார்த்துக் கொள்கிறார் என்கின்றனர்.
குறிப்பாக சூரமங்கலம் மண்டலம் திமுகவின் சீனியரும் மாநகராட்சி 26 வது வார்டு கவுன்சிலருமான கலையமுதன், மற்றொரு திமுக 18 வது வார்டு கவுன்சிலரான சர்க்கரை சரவணன், 3 வது வார்டு கவுன்சிலர் குமரவேல் ,கொண்டலாம்பட்டி மண்டலம் செவ்வாப்பேட்டை சேர்ந்த மாநகராட்சி 28 வது வார்டு கவுன்சிலர் ஜெயக்குமார், மற்றும் அம்மாபேட்டை மண்டலம் 43 வது வார்டு கவுன்சிலர் வழக்கறிஞர் குணசேகரன், அஸ்தம்பட்டி மண்டலம் 16 வது வார்டு கவுன்சிலர் வசந்தா மயில்வேல் என அரசியலில் நல்ல விவரம் தெரிந்த அனைவரையும் ஓரம் கட்டி வைத்து விட்டார்.

அமைச்சரின் இந்தப் பட்டியலில் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரனையும் சேர்த்துள்ளாராம் அதுக்கு காரணம் விசாரித்ததில் அமைச்சருக்கு எதிராக பார்க்கப்படும் திமுகவின் சீனியர் கலைஅமுதனிடம் மேயர் நெருக்கம் காட்டியதுதானாம். அது மட்டுமல்லாமல் மற்றொரு கவுன்சிலருமான அம்மாபேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட 9 வது வார்டு கவுன்சிலர் தெய்வலிங்கம் இந்தப் பட்டியலில் சேர்ந்து இருக்கிறாராம். சேலம் மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட சேலம் மேற்கு, சேலம் தெற்கு, சேலம் வடக்கு, என மூன்று சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள சீனியர்களும் மற்றும் தற்போது பதவியில் உள்ள மாநகராட்சி கவுன்சிலர்களும் அமைச்சர் மீது கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர் என்கின்றனர் நம்மிடம்பேசிய உடன்பிறப்புகள்.
தன்னுடைய வளர்ச்சிக்கு பாதிப்பாக இருப்பவர்களை ஓரம் கட்டிட்டா கட்சியிலிருந்து விலகிப் போய்விடுவார்கள் என்று கணக்கு போட்டு காய் நகர்த்திய அமைச்சருக்கு பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அமைச்சரால் ஓரங்கட்டப்பட்ட கன்னங்குறிச்சி பேரூராட்சி தலைவர் குபேந்திரன், மாநகராட்சி கவுன்சிலர்கள் கலையமுதன், சர்க்கரை சரவணன், ஜெயக்குமார், குமரவேல், வசந்தா மயில்வேல், என அனைவரும் அதிமுக கட்சிக்கு போக போறாங்கன்னு தனக்கு விசுவாசிகள் மூலம் செய்தி பரப்பி விட்டிருக்கிறார்கள்.
ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாத அவர்கள் தங்களைப் போலவே அமைச்சரால் ஓரம் கட்டப்பட்டு இருக்கிற அனைவரும் ஒன்று ஒன்று சேர்த்து செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. திமுகவின் மூத்த நிர்வாகியும் சேலம் நகராட்சியின் கடைசி நகர மன்ற தலைவரும், சேலம் மாநகராட்சியின் முதல் மேயருமான சூடாமணியின் பிறந்தநாளை கேக் வெட்டி மரியாதை செலுத்தி அமைச்சரின் காதில் புகையை வர வைத்துள்ளார்களாம். அடுத்தபடியா அமைச்சர் ராஜேந்திரனின் அதீத தலையிட்டால் கட்சி வேலை செய்ய முடியாமல் ஒதுங்கியிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபனை சந்தித்து அனைவரும் சேர்ந்து கட்சிப் பணிகளில் ஈடுபடலாம் என பார்த்திபனின் பிறந்தநாள் விழாவில் சபதமும் எடுத்துள்ளனர்..

இந்த நிலையில் நேற்றைய தினம் தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு இரண்டு தினங்களுக்கு முன்பு சேலம் பிரசித்தி பெற்ற வெண்ணங்குடி முனியப்பன் கோவிலில் தமிழக முதலமைச்சராக மீண்டும் ஸ்டாலின் வர வேண்டுமென 20 ஆடுகள் பலியிட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகளுக்கு பிரம்மாண்ட விருந்து வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஸ்டாலினின் பிறந்த நாளுக்காக பிரம்மாண்ட கேக்கினை மூத்த நிர்வாகிகள் மூலம் வெட்டி கொண்டாட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் தான் கட்சியின் வளர்ச்சியை பற்றி சிந்திக்காமல் தன்னுடைய வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் கட்சியினரை அமைச்சர் ராஜேந்திரன் ஓரம் கட்டினாலும் திமுக வெற்றி பெற வேண்டுமென ஓரம் கட்டப்பட்ட நிர்வாகிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து திமுக தலைமை சந்தித்து முறையிட உள்ளார்களாம். சந்திப்புக்கான தேதி இவர்கள் கேட்கப்பட்டிருப்பதை அறிந்த அமைச்சர் ராஜேந்திரன் அதற்கு எவ்வாறு முட்டுக்கட்டை போடலாம் என யோசித்து வருகிறாராம்.
-
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
90 சீட் + முதல்வர் பதவி.. தவெக உடன் பேரமா? ஆதவ் அர்ஜுனா யாருனே தெரியாது.. நயினார் நாகேந்திரன் -
’அம்மா’ இல்லாத பிள்ளையான அதிமுக..எடப்பாடியை அசிங்கப்படுத்திய அமித் ஷா! மனதுக்குள் குமுறும் ர.ர.க்கள் -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
கோமா நிலையில் தவெக.. வசமாக சிக்கிக் கொண்ட விஜய்.. சொல்லி கொடுத்து ஆடுவதால் வந்த வினை! -
கால் வைக்கிற இடமெல்லாம் கன்னி வெடி.. ரஜினியை வைத்து விஜய்யை மொத்தமாக முடித்துவிட்ட ஆதவ் அர்ஜுனா -
உங்க விஜய் நான் வர்றேன்.. தனித்தே களமிறங்கும் தவெக! எந்த தொகுதியில் யார் யார் போட்டி? லீக்கான தகவல்! -
Election Exclusive: விஜய் தனியா நிக்குறாரு..ஏன்? ஏன்னா யாருமே வரலை! பனையூரைச் சுற்றி மர்ம சுவர்! தலைகளின் தகிடு தத்தோம்! -
வதந்திகளை நம்பாதீங்க.. மதசார்பில் உறுதி! இப்தார் விழாவில் பாஜக கூட்டணிக்கு ரெட் சிக்னல் போட்ட விஜய் -
சசிகலா ஆவடி ஆட்டம் ஆரம்பம்.. சின்னம்மா மெகா ஸ்கெட்ச்! தென்மாவட்டம் இருக்க, சென்னை ஏன்? யாருக்கு செக் -
90 சீட் பேரம்? ஆதவ் அர்ஜுனா அப்படி சொன்னாரே.. இல்லவே இல்லை என திட்டவட்டமாக மறுத்த விஜய்! -
இருந்தாலும் அவருக்கு இவ்வளவு ஆகாது! கூட்டணிக்கு வருமா? வராதா? பாஜகவுக்கு பிரஷர் ஏற்றும் புதியதமிழகம்












Click it and Unblock the Notifications