நான் சாமி கும்பிடுபவன்.. எனது தலைவர் பெரியார்! சேலம் RR பிரியாணி தமிழ்ச்செல்வன் வைத்த ட்விஸ்ட்!
சென்னை: ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தாலும் தாம் படித்த தலைவர் பெரியார் என்று சொல்லியிருக்கிறார் சேலம் ஆர்.ஆர்.பிரியாணி உணவகம் உரிமையாளர் தமிழ்ச்செல்வன்.
அடையார் ஆனந்தபவன் உரிமையாளர் பெரியார் குறித்து புகழ்ந்து பேசிவிட்டார் என்பதற்காக அடையார் ஆனந்தபவன் ஏஏ2பியை புறக்கணிக்க வேண்டும் என்கிற அளவுக்கு ஒரு கும்பல் பரப்புரையை தொடங்கியது. இந்நிலையில் மற்றொரு பிரபல அசைவ உணவக உரிமையாளரும் பெரியார் பற்றி பேசி பரபரப்பை கிளப்பியிருக்கிறார்.

பெரியாரிய உணர்வாளன்: சிறு வயதிலேயே தாம் பெரியாரிய உணர்வாளன் என்றும் விதவைக்கு மறுமணம் உள்ளிட்ட எண்ணற்ற சீர்திருத்த சிந்தனைகளை விதைத்தவர் பெரியார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தனக்கு கடவுளும் பிடிக்கும், பெரியாரும் பிடிக்கும் என ட்விஸ்ட் வைத்தார். இந்து மதத்தில் பிறந்ததால் பக்தியையும் தாம் விட்டுக்கொடுக்க மாட்டேன் என்றும் மனிதனை மனிதனாக மதிக்க வேண்டும், எல்லோரையும் சமமாக நடத்த வேண்டும் என்று தான் பெரியார் கூறினாரே தவிர அவருக்கு கடவுள் மீது எந்த கோபமும் கிடையாது எனச் சொல்லியுள்ளார்.ந்தமிழ்
தமிழ் கடவுள் முருகன்: மனிதனுக்கு பகுத்தறிவு முக்கியம் என்றும் அடையார் ஆனந்தபவன் உரிமையாளர் கூறிய கருத்தை ஆதரிக்கிறேன் எனவும் சேலம் ஆர்.ஆர்.பிரியாணி தமிழ்ச்செல்வன் அதிரடி காட்டியுள்ளார். பெரியாரை பிடிக்காது என்று கூறும் பாஜக பெரியார் படத்தை பயன்படுத்தும் திமுகவோடும், அதிமுகவோடும் ஏன் கூட்டணி வைக்க வேண்டும், வேண்டாம் என்று சொல்லியிருக்கலாமே என்றார். இன்று அடையார் ஆனந்தபவனை விமர்சிப்பவர்கள் எத்தனையோ பேர் அங்கு இலவசமாக வாங்கியிருப்பார்கள், சாப்பிட்டிருப்பார்கள், என ஏ 2 பியை விட்டுக் கொடுக்காமல் பேசியிருக்கிறார் தமிழ்ச்செல்வன்.
பக்தியில் ஈடுபாடு: சுயமரியாதை, தன்மானம், தன்னம்பிக்கை போன்றவைகள் தான் பெரியாரிடம் தனக்கு பிடித்த கொள்கைகள் என்று கூறிய தமிழ்ச்செல்வன் அதற்காக தன்னை பெரியாரின் வெறியர் என்று எண்ண வேண்டாம் என்றார். தமிழ்க்கடவுள் முருகன் மீது அளவுகடந்த பக்தி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications