கூட்டுறவு வங்கியில் விண்ணப்பித்த அன்றே பயிர்க் கடன்: விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் வரை பயிர்க்கடன்!
சென்னை: தமிழகத்தில் உள்ள விவசாயிகளுக்கு நல்ல செய்தியாக, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், பயிர் கடனுக்கு விண்ணப்பித்த அன்றே கடன் வழங்கும் புதிய திட்டம் மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. முதலில் தர்மபுரியில் மட்டும் அறிவிக்கப்பட்ட இந்த திட்டம், தற்போது மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் 4,473 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு 7 சதவீத வட்டியில் பயிர் கடன் வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட காலத்திற்குள் கடனை திருப்பிச் செலுத்தினால், வட்டி முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.

பயிர் கடன் விவசாயிகளுக்கு
பயிர் கடனுக்கு விண்ணப்பித்தால், சங்க அதிகாரிகள், அதை பரிசீலித்து கடன் வழங்க, இரு வாரங்களுக்கு மேல் தாமதம் செய்கின்றனர். இதனால், குறித்த காலத்தில் கடன் கிடைக்காமல், விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். பயிர் கடனுக்கு விண்ணப்பித்தால், அதை பரிசீலித்து கடன் வழங்க 15 நாட்களுக்கும் மேல் காலதாமதம் ஏற்பட்டது.
இதனால் விதைப்பு மற்றும் சாகுபடி காலத்தில் பணம் கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். இந்த சிக்கலை தீர்க்க, விண்ணப்பித்த அதே நாளிலேயே பயிர் கடன் வழங்க முடிவு செய்யப்பட்டது.
இந்த திட்டத்தை 2025 ஆகஸ்ட் மாதம் தர்மபுரி மாவட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஆரம்பத்தில் சில மாவட்டங்களில் மட்டுமே செயல்பட்ட இந்த திட்டம், தற்போது அனைத்து மாவட்டங்களிலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
குட் நியூஸ் தமிழக அரசு
இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகள் ரூ.5 லட்சம் வரை பயிர் கடன் பெறலாம். இ-சேவை மையங்கள் அல்லது ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்கும் போது உறுப்பினர் எண், ஆதார் எண், வங்கி கணக்கு விவரங்கள், நிலத்தின் பட்டா, சிட்டா போன்ற ஆவணங்கள் தேவை. குத்தகை நிலமாக இருந்தால் அதற்கான ஒப்பந்தமும் அவசியம்.
விண்ணப்பம் செய்ததும், சங்க அதிகாரிகள் தமிழ் நிலம் இணையதளம் மூலம் நில விவரங்களையும், டி.என்.கிரெயின்ஸ் தளத்தில் பயிர் தகவல்களையும் சரிபார்ப்பார்கள்.
கூட்டுறவு சங்க செயலரால் ஒப்புதல் அளிக்கப்பட்ட விண்ணப்பம், மாவட்ட மத்திய வங்கியின் பிராஞ்சு மேனேஜரின் சரிபார்ப்புக்கு அரை மணி நேரத்திற்குள் செல்லும். மத்திய வங்கியில் ஒப்புதல் அளிக்கப்பட்ட சில மணி நேரங்களில், விண்ணப்பதாரரின் வங்கி கணக்கில் கடன் தொகை செலுத்தப்படும்.
சம்பந்தப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத்தின் செயலாளர், மத்திய கூட்டுறவு வங்கியின் கள மேலாளர் மற்றும் கிளை மேலாளர் தங்கள் கணினி வழியே விவசாயிகள் குறித்த விவரங்களை சரிபார்த்து கடன் தொகையை அன்றைய தினமே விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைப்பார்கள்..
விண்ணப்பித்த அன்றே பயிர்க்கடன்
இந்த திட்டத்தின் மூலம் தேவையற்ற அலைச்சல் மற்றும் காலதாமதம் குறைந்துள்ளது. ஒரே நாளில் பணம் கிடைப்பதால், விதைப்பு பணிகள் நேரத்தில் நடக்கின்றன. இதனால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி, நிம்மதி மற்றும் நம்பிக்கையுடன் இந்த திட்டத்தை வரவேற்றபடி உள்ளனர்..
நம்முடைய அரசு எடுத்த இந்த முயற்சி விவசாய வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை உருவாக்கும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். ஒப்புதல் அளிக்கப்பட்ட சில மணி நேரங்களில் விவசாயியின் வங்கி கணக்கில் கடன் தொகை வரவு வைக்கப்படுவதால், விவசாயிகள் இதனை வரவேற்று பாராட்டுகின்றனர். தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்தபடி உள்ளனர்...!!
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications