மாதம் ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை.. இரவோடு இரவாக வந்த செய்தி! சாம்சங் ஊழியர்களில் ஒரு பிரிவினர் உடன்பாடு!
சென்னை: சாம்சங் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் ஒரு தரப்பினருடன் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. சிறப்பு ஊக்கத்தொகையாக மாதம் ஒன்றுக்கு ரூ.5,000 வழங்கவும், ஊதிய உயர்வு கொடுக்கவும் சாம்சங் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. அதேசமயம், சி.ஐ.டி.யு தரப்பு, நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என்றும் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் எனத் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 25 நாட்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்ததால் போராட்டம் தொடர்ந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி தமிழக அரசு தலையிட்டது.

அமைச்சர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை: நேற்று இரவு தலைமைச் செயலகத்தில், அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், டிஆர்பி ராஜா, சி.வெ.கணேசன் ஆகியோர் அடங்கிய குழு மற்றும் சாம்சங் நிறுவனத்தின் பிரதிநிதிகள், போராட்டக் குழுவின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் ஊழியர்களில் ஒரு தரப்புக்கும், சாம்சங் நிர்வாகத்தினருக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
சிறப்பு ஊக்கத்தொகை வழங்க சாம்சங் ஒப்புதல்: அதன்படி, சாம்சங் நிறுவனம், பணியாளர் குழுவுடன் கலந்தாலோசித்து, ஊதியத்தினை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை செயல்படுத்தும். ஒரு இடைக்கால சிறப்பு ஊக்கத்தொகையாக மாதம் ஒன்றுக்கு ரூ.5,000 வழங்கப்படும். இது அக்டோபர் 2024 முதல் மார்ச் 2025 வரை நடைமுறையில் இருக்கும். இந்த சிறப்பு ஊக்கத்தொகை 2025-26 நிதியாண்டுக்கான வருடாந்திர ஊதிய உயர்வுடன் சேர்த்து கணக்கிடப்படும்.
ஏ.சி பேருந்துகள்: தற்போது உள்ள 5 வழித்தடங்களில் இருந்து ஏ.சி பேருந்துகளின் இயக்கம் அடுத்த ஆண்டுக்குள் 108 வழித்தடங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். தொழிலாளர்களின் குடும்ப நிகழ்ச்சிகள் வருடத்திற்கு 4 எண்ணிக்கையிலிருந்து 6ஆக உயர்த்தப்படும். ஒவ்வொரு நிகழ்விலும் பங்கேற்கும் குடும்பத்திற்கு சுமார் 2,000 ரூபாய் மதிப்புள்ள பரிசு வழங்கப்படும், பணியில் இருக்கும் தொழிலாளர் மரணமடைந்தால் அவர்களின் குடும்பத்தினரின் உடனடித் தேவைக்காக, ரூபாய் ஒரு லட்சம் கூடுதல் உதவித் தொகையாக வழங்கப்படும். தொழிலாளரின் குழந்தை பிறப்பிற்கு ரூ.2000 பரிசாக வழங்கப்படும்.
உடன்பாடு எட்டப்படவில்லை.. சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் போராட்டம் தொடர்கிறது: சிஐடியூ
உணவுப் படி உயர்த்தப்படும்: தொழிற்சாலையில் உள்ள தொழிலாளர்களின் ஓய்வறைகள் மேம்படுத்தப்படும். தொழிற்சாலை கட்டிடங்களுக்கு இடையில் செல்லும் பாதைக்கு கூரை அமைத்துத் தரப்படும். கம்பரஸர் கட்டிடத்தில் ஒரு புதிய மருத்துவ அறை நிறுவப்படும். நிறுவனத்தின் கேண்டீனில் வழங்கப்படும் உணவு வகைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். மேலும், உணவுப்படி உயர்த்தி வழங்கப்படும் ஆகிய உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. ஊழியர்களின் ஒரு தரப்பினர் மற்றும் சாம்சங் நிறுவனம் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
சி.ஐ.டி.யு உடன்படவில்லை: அதேசமயம், சாம்சங் இந்தியா சிஐடியூ தலைவர் முத்துக்குமார் சாம்சங் நிறுவன தொழிலாளர்களின் போராட்டம் தொடர்கிறது என்றும் அமைச்சர்கள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை என்றும் தெரிவித்துள்ளார். ஆக, சாம்சங் ஊழியர்களில் ஒரு தரப்பினர், சுமுக உடன்பாடுக்கு ஒப்புக்கொண்டுள்ள நிலையில், சிஐடியு, போராட்டத்தை தொடர்ந்து வருகிறது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications