பிக்பாஸ் தர்ஷன் மீது சனம் புகார் - விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய ஹைகோர்ட் உத்தரவு
பிக்பாஸ் போட்டியாளர் தர்ஷன் மீது மற்றொரு போட்டியாளர் சனம் பிரசாத் அளித்த புகாரில் பதிவான வழக்கின் நிலைகுறித்த அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: பிக்பாஸ் தர்சன் மீது சனம் பிரசாத்தின் அளித்துள்ள புகாரின் பதிவான வழக்கு குறித்து மூன்று வாரத்திற்குள் பதில் அளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, அடையார் மகளிர் காவல் நிலையத்தில் தர்சன் மீது பதிவான வழக்கின் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.
பிக்பாஸ் போட்டியாளர் தர்ஷன் மீது மற்றொரு போட்டியாளர் சனம் பிரசாத் அளித்த புகாரில் பதிவான வழக்கின் நிலைகுறித்த அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிக்பாஸ் 3வது சீசனில் பங்கேற்று பிரபலமடைந்த தர்ஷன், தன்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறியதை நம்பி அவருடன் நெருக்கமாக பழகியதாகவும், அவருடைய முன்னேற்றத்திற்காக பல லட்சம் செலவு செய்த நிலையில், பிரபலம் அடைந்தவுடன், திருமணம் செய்ய மறுப்பதோடு, சமூக வலைத்தளங்களில் தன்னைப் பற்றி தரக்குறைவாக விமர்சனம் செய்து தன்னையும் தன் குடும்பத்தையும் இழிவு படுத்தியதாகவும் 4வது சீசனின் போட்டியாளர் சனம் பிரசாத் குற்றம் சாட்டியிருந்தார்.
இதுதொடர்பாக அடையார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் வழக்கு பதிவுசெய்த நிலையில், அந்த புகாரில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் சனம் பிரசாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், புகாரை பெற்று வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், இன்னும் விசாரணை அளவிலேயே உள்ளதாகவும், தனக்கு கொலை மிரட்டல் விடுப்பது மற்றும் சமூக வலைதளங்களில் இழிவுபடுத்துவது தொடர்பாகவும் உரிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரிக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டுமென கோரியுள்ளார்.
இந்த மனு இன்று நீதிபதி ரவீந்திரன் முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், சனம் பிரசாத்தின் வழக்கு குறித்து மூன்று வாரத்திற்குள் பதில் அளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, அடையார் மகளிர் காவல் நிலையத்தில் தர்சன் மீது பதிவான வழக்கின் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.
-
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications