சனாதன தர்மத்தில் அருவருக்கத்தக்க கருத்துகள்- விமர்சிக்க உரிமை இருக்கு.. ஆ.ராசா தரப்பு அதிரடி வாதம்!
சென்னை: சனாதன தர்மத்தில் உள்ள சமூக நீதிக்கு எதிரான, அருவருக்கத்தக்க கருத்துகளை விமர்சிக்க எம்.பி. என்ற அடிப்படையில் தமக்கு உரிமை உள்ளது என திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
சனாதன தர்மத்தை ஒழிப்போம் என பேசியதற்காக தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக எம்.பி. ஆ.ராசா, சனாதன தர்ம ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் சேகர் பாபு ஆகியோருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் கோ வாரண்டோ வழக்கு தொடரப்பட்டது. அரசு பொறுப்புகளில் இருப்பவர்ர்கள் முறைகேடாக சலுகைகளை அனுபவிப்பதற்கு எதிரானது கோ வாரண்டோ வழக்கு.

உதயநிதி தரப்பு வாதம்: இந்த வழக்கு விசாரணை நீதிபதி அனிதா சுமந்த் முன்பு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அமைச்சர்கள் உதயநிதி, சேகர் பாபு தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி வாதிடுகையில், அமைச்சர் பதவி பிரமாண உறுதிமொழியை மீறி விட்டனர் என்று கூறி உயர்நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க முடியாது. ஒருவரை அமைச்சராக நியமிப்பதும், நீக்குவதும் முதலமைச்சரின் அதிகாரத்துக்கு உட்பட்டது. அமைச்சர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசினாலும், அதை எதிர்த்து தனி நபர்கள் வழக்கு தொடர முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அரசியல் அமைப்புச் சட்டப்பிரிவு 25, மத நம்பிக்கையை மட்டும் பாதுகாக்கவில்லை, நாத்திக கொள்கைகளையும் பாதுகாக்கிறது. ஏன் நாத்திகத்தை ஏற்கிறோம் என்பது குறித்து கருத்து தெரிவிக்கவும் உரிமை வழங்குகிறது என்றார்.
சேகர்பாபு தரப்பு வாதம்: அமைச்சர் சேகர்பாபு தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜோதி வாதிடுகையில், இந்து மதத்தை சேர்ந்தவர்கள் என கூறி கொண்டு, கோவில் நிலத்தை ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததால், உள்நோக்கத்துடன் சேகர்பாபுவுக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. சனாதனம் என்பதும், இந்து மதம் என்பதும் எனக் கூறுவதை முற்றிலும் மறுக்கிறேன். சாதிய பாகுபாட்டையும், தீண்டாமையையும் ஊக்குவிக்கும் சனாதன தர்மத்தை ஏற்கச் செய்யும் வகையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சனாதன தர்மத்தை ஏற்றுக் கொள்வது, அரசியல் சாசனத்தை மதிக்காமல் இருக்கச் செய்வதைப் போன்றது. மனு ஸ்மிருதிக்கு எதிராக பேசுவது எப்படி நாட்டின் இறையாண்மைக்கு எதிரானதாக அமையும்? சதுர்மறை ஆகம சாத்திரமெல்லாம் சந்தைப் படிப்பு, நம் சொந்த படிப்போ என கேள்வி எழுப்பிய வள்ளலாரும் ஒரு இந்து தான். நிர்வாகம் என்பது மதச்சார்பற்றது; நிர்வாகமும், மதமும் வெவ்வேறானவை என தெரிவித்தார்.
ஆ.ராசா தரப்பு வாதம்: இதனைத் தொடர்ந்து இன்று ஆ.ராசா எம்.பி. தரப்பில் மூத்த வழக்கறிஞர் விடுதலை ஆஜராகி தமது கருத்துகளை முன்வைத்தார். அப்போது, சனாதன தர்மத்தில் சமூக நீதிக்கு எதிரான கருத்துகள் உள்ளன. அருவருக்கத்தக்க அம்சங்கள் உள்ளன. இதனை பொதுவெளியில் விமர்சித்து பேச ஒரு எம்.பி. என்ற அடிப்படையில் உரிமை இருக்கிறது. வரையறுக்கப்படாத காரணங்களை முன்வைத்து ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக கோ வாரண்டோ உத்தரவு பிறப்பிக்க கோருவது என்பது அரசியல் சாசனத்தின் அடிப்படை தன்மைக்கே எதிரானது. ஆகையால் இந்த மனுவை ஏற்க கூடாது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications