பரணியின் கைவண்ணம்! திருமழிசை டூ முர்மு அலுவலகம் செல்லும் சந்தன மரத்திலான தவழும் பாலவிநாயகர் சிலை!
சென்னை: சந்தன மரத்தில் 30 செமீ உயரத்தில் தவழும் எழில் கொஞ்சும் அற்புதமான பாலவிநாயகர் சிலையை திருமழிசையைச் சேர்ந்த சிற்பி டி.கே. பரணி வடிவமைத்துள்ளார். இவர் இந்த சிற்பத்தை 3 மாதங்களில் உருவாக்கியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் திருமழியைச் சேர்ந்த டி.கே.பரணி, சந்தன மரத்தாலான நுண்ணிய சிற்பத்தை உருவாக்கியதற்காக குடியரசுத் தலைவரின் தேசிய விருதைப் பெற்றவர். அதுமட்டுமல்லாமல் மாநில அரசின் விருதுகள், விக்டோரியா டெக்னிக்கல் இன்ஸ்டிடியூட்டின் விருதுகள், கிராப்ட்ஸ் எம்போரியத்தின் விருதுகளைப் பெற்றுள்ளார்.

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்காக இந்த தவழும் பாலவிநாயகர் சிலையை உருவாக்கியுள்ளார் டிகே. பரணி. 30 சென்டிமீட்டர் உயரம், 23 செமீ அகலம், 8 செமீ குறுக்களவு கொண்டதாக மிகவும் அழகுற இந்த நுண்ணிய சந்தனச் சிலை உருவாகியுள்ளது.
முழுக்க முழுக்க இவரது கற்பனையில் இந்த சிலை மிகவும் அழகான முறையில் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்டுள்ளது.
விநாயகருக்கு மூஷிக வாகனம் குடைபிடிப்பது போலவும், மற்றொரு மூஷிக வாகனம் வெண் சாமரம் வீசுவது போன்றும், விநாயகருக்கு கிளி பழத்தை அளிப்பது போலவும், கீழே பால விநாயககர் தவழ்வது போலவும் இந்த அற்புதச் சிலை உருவாகியுள்ளது.
டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறவுள்ள கண்காட்சியில் இந்த சிலை வைக்கப்படவுள்ளது. 3 மாதங்களில் இந்த சந்தன மர நுண்ணிய சிலையை டி.கே. பரணி உருவாக்கியுள்ளார். டி.கே. பரணி நுண்ணிய மரச் சிற்பங்களுக்கான தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.
இவர் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி விதவிதமான அதே நேரத்தில் வித்தியாசமான விநாயகர் சிலைகளை செய்வதில் வல்லவர். இவர் செய்யும் சிலைகள் அனைத்தும் சந்தன மரக்கட்டைகளால் ஆனது.
இவர் தனது தாத்தா காலம் முதல் இந்த சந்தன மர நுண்சிற்பக் கலையை செய்து வருகிறார். வழிவழியாக செய்து வரும் நிலையில் தற்போது அவரது மகனும் மகளும் இந்த கலையைச் செய்து வருகின்றனர். இவரது சிற்பங்கள் டெல்லியில் உள்ள தாஜ் கசானா என்ற கடையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இவரது தயாரிப்பில் உருவான ராதே கிருஷ்ணா சிலைதான் அமெரிக்க அதிபராக இருந்த பராக் ஒபாமா இந்தியா வந்த போது அவருக்கு பரிசாக அளிக்கப்பட்டது.
-
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications