சென்னை ரிப்பன் மாளிகை முன்பு தூய்மை பணியாளர்கள் மீண்டும் போராட்டம்.. உடனே கைது செய்த போலீசார்!
சென்னை: சென்னையில் 5 மற்றும் 6-வது மண்டலத்தில் தூய்மை பணிகளை தனியாருக்கு கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த முயன்ற தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரும் வாகனத்தில் ஏற்றப்பட்டு அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ராயபுரம், திரு.வி.க நகர் ஆகிய மண்டலங்களின் தூய்மைப் பணி தனியாருக்கு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து கடந்த ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி 200-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த துய்மை பணியாளர்கள் கடந்த ஆகஸ்ட் 13 ஆம் தேதி நள்ளிரவில் போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். நீதிமன்றம் அவர்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் அடையாறு, கிண்டி, சைதாபேட்டை, வேளச்சேரியில் உள்ள சமூக நல கூடங்களில் அடைத்து வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். தூய்மை பணியார்கள் கைதுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து இருந்தனர் எனது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், சென்னையில் 5 மற்றும் 6-வது மண்டலத்தில் தூய்மை பணிகளை தனியாருக்கு கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த முயன்ற தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரும் வாகனத்தில் ஏற்றப்பட்டு அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ரிப்பன் மாளிகை முன் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்த உள்ளதாக தகவல் கிடைத்ததை அடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். "கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட விஜய் பிரச்சாரத்தின்போது பாதுகாப்பு கொடுக்க போகாத போலீஸ், இங்கே ஏன் வர்றீங்க?" என தூய்மைப் பணியாளர்கள் ஆவேசமாகக் கேள்வி எழுப்பினர்.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது!












Click it and Unblock the Notifications