தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்க தடையில்லை.. ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மாநகராட்சியின் 2 மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கும் தீர்மானத்தை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தூய்மைப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்ற நிலை எழவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில், 5, 6 ஆகிய இரண்டு மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதற்கு மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தீர்மானத்தை ரத்து செய்யக் கோரியும் உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

sanitation-workers-case-judgement-high-court-refuses-to-quash-decision-to-privatize-sanitation-work

இந்த வழக்கை, நீதிபதி கே.சுரேந்தர் விசாரித்தார். விசாரணையின்போது, மனுதாரர் சங்கம் தரப்பில், தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பணி நிரந்தரம் வழங்கக் கோரிய வழக்கு தொழிலாளர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளபோது, தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்க முடியாது. அதற்கு தொழிலாளர் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற வேண்டும் என்று வாதிடப்பட்டது.

மாநகராட்சியின் இந்த நடவடிக்கையால் 2000 தூய்மைப் பணியாளர்களின் வேலை பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. 15 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றியவர்களை குப்பைகளைப் போல தூக்கி எறியக்கூடாது என வாதிடப்பட்டது. அதேசமயம், மாநகராட்சி தரப்பில், பணியாளர்களை வீசி எறியப் போவதில்லை. அவர்கள் வேலையை விட்டு வெளியேற்றப்பட மாட்டார்கள் என வாதம் முன்வைக்கப்பட்டது.

ஒப்பந்ததாரர் மூலம் பணி வழங்கப்படும். சென்னை மாநகராட்சியில் மொத்தமுள்ள 15 மண்டலங்களில் 11 மண்டலங்களில் தூய்மைப் பணி ஏற்கனவே தனியாருக்கு ஒப்படைக்கப்பட்டு விட்டன. தற்போது ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 2 ஆயிரம் தூய்மைப் பணியாளர்களுக்கும், ஒப்பந்த நிறுவனம், அதிக ஊதியத்துடன், வருங்கால வைப்பு நிதி, காப்பீடு உள்ளிட்ட சலுகைகளுடன் வேலை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

ஒப்பந்த நிறுவனம் தரப்பில், தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவது என்பது அரசின் கொள்கை முடிவு. அந்த கொள்கை முடிவில் விதிமீறல் இருந்தால் மட்டுமே நீதிமன்றம் தலையிட முடியும். இதுவரைக்கும் 341 பணியாளர்கள் வேலைக்குச் சேர்ந்துள்ளனர். அவர்களுக்குப் பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன. 1900 பணியாளர்கள் தேவை எனும் நிலையில், அவர்கள் பணிக்கு சேருவதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கத் தயார் என்ற உத்தரவாதம் நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இன்று நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையில், மாநகராட்சி தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது. தூய்மைப் பணியாளர்களைப் பொறுத்தவரை பணிநீக்கம் செய்யப்பட மாட்டார்கள். அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவிதற்கான நிலை எழவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

தூய்மைப் பணியாளர்கள் கடைசியில் வாங்கிய ஊதியத்தை அதே ஊதியத்தை வழங்கும் வகையில், சென்னை மாநகராட்சி, தனியார் ஒப்பந்த நிறுவனத்துடன் கலந்து பேசி ஊதியத்தை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+