சென்னையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்.. சாலையில் அமர்ந்து தர்ணா! கைது செய்த போலீசார்
சென்னை: சென்னை பாரிமுனை சாலையில் அமர்ந்து தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சம்பள உயர்வு, பணி நிரந்தரம், தனியார்மயமாக்கலை கண்டித்து இன்று காலை 10 மணி முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 500-க்கு மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
சம்பள உயர்வு, பணி நிரந்தரம், தனியார்மயமாக்கலை கண்டித்து தூய்மை பணியாளர்கள் கடந்த ஆகஸ்டு மாதம் 1 ஆம் தேதி முதல் போராட்டம் செய்து வருகிறார்கள். முதலில் சென்னை ரிப்பன் மாளிகை முன்பு தூய்மை பணியாளர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டத்தை தொடங்கினர்.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடம் என்பதாலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதாலும் ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. வேண்டுமானால் அம்பத்தூர் மண்டலத்தில் நீங்கள் போராட்டத்தை தொடரலாம் என்றும் கோர்ட் தெரிவித்து இருந்தது. இதையடுத்து ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் நடத்தியவர்களை இரவோடு, இரவாக கைது செய்து போலீசார் அப்புறப்படுத்தினர்.
எனினும் முழுவதுமாக கோரிக்கையை நிறைவேற்ற கோரி தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். 148-வது நாளான இன்று சென்னை குறளகம் சந்திப்பில் இருந்து தலைமை செயலகம் வரை பேரணியாக சென்று முதல்வர் ஸ்டாலினிடம் மனு கொடுக்க திட்டமிட்டு இருந்தனர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரியவந்தது.
இதையடுத்து 500-க்கும் மேற்பட்ட போலீசார் இன்று காலையிலேயே பாதுகாப்பு பணிக்காக குவிந்தனர். இதையடுத்து காலை 10 மணியளவில் 200க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் குறளகம் சந்திப்பில் இருந்து தலைமை செயலகம் நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து கைது செய்தனர். 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் அங்கு வரவழைக்கப்பட்டு தூய்மை பணியாளர்களை கைது செய்தனர்.
திருவிக நகர் மற்றும் ராயபுரம் மண்டலங்களை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். போலீசார் கைது செய்வதை அறிந்து தூய்மை பணியாளர்கள் சிறு சிறு குழுக்களாக பிரிந்து சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை பாரிமுனை என்.ஒ.சி சாலையில் அமர்ந்து நூற்றுக்கணக்கானோர் தர்ணாவில் ஈடுபட்டதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அவர்களையும் போலீசார் கைது செய்து வாகனத்தில் அழைத்து சென்று வருகிறார்கள். சமுதாய கூடத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு!












Click it and Unblock the Notifications