ஆகஸ்ட் 31ஆம் தேதி வரையே கெடு.. தூய்மைப் பணியாளர்கள் பணிக்குத் திரும்ப மேயர் பிரியா வேண்டுகோள்
சென்னை: சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைப்பதை எதிர்த்து, தூய்மைப் பணியாளர்கள் கடந்த 2 வாரங்களாக ரிப்பன் மாளிகை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அரசு பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் அவர்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், தூய்மைப் பணியாளர்களுக்கு பணிப் பாதுகாப்பு என்பது எப்போதுமே உறுதியாக இருக்கும் என்று மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி சுகாதாரப் பணி தனியார் நிறுவனத்திற்கு விடும் முடிவை எதிர்த்து தூய்மைப் பணியாளர்கள் 13 நாட்களாக தொடர்ந்து போராடி வருகிறார்கள். அரசுத் தரப்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்துவிட்டது. இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொது நல வழக்கில், போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று மாலை அமைச்சர்கள் நேரு, சேகர் பாபு, மேயர் பிரியா மற்றும் அதிகாரிகளுடன் தூய்மைப் பணியாளர்கள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினோம். அதுவும் தோல்வியில் முடிந்தது.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மேயர் பிரியா கூறியதாவது: கடந்த 13 நாட்களாக மண்டலம் 5, 6க்கு உட்பட்ட தூய்மைப் பணியாளர்கள் ரிப்பன் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தூய்மைப் பணி தற்போது தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. தங்களின் பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு, ஊதிய பாதுகாப்பு ஆகிய கோரிக்கைகளை தூய்மைப் பணியாளர்கள் தரப்பில் முன்வைத்தனர்.
இதைத்தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சி அமைப்பு சார்பில் அந்த நிறுவனத்துடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. மேலும், அமைச்சர் கேஎன் நேரு, சேகர்பாபு, மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் தூய்மைப் பணியாளர்களிடம் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டன. மாநகராட்சி மற்றும் தூய்மைப் பணியாளர்கள் தரப்பில் இருந்து நீதிமன்றத்திற்கு சென்றனர்.
தற்போது நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மாநகராட்சி அலுவலகம் போராட்டம் நடத்துவதற்கான இடம் இல்லை என்றும், அவர்களை அப்புறப்படுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. ரிப்பன் வளாகம் போராட்டம் நடத்தக்கூடிய வளாகம் இல்லை என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வரும் 31 ஆம் தேதிக்குள் மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்கள் மீண்டும் பணிக்குத் திரும்ப வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
நீதிமன்ற தீர்ப்புக்குப் பின்பும் அமைச்சர்கள், ஆணையர்கள், நானும் ஒருங்கிணைந்து தூய்மைப் பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், 3 மணி நேரம் காத்திருந்து தூய்மைப் பணியாளர்கள் தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை. தூய்மைப் பணியாளர்களுக்கு பணிப் பாதுகாப்பு என்பது எப்போதுமே அவர்களுக்கு உண்டு என பேச்சுவார்த்தையில் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் பணிக்கு திரும்ப கேட்டுக்கொள்கிறோம்.
முன் எப்போதும் இல்லாத வகையில் பணியில் பாதுகாப்பு, பிஎப், காப்பீடு, குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை, போனஸ் போன்றவை இருக்கிறது. பல்வேறு சலுகைகளும் உள்ளன. தூய்மைப் பணியாளர்கள் பணியில் சேர வேண்டும். பிற கோரிக்கைகள் குறித்து ஒரே நாளில் முடிவு எடுக்க முடியாது. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கலாம் என்றார்.
-
மிரட்டும் மின்வெட்டு.. நள்ளிரவு நடுத்தெருவில் போராடிய சென்னை மக்கள்.. நழுவிய அதிகாரிகள் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications