“நீ சிங்கம்தான்”.. விஜய்க்கு ஆதரவாக அவரது நண்பர் சஞ்சீவ் போட்ட பதிவு.. கொந்தளித்த நெட்டிசன்கள்
சென்னை: நடிகர் விஜய்க்கு ஆதரவாக அவரது நண்பரும், நடிகருமான சஞ்சீவ் வெளியிட்ட பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. "உன் பேரை சாய்க்க பல யானைகள் சேர்ந்த போதே நீ சிங்கம் தான்" எனப் பதிவிட்டுள்ளார் நடிகர் சஞ்சீவ்.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கடந்த சனிக்கிழமை செப். 27 ஆம் தேதி அன்று கரூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நாமக்கல் நிகழ்வை முடித்து கொண்டு இரவு 7 மணி அளவில் கரூர் வேலுச்சாமிபுரத்திற்கு விஜய் வந்தார். விஜயை காண ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. நெரிசலில் சிக்கி பலர் மயங்கிய நிலையில் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் ஒன்பது குழந்தைகள் உள்பட 39 பேர் நேற்று முன் தினம் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தீவிர சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று ஒருவர், இன்று ஒருவர் என மேலும் இருவர் உயிரிழந்தனர். இதன் மூலம் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 41ஆக உயர்ந்தது. கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த 67 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது நாட்டையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
— Sanjeev (@SanjeeveVenkat) September 29, 2025
கரூர் பிரச்சாரம் முடிந்ததும், திருச்சி விமான நிலையம் சென்று அங்கிருந்து சென்னை திரும்பிய நடிகரும், தவெக தலைவருமான விஜய், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் சென்றார். பின்னர் அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலும் தெரிவித்தார்.
மேலும், தவெக சார்பில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும் விஜய் தெரிவித்தார். மேலும் கரூருக்கு நேரில் சென்று இறந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்ல அனுமதி கேட்டிருக்கிறார் விஜய்.
போலீஸ் பாதுகாப்பு அனுமதி தர நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. மேலும் கூட்ட நெரிசல் திட்டமிட்ட சதியால் நடந்தது என கூறி தவெக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரியுள்ளது தவெக. கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை பலரும் விமர்சித்து வருகின்றனர்.
தொண்டர்களும் மக்களும் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான சம்பவம் அறிந்தும், திருச்சியில் இருந்து கரூருக்கு திரும்பாமல், சென்னை வந்தது பெரும் விமர்சனத்துக்குள்ளானது. கடந்த 36 மணிநேரமாக நீலாங்கரை வீட்டிலேயே தங்கியிருந்த விஜய், தவெகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்களை மட்டும் சந்தித்தார்.
இந்த சூழலில் சிலர் சமூக வலைதளங்களில் 'ஐ ஸ்டான்ட் வித் விஜய்' என்றும் விஜய்க்கு ஆதரவாக கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், விஜய்யின் நண்பரும், நடிகருமான சஞ்சீவ் தனது எக்ஸ் தள பக்கத்தில் விஜய்யின் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "உன் பேரை சாய்க்க பல யானைகள் சேர்ந்த போதே நீ சிங்கம் தான்" என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் பதிவுக்கு பலரும் கோபமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
-
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
சி.வி.சண்முகத்திற்கு ஜாக்பாட்!தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி ரெடி! தவெக பேச்சுவார்த்தை? -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
குறை பிரசவத்தில் தவெக வெற்றி.. ஆட்சி நீடிக்காது.. திமுக சிவசங்கர் கணிப்பு












Click it and Unblock the Notifications