சரல் பென்ஷன் யோஜனா.. மாதம் ரூ.12,000 வேணுமா? அப்ப எல்ஐசியின் சரல் பென்ஷன் திட்டத்தில் சேருங்க.. செம
சென்னை: ஓய்வூதியதாரர்களுக்கான மாதந்தோறும் 12,000 ரூபாய் பெறும் திட்டம் குறித்து உங்களுக்கு தெரியுமா? மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு பெரும் வரவேற்புகள் கிடைத்து வருகின்றன.
பொதுமக்களின் நன்மைக்காக எத்தனையோ நன்மைகளை மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது.. இதில் வயதான காலத்தில், ஓய்வூதியம் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் பல்வேறு திட்டங்களையும் அமல்படுத்தி வருகிறது.

பென்ஷன்: பொதுவாக, பென்ஷன் என்றாலே, வேலைக்கு போகிறவர்களுக்கு மட்டும்தான் ஓய்வூதியம் கிடைக்கும் என்ற பிம்பம் வலுவாக கட்டமைக்கப்பட்டு விட்டது.. இதில், தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு பென்ஷன் என்பது நினைத்துக்கூட பார்க்க முடியாத விஷயமாகும்.. இந்த விஷயத்தைதான், மத்திய அரசு தகர்க்க நினைக்கிறது.
சுயதொழில் புரியும் நபர்கள் முதல் அனைத்து தரப்பு மக்களுக்கும் பென்ஷன் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட திட்டம்தான், எல்ஐசியின் "சரல் யோஜனா பென்ஷன்" திட்டமாகும். கடந்த 2021 ஏப்ரல் 1 முதல் இந்த திட்டம் அறிமுகமாகி உள்ளது.
ஓய்வூதிய திட்டம்: எடுத்த எடுப்பிலேயே பலரது கவனத்தையும் இந்த திட்டம் ஈர்க்க துவங்கி விட்டது. இதற்கு முக்கிய காரணம், இந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.12000 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இதற்கு நீங்கள் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 12,000 ரூபாய் தொகையாவது செலுத்த வேண்டும். அதாவது மாதம் குறைந்தபட்சம் 1000 ரூபாயாவது உங்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கும். அதிகபட்ச தொகைக்கு எந்த வரம்பும் இல்லை.
நீங்கள் ஒரு முறை மட்டுமே பிரீமியம் செலுத்த வேண்டும்.. அதுக்குப்பிறகு, அடுத்த 60 வருடங்களுக்கு மாத வருமானம் ரூ.12000 கிடைக்கும்... இந்த தொகையையையும், மாதாந்தர தவணைகளிலோ, 3 மாதத்திற்கு ஒரு முறையோ, 6 மாதத்திற்கு ஒரு முறையோ, அல்லது வருடத்திற்கு ஒரு முறையோ உங்கள் விருப்பம்போல் செலுத்தி வரலாம்.. இதில், ஒருமுறை மட்டும் பிரீமியம் செலுத்தும் திட்டமும் உள்ளது..
பென்ஷன் பணம்: அதுமட்டுமல்ல, குறைந்தபட்சம் 1000 என்றால், அதிகபட்சமாக எவ்வளவு தொகை வேண்டுமானாலும் ஒருவர் செலுத்தலாம்.. எவ்வளவு அதிகமாக பிரீமியம் செலுத்துகிறோமோ அந்த அளவுக்கு ஓய்வு காலத்துக்குப் பிறகு, பென்ஷன் பணம் ஒருவருக்கு கிடைக்கும்.
ஒருவரின் ஓய்வுக்காலத்துக்கு பிறகு, அந்த பென்ஷன் அவருக்கு வழங்கப்படும்.. அவருடைய இறப்புக்கு பின்னர், அவரது நாமினிக்கு அந்த பென்ஷன் தொகை தரப்படும்.. ஒருவேளை நாமினியும் இறந்துவிட்டால், மொத்தத் தொகை அவருடைய சட்டபூர்வ வாரிசுக்கு வழங்கப்படும்..
பாதுகாப்பானது: இந்தத் திட்டத்தில் ஒருவர் சேர்ந்த 6 மாத காலத்திலேயே, இந்த திட்டத்தை சரண்டர் செய்து, பென்ஷன் தொகையை பெற்றுக்கொள்ள முடியும்.. ஆக மொத்தத்தில், நாம் முதலீடு செலுத்தும் பணத்துக்கும் பாதுகாப்பு கிடைக்கும். ஓய்வூதியமும் கிடைக்கும்.. உங்களது முதலீட்டுத் தொகைக்கு, வருமான வரி விலக்கும் அளிக்கப்படும். ஒருவர் ஓய்வுபெற்ற பிறகு, வேறு வருமானங்கள் எதுவும் இல்லாவிட்டால், எந்த வரியும் செலுத்தாமலேயே முழு தொகையும் பென்ஷனாகவும் கிடைத்துவிடும்.












Click it and Unblock the Notifications