தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்?
சென்னை: பாஜகவில் இணைந்து கடந்த 2 ஆண்டுகளாகியும் சரத்குமாருக்கு முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்புகள் ஏதும் வழங்கப்படாத நிலையில் தற்போது மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை எடுத்து நடத்தலாமா என்று தனது ஆதரவாளர்களுடன் சரத்குமார் ஆலோசனை நடத்தி வருகிறாராம்.
மதுரையில் நடைபெற்ற பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் ஆகஸ்ட் 31, 2007 அன்று சரத்குமார் தனது புதிய கட்சியை அறிவித்தார். சமுதாயத்தில் அனைத்து தரப்பு மக்களும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் "சமத்துவ மக்கள் கட்சி" எனப் பெயரிட்டார்.

கட்சியின் கொடியில் சிவப்பு, வெள்ளை மற்றும் கருப்பு நிறங்கள் இடம் பெற்றிருந்தன. நடுவில் இரண்டு கைகள் கோர்த்திருப்பது போன்ற சின்னம் 'ஒற்றுமையை' குறிப்பதாக அமைந்தது.
காமராஜர் ஆட்சி: தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின் பொற்கால ஆட்சியை மீண்டும் கொண்டு வருவதே தனது கட்சியின் முதன்மையான நோக்கம் என்று சரத்குமார் முழங்கினார்.
சமூக நீதி: சாதி, மத வேறுபாடற்ற சமத்துவ சமுதாயத்தைப் படைப்பது மற்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவது போன்ற கொள்கைகளை முன்வைத்தார்.
2011 சட்டமன்றத் தேர்தல்: அதிமுகவுடன் கூட்டணி அமைத்த சரத்குமார், தென்காசி மற்றும் நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றார். சரத்குமார் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரானார் (MLA).
2016 சட்டமன்றத் தேர்தல்: மீண்டும் அதிமுக கூட்டணியில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால், இம்முறை தோல்வியைத் தழுவினார்.
2021 சட்டமன்றத் தேர்தல்: கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் மற்றும் ஐஜேகே (IJK) கட்சியுடன் இணைந்து 'மூன்றாவது அணி' அமைத்துப் போட்டியிட்டார். இத்தேர்தலில் ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை.
சரத்குமார் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், தென் தமிழகத்தில் அந்தச் சமூக மக்களின் ஆதரவு அவருக்குப் பெருமளவில் இருந்தது. இருப்பினும், அவர் தன்னை ஒரு "சமூகத் தலைவராக" காட்டிக்கொள்ளாமல், அனைத்து மக்களுக்குமான தலைவராகவே கட்சியை வழிநடத்தினார்.
இந்த நிலையில் தனது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை (AISMK) பாரதிய ஜனதா கட்சியுடன் இணைத்தது, தமிழக அரசியலில் ஒரு முக்கியமான மற்றும் எதிர்பாராத திருப்பமாக அமைந்தது.
ஒவ்வொரு தேர்தலின் போதும் மற்ற கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதும், கூட்டணி பேரங்களில் ஈடுபடுவதும் தனக்கு ஒருவித சோர்வைத் தந்ததாக சரத்குமார் குறிப்பிட்டார்.
சுயபரிசோதனை: "ஒவ்வொரு முறையும் கூட்டணி குறித்துப் பேசுவதுதான் அரசியலா? மக்கள் நலனுக்காக உழைக்க வேண்டாமா?" என்ற சுயபரிசோதனையே இந்த முடிவுக்குக் காரணம் என்று அவர் கூறினார்.
மோடியின் தலைமை: பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வை மற்றும் அவரது ஆளுமை தன்னை ஈர்த்ததாகவும், நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல மோடியுடன் இணைந்து பயணிப்பதே சிறந்தது என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த 2024 மார்ச் 12 அன்று, சென்னையில் உள்ள தமிழக பாஜக தலைமையகத்தில், மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை முன்னிலையில் சரத்குமார் தனது கட்சியை முறைப்படி பாஜகவுடன் இணைத்தார்.
கட்சியை இணைக்கும் முடிவை எடுத்தபோது, அவரது மனைவியும் நடிகையுமான ராதிகா சரத்குமாரிடம் நள்ளிரவில் எழுப்பி கேட்ட போது, "உங்கள் முடிவுக்கு நான் எப்போதும் துணையாக இருப்பேன்" என்று கூறி முழு ஆதரவு அளித்தாராம்.
இந்த நிலையில் 2024 மக்களவை தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை ராதிகாவுக்கு பாஜக வழங்கியது. ஆனால் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனை காட்டிலும் குறைந்த வாக்குகளையே பெற்றார்.
இந்த நிலையில் கடந்த இரு ஆண்டுகளாக பாஜகவில் பயணித்து வரும் சரத்குமாருக்கு தேசிய செயற்குழு உறுப்பினர் என்ற பதவி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதை விட முக்கியத்துவம் வாய்ந்த பதவி கிடைக்கும் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் திநகரில் உள்ள அலுவலகத்தில் தனது ஆதரவாளர்கள், ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் சரத்குமார் ஆலோசனை நடத்தி வருகிறார். அதாவது பாஜகவில் முக்கிய பதவியை கேட்கலாமா இல்லை சமத்துவ மக்கள் கட்சியையே மீண்டும் எடுத்து நடத்தலாமா என்று ஆலோசனை நடத்தி வருகிறாராம்.
-
ஆதரவாளர்களுடன் சரத்குமார் ரகசிய ஆலோசனை.. மீண்டும் உதயமாகிறதா சமக.. அதிர்ச்சியில் பாஜக -
பாஜக பஞ்சாயத்து ஓவர்..டேக் ஆஃப் ஆகுமா அதிமுக கூட்டணி! ப்ளானை மாற்றிய ’டெல்லி’ தலை! திடீர் ட்விஸ்ட்! -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா? -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
எடப்பாடி பழனிசாமிக்கே ஷாக்.. மாப்பிள்ளை அவர் தான்.. ஆனால் சட்டை? பாஜக வெயிட்டிங் கேம் பின்னணி என்ன? -
இன்னும் 4 நாள் ஆகும்.. அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு காலதாமதம்.. அமித்ஷா – எடப்பாடி மீட்டிங் முடிவு -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
அமமுகவுக்கு 12 சீட்? குக்கர் சின்னத்தில் போட்டி.. பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பில் உறுதி?! -
புதுச்சேரியில் 9 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு.. ஜான் குமாருக்கு மீண்டும் சீட்! -
மம்தாவுக்கு குடைச்சலை கொடுக்கும் பாஜக.. மேற்கு வங்கத்தில் மலரும் தாமரை? 7 முக்கிய பாயிண்டுகள் -
"மிஷன் கேரளா.." சத்தமே இல்லாமல் இறங்கிய ஆர்எஸ்எஸ்.. தேர்தலில் காத்திருக்கும் ட்விஸ்ட்! -
திருச்செந்தூர் சென்ற புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி.. பேச்சுவார்த்தையில் எஸ்கேப்.. பரிதவிக்கும் பாஜக












Click it and Unblock the Notifications