“கட்சி நிர்வாகி குறையை கேட்காதவர் தலைவராக இருக்க முடியாது" தவெக தலைவர் விஜய் மீது சரத்குமார் அட்டாக்
சென்னை: சொந்தக் கட்சியின் நிர்வாகிகளிடம் குறையை கேட்காதவர் தலைவராக இருக்க முடியாது என தவெக தலைவர் விஜய் பற்றி பாஜக நிர்வாகியும் நடிகருமான சரத்குமார் விமர்சித்துள்ளார். விஜய் அரசியல் கட்சியை தொடர்ந்து நடத்துவாரா? மாட்டாரா? என்பது தேர்தலுக்குப் பிறகுதான் தெரியவரும் என்றும் சரத்குமார் கூறியுள்ளார்.
தவெகவில் பதவி கிடைக்காமல் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தவெக தொண்டர் அஜிதா ஆக்னஸ் தற்கொலைக்கு முயன்று தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அது போல் கட்சி நிர்வாகி மிரட்டியதாக திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த கட்சி நிர்வாகியும் தற்கொலை முயற்சி செய்துள்ள நிலையில் அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறாமல் தவெக தலைவர் விஜய், 'ஜனநாயகன்' பட ஆடியோ ரிலீஸ் விழாவுக்காக மலேசியாவுக்கு சென்றுள்ளது தவெகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சியினர் விமரித்து வருகின்றனர்.

இந்நிலையில், துாத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சரத்குமார், "த.வெ.க தலைவர் விஜய்யை ஒரு அரசியல்வாதியாக நான் பார்க்கவில்லை. தேர்தலை சந்திக்காத அந்த கட்சி, தற்போதுதான் களத்திற்கே வந்துள்ளது. தங்களின் கொள்கை, கோட்பாட்டை சொல்லாமல் தனிநபர் தாக்குதலை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். முழுமையான அரசியல் கட்சி தலைவராக விஜய் இருப்பாரா? அரசியல் கட்சியை நடத்துவாரா? மாட்டாரா? என்பது தேர்தலுக்குப் பிறகுதான் தெரியவரும்.
தவெக தலைவர் விஜய்யின் காரை மறித்து போராட்டம் நடத்திய, அக்கட்சியின் பெண் நிர்வாகி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவர் காரை மறித்தபோது மனிதாபிமான அடிப்படையில், கீழே இறங்கி இரண்டு வார்த்தைகள் விஜய் பேசி இருந்தாலே பிரச்சனை முடிந்திருக்கும். சொந்த கட்சி நிர்வாகிகளின் குறையை கேட்பவர்தான் நாயகனாகவும், கட்சி தலைவராகவும் இருக்க முடியும்." என்றார்.
மேலும் பேசிய சரத்குமார், "தமிழகத்தில் போதை பழக்கத்தால் குற்றச் சம்பவங்களும், பாலியல் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. 100 நாள் வேலை திட்டத்தை சிதைப்பதற்கான எந்த திட்டமும் பாஜகவிடம் இல்லை. வேலையில்லாத இடத்தில் வேலை செய்துவிட்டு இலவசமாக பணம் கொடுக்கக்கூடாது என்றுதான் சொல்கிறார்கள்.
திமுக எந்த நல்ல திட்டங்களையும் வரவேற்பது இல்லை. சாதகமாக இருக்கும் திட்டங்களில் அவர்களின் பெயர்களை போட்டுக் கொள்கின்றன. நல்ல திட்டங்களை வரவேற்காமல், அவர்களுக்கு பாதகமாக இருப்பதை குற்றச்சாட்டாக கூறுகிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
குறை பிரசவத்தில் தவெக வெற்றி.. ஆட்சி நீடிக்காது.. திமுக சிவசங்கர் கணிப்பு












Click it and Unblock the Notifications