ஒரு நாள் கூட ஜெயிலுக்குள் இருக்க மாட்டேங்குறாரே ராஜகோபால்?!
சரவணபவன் ஓனர் ராஜகோபாலுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது
Recommended Video
சென்னை: ஒருநாள் கூட உள்ளே இருக்க முடியாதா என்று ராஜகோபாலை சுப்ரீம் கோர்ட் கேள்வி கேட்டது ஏன் என்று இப்போதுதான் புரிகிறது. இன்னும் ஒருநாள் கூட முழுசா அண்ணாச்சி ஜெயிலுக்குள்ளே இல்லை!
கல்யாணமான ஜீவஜோதியை தன்வசப்படுத்த சரவணபவன் ஓட்டல் ஓனர் அன்று பலத்த முயற்சியில் இறங்கினார். இதற்காக அவரது கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரை கொடைக்கானல் மலை உச்சியில் இருந்து தள்ளிவிட செய்தார்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக ராஜகோபால் உள்ளிட்ட 6 பேருக்கு சென்னை ஹைகோர்ட் ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதில் ராஜகோபால் உள்ளிட்ட 4 பேரின் ஆயுள் தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதிசெய்தது.
கடந்த 7ம் தேதிக்குள் சென்னை ஐகோர்ட்டில் சரணடைந்து ஜெயிலுக்கு செல்ல கெடு விதிக்கப்பட்டது. ஆனால், ராஜகோபால் உடம்பு சரியில்லை என்று ஆஸ்பத்திரியில் போய் படுத்து கொண்டார். மேலும் சரணடைய டைம் வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யவும், வெகுண்டுபோன சுப்ரீம்கோர்ட், அவரது மனுவை தள்ளுபடி செய்ததுடன், ஒருநாள் கூட சிறையில் இருக்க முடியாதா என்று நறுக்கென கேள்வி கேட்டு, ஹைகோர்ட்டில் சரணடையும்படி உத்தரவிட்டது.

இதனால் வேறு வழியின்றி ஆம்புலன்சில் படுத்த படுக்கையாக சென்று சரணடைந்த ராஜகோபாலை புழல் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது. ஆனால் அண்ணாச்சியோ, கோர்ட் வளாகத்திலேயே நெஞ்சுவலி என்று சொன்னார். அதனால் நேற்று முன் தினம் இரவு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிறைக்கைதிக்கான 4வது வார்டில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர பரிசோதனை நடந்து வருகிறது.
அண்ணாச்சி முழுசாக குணமடைந்ததாக டாக்டர்கள் சான்றிதழ் கொடுத்த பின்னரே புழல் சிறையில் அடைக்கப்படுவார் என தெரிகிறது. உண்மையிலேயே அண்ணாச்சிக்கு உடம்பு சரியில்லையா? எப்போது குணமடைவார்? எப்போது ஜெயிலுக்கு செல்வார் என்பதெல்லாம் இனிமேல்தான் தெரியவரும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications