சரவண பவன் ராஜகோபாலுக்கு உடல்நிலை மோசமாகி விட்டதாம்.. டாக்டர்கள் தீவிர கண்காணிப்பு!
சரவண பவன் ராஜகோபால் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக கூறப்படுகிறது
சென்னை: அண்ணாச்சிக்கு உடல்நிலை ரொம்பவும் மோசமாகி விட்டதாம்.. அதனால் டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் ராஜகோபால் உள்ளார்!
சரவண பவன் ஓட்டல் ஓனர் ராஜகோபால், கொலை வழக்கிற்காக ஆயுள் தண்டனை பெற்றுள்ளார். இதற்காக மேல்முறையீடு செய்தும், சுப்ரீம் கோர்ட் இவரது மனுவை நிராகரித்து தண்டனையை உறுதி செய்தது.

மேலும் உடனடியாக ராஜகோபாலும் 11 குற்றவாளிகளும் கடந்த 7-ம் தேதி கோர்ட்டில் சரண் அடைந்து சிறை செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டது.
ஆனால் தனக்கு உடல்நிலை மோசமாக உள்ளதால், சரண் அடைவதில் இருந்து கால அவகாசம் வேண்டும் என்று முறையிட்டும், அதனையும் சுப்ரீம் கோர்ட்டு ஏற்கவில்லை. ''ஒருநாள் கூட ராஜகோபாலால் சிறையில் இருக்க முடியாதா? என்று கேள்வி எழுப்பி, அன்றைய தினமே அவரை சரணடைய சொன்னது. அதனால் கடந்த 10-ந்தேதி ராஜகோபால் படுத்த படுக்கையாக ஸ்டெர்ச்சரில் ஐகோர்ட்டில் சரணடைய வந்தார்.
கோர்ட் வளாகத்திலேயே உடல்நிலை மோசமானது. அதனால் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் கைதிகள் வார்டில் ராஜகோபால் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு இதய துடிப்பு குறைந்து கொண்டே வந்தது, இதனால் சுவாசிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் உடனடியாக வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை நடந்து வருகிறது. நேற்றுகூட உடல்நிலை கவலைக்கிடமாகி விட்டது.
அதனால் ராஜகோபாலின் மகன் சரவணன் மற்றும் ஒரு சில உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு வந்து அவரை பார்த்தனர். இப்போதும் அண்ணாச்சியின் உடல்நிலையை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். அண்ணாச்சியின் உடல்நிலை மோசமாகி உள்ளது, அவரது குடும்பத்தினரை பெரிதும் கவலையில் ஆழ்த்தி உள்ளது.வெண்டிலேட்டரில் இருந்து வெளியே வந்தால் மட்டுமே ராஜகோபாலின் உடல்நிலை குறித்து முழுமையாக தெரியவரும் என டாக்டர்கள் தெரிவிக்கிறார்கள்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications