மறைந்தார் ராஜகோபால்... சோகத்தில் சரவண பவன்.. நாளை சொந்த ஊரில் இறுதிச் சடங்கு
சிகிச்சை பலனின்றி சரவண பவன் ராஜகோபால் காலமானார்
Recommended Video
சென்னை: சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் இன்று சென்னையில் காலமானார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 72.
கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர் சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால். இதனால் கடந்த வாரம் ஹைகோர்ட்டில் சரணடைந்தார்.
ஏற்கனவே உடல்நலக் கோளாறால் அவதிப்பட்டு வந்த ராஜகோபால், சரணடைய வரும்போதே ஆம்புலன்சில்தான் வந்தார். பிறகு கோர்ட் வளாகத்திலேயே உடம்பு இன்னும் முடியாமல் போனது.

சுவாசம்
இதன்காரணமாக சிறைக்கே போகாமல், ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மூச்சுவிட சிரமமாக இருந்தால் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு அங்கு சிகிச்சை தரப்பட்டு வந்தது.

ஆஸ்பத்திரி
ஆனாலும் தொடர்ந்து உடல்நிலை மோசமாகி கொண்டே வந்தது. ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அடிப்படை வசதி தவிர உயர்ந்த சிகிச்சை வசதிகள் இல்லை என்பதாலும், அதனால் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதி தர வேண்டும் என்று அவரது மகன் சரவணன் ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

உறுதி தந்தனர்
ஆனால் அவரை இடமாற்றுவது சிக்கலானது என்று ஆஸ்பத்திரி அறிக்கை விடுத்த நிலையில், அதற்கு தான் முழு பொறுப்பேற்பதாக ராஜகோபால் மகன் தரப்பு உறுதி தந்தது. இதனை ஏற்ற கோர்ட்டும், ராஜகோபாலை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி அளித்தது. அதனால் அண்ணாச்சியை வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு போலீஸ் பாதுகாப்புடன் அனுமதித்தனர்.

உயிர் பிரிந்தது
ஐசியூவில் தீவிர சிகிச்சை பிரிவில், தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி ஆஸ்பத்திரியிலேயே இன்று காலை ராஜகோபால் உயிர் பிரிந்தது. இதையடுத்து, அவர் தண்டனை கைதி என்பதால் அவரது உடலானது சென்னை அரசு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. மாஜிஸ்திரேட் முன்னிலையில் உடல் பிரேத பரிசோதனை நடந்து வருகிறது.

பிரேத பரிசோதனை
இதன்பிறகுதான் அவரது உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. கேகே.நகரில் உள்ள அவரது வீட்டில் இன்று மாலை வரை அவரது உடல் வைக்கப்பட்டு பின்னர் அவரது உடல் நெல்லை மாவட்டம், புன்னைநகரில் உள்ள சொந்த கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளது. நாளை அங்கு இறுதிச்சடங்கு நடைபெறும் என தெரிகிறது. அதற்கான ஏற்பாடுகளும் அங்கு நடந்து வருகின்றன.
-
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ் -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
மக்களின் கண்ணோட்டமே உங்களை பிரபலமாக மாற்றுகிறது.. விஜய்க்கு கிருத்திகா உதயநிதி சூசக அட்வைஸ்! -
“ஒரு சாதாரண வக்கீல்” .. சீண்டிய ஜெயலலிதா.. ப.சிதம்பரம் செய்த சம்பவங்கள்! -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
"தமிழ்நாடு உங்களை மறக்காது" ஆளுநரிடம் சொல்லி ஸ்டாலின் தந்த பரிசு பாருங்க! உடனே RN ரவியின் பரவச பதில் -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
அரபு நாடுகள் மீது இனி தாக்குதல் கிடையாது.. மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்! முடிவுக்கு வரும் போர்? -
பக்கத்து நாட்டை தாக்க மாட்டோம்னு சொல்லி.. துபாய் விமான நிலையத்தை அட்டாக் செய்த ஈரான்! ஷாக் வீடியோ -
என்னடா இது அதிமுகவுக்கு வந்த சோதனை.. காலி நாற்காலிகளுடன் கூட்டம்.. நொந்துபோன கௌதமி












Click it and Unblock the Notifications