சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சர்கார் பிரச்சினை ஓவர்.. முதல்வரை சந்தித்த பிறகு கடம்பூர் ராஜு அறிவிப்பு!

Google Oneindia Tamil News

Recommended Video

    கமலுடன் கை கோர்க்கிறார் விஜய்? காத்திருக்கும் புயல்!

    சென்னை: சர்கார் திரைப்பட விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டது என்று செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

    தயாரிப்பு நிறுவனம் கேட்டுக்கொண்டதையடுத்து, சர்கார் திரைப்படம் மறு தணிக்கை செய்யப்பட்டது. அதில், கோமளவள்ளி என்ற பெயர் இடம் பெறும் இடங்கள் ம்யூட் செய்யப்பட்டுள்ளன. விலையில்லா நலத் திட்ட உதவிகளை எரிக்கும் காட்சி நீக்கப்பட்டுள்ளது.

    Sarkar film issue over, says minister Kadambur Raju

    [கமலுடன் கை கோர்க்கிறார் விஜய்? தமிழக அரசியலில் காத்திருக்கும் புயல்! ]

    இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து கடம்பூர் ராஜு இன்று மதியம் ஆலோசனை நடத்தினார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

    சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை. மறு தணிக்கைக்கு பிறகு, படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் ஒப்புக்கொண்டு அதற்கான பணிகளை முடித்துள்ளது. எனவே சர்கார் திரைப்பட சர்ச்சை முடிவுக்கு வந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    காலை 10 மணிக்கு மத்திய சென்சார் வாரியத்திற்கு மறு தணிக்கைக்காக படம் ஒப்படைக்கப்பட்டதாகவும், மதியம் 2 மணிக்கு மேல் காண்பிக்கப்படும் சர்கார் படத்தில் சர்ச்சை காட்சிகள் இடம் பெறாது என்றும், திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின், திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்தார்.

    இதன் மூலம், இனியாவது திரைப்படம் ஓடும் இடங்களில், அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தாமல் இருப்பார்களா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    English summary
    Sarkar film issue over, says minister Kadambur Raju after meets CM Edappadi Palanisamy.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X