தீபாவளிக்கு ரிலீஸாகிறது 'சர்கார்'... வழக்கு வாபஸால் நீங்கியது தடை!
Recommended Video

சென்னை : நடிகர் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இருந்த தடை நீங்கியுள்ளது. சர்கார் படத்தின் கதை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் உதவி இயக்குனர் சர்கார் படத்திற்கு தடை கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். ராஜேந்திரன் வழக்கை வாபஸ் பெற்றதையடுத்து படம் வெளியிட இருந்த தடை நீங்கியுள்ளது.
நடிகர் விஜய் நடிக்க முருகதாஸ் இயக்கத்தில் பெரும் எதிர்ப்பார்ப்புடன் 'சர்கார்' திரைப்படம் தீபாவளி அன்று திரைக்கு வர உள்ளது. 'சர்கார்' படம் குறித்த செய்திகளில் ஆரம்பம் முதலே எதிர்பார்ப்பும் கூடவே பரபரப்பான தகவல்களும் சுற்றிவருகிறது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் சிகரெட் பிடிப்பது போன்ற போஸ்டரால் சர்ச்சையானது.

இதனையடுத்து பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் நாசுக்காக பேசிய அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது. நான் அரசியலுக்கு வந்து முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் முதலமைச்சராக நடிக்கமாட்டேன் என்று அவர் கூறியது அரசியல்வாதிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தனது கதையைத் திருடி 'சர்கார்' படத்துக்கு பயன்படுத்தியதாக வருண் என்கிற ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தன்னுடைய செங்கோல் படத்தின் கதையை எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்துவைத்திருந்ததாகவும், அந்தக் கதையை திருடி முருகதாஸ் சர்கார் என படம் இயக்கியுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இந்த வழக்கின் விசாரணை நீதிபதி சுந்தர் முன்பு இன்று வந்தது. தீபாவளிக்கு படம் ரிலீஸாவதில் சிக்கல் ஏற்படுமோ என்பதால் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் உயர்நீதிமன்றம் வந்திருந்தனர். இதனிடையே ராஜேந்திரன் தன்னுடைய வழக்கை வாபஸ் பெற்றதையடுத்து சர்கார் படத்தை தீபாவளிக்கு வெளியிட இருந்த தடை நீங்கியுள்ளது. ராஜேந்திரனிடம் சர்கார் படக்குழு மற்றும் தயாரிப்பு நிறுவனம் நடத்திய சமரச பேச்சுவார்த்தையை அடுத்து வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தெரிகிறது.
மேலும் கதை வருண் ராஜேந்திரனுடையது தான் என்பதை ஏ.ஆர். முருகதாஸ் ஒப்புகொண்டுள்ளார். வருண் ராஜேந்திரன் கேட்டது போல திரைப்படத்தில் அவருடைய பெயரை போட்டு நன்றி என போடவும், நஷ்ட ஈடு தொகையாக கேட்ட ரூ. 30 லட்சத்தில் கணிசமதான தொகையை தர ஒப்புகொண்டதையடுத்து வழக்கை ராஜேந்திரன் வாபஸ் பெற்றுள்ளார்.
-
தேர்தல் தோல்வியால் அதிர்ச்சியில் திமுக.. கட்சியை மீட்டெடுக்க தேசிய அரசியல் ஆலோசகரை அழைக்கிறது? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு.. ஜூன் 15ல் நீதிமன்றத்தில் விசாரணை.. அடுத்தது என்ன? -
ஜூன் 15-ல் ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை வருமா? விஜய் போட்ட பிளான்.. பலருக்கும் போன மெசேஜ் உண்மையா? -
பரந்தூர் விமான நிலையம்.. களத்தில் இறங்கிய மத்திய அரசு.. விஜய்க்கு பெரும் சிக்கல்! -
காத்திருந்து காத்திருந்து..பனையூரில் பாழாய்ப் போன கனவுகள்! பதவி இல்லாமல் பரிதவிக்கும் ’தாவல்’ தலைகள்! -
மத்திய அரசுடன் இணக்கமான உறவு வச்சுக்கலாம்.. விஜய் எடுத்த புதிய ரூட்! காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க -
டெல்லி தமிழ்நாடு இல்ல கேண்டீனில் தீ விபத்து.. முதல்வர் விஜய் புறப்பட்ட சிறிது நேரத்தில் பரபரப்பு -
பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும்.. முதல்வர் விஜய் அறிவிப்பு! -
இருக்குற இடம் தெரியாம இருந்துட்டு போயிடனும்.. பாஜக மீது லேசான பாசம்! ‘இந்தியா’வுக்கு நோ சொன்ன விஜய்! -
பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. நீலாங்கரை இல்லத்தில் திரண்ட திரையுலகினர் -
கே.என்.நேரு மீது FIR.. உள்ளே இழுக்கப்பட்ட உதயநிதி நண்பர் ரத்தீஷ்! விஜய் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்












Click it and Unblock the Notifications