சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பேரன் கேசவ் தேசிராஜு மறைவு.. தாத்தா பிறந்தநாளில் காலமான பேரன்
சென்னை: சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பேரன் கேசவ் தேசிராஜு சென்னையில் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 66. தாத்தாவின் பிறந்தநாளில் அவரது பேரன் காலமாகியுள்ளார்.
ஆசிரியராக இருந்து நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை போற்றும் விதமாக செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பேரணும் முன்னாள் மத்திய சுகாதாரத் துறை செயலாளராக இருந்த கேசவ் தேசிராஜூ சென்னையில் உடல்நலக் குறைவால் காலமானார்.

சென்னை மருத்துவமனை
இதய கோளாறு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார் கேசவ் தேசிராஜு. சென்னையில் பிறந்தவர் கேசவ் தேசிராஜு, இவர் தொடக்க கல்வியை டேராடூனிலும் உயர் கல்வியை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் பயின்றார்.

அடையாறு புற்றுநோய்
இந்திய குடிமையியல் தேர்வில் தேர்ச்சி பெற்ற அவர், மத்திய சுகாதாரத் துறை செயலாளராக பதவி வகித்துள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு இந்திய அரது பணியிலிருந்து ஓய்வு பெற்ற அவர், அடையாறு புற்றுநோய் மையத்தின் அறங்காவலர் குழு உறுப்பினராகவும் உள்ளார். மனநல சுகாதார சட்டம் கொண்டு வருவதற்கு காரணமாக இருந்த இவர் மன சுகாதார திட்ட நிலை குழுவில் உறுப்பினராகவும் இருந்துள்ளார். 2018 ஆம் ஆண்டு இவர் எழுதிய இந்திய சுகாதார அமைப்பின் ஊழல் எனும் புத்தகம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இறுதி சடங்கு
அது போல் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தையும் இவர் எழுதியுள்ளார். முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் மகள் வழி பேரனான இவரது இறுதி சடங்கு நாளை காலை நடைபெறுகிறது. கேசவ் தேசிராஜுவின் இறப்பை அறிந்து மிகவும் வருந்துவதாக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் இரங்கல்
இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் அரசுப்பணியில் சிறப்பாகச் செயல்பட்டு நாட்டின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றிய கேசவ் தேசிராஜு பாரத ரத்னா எம்.எஸ்.சுப்புலட்சுமி வாழ்க்கை வரலாற்று நூலையும் எழுதியுள்ளார். மாற்றுத்திறன்கொண்ட குழந்தைகள் மற்றும் மனவளர்ச்சி பாதிக்கப்பட்டோர் நலனில் தனித்த அக்கறை கொண்டிருந்த மனிதநேயப் பண்பாளராகவும் அவர் திகழ்ந்தார். தமது பாட்டனாரின் பிறந்தநாளிலேயே மறைவெய்தியுள்ள அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என இரங்கல் கடிதத்தில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications