சீக்ரெட் மீட்டிங்.. சென்னையில் சசிகலாவை சந்தித்த 2 முக்கிய தலைகள்.. ஆனால்.. அங்கதான் ட்விஸ்டே!
சென்னை: சென்னையில் சசிகலாவை இரண்டு முக்கியமான தலைகள் சந்தித்து சீக்ரெட் மீட்டிங் ஒன்றை நடத்தி உள்ளனர். இந்த மீட்டிங்கில் பேசப்பட்ட விஷயங்கள் சசிகலா குடும்பத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறதாம்.
அதிமுகவில் மீண்டும் சசிகலாவை சேர்ப்பதற்கான வாய்ப்புகள் குறைந்து கொண்டே வருகின்றன. டெல்லியில் பாஜக ஏதாவது மனது வைத்தால் சசிகலாவிற்கு விடிவு காலம் பிறக்கும் என்று அரசியல் வட்டாரத்தில் பேச்சாக இருக்கிறது.
ஆனால் இதுவரை சசிகலாவிற்கு எந்த விதமான கிரீன் சிக்னலையும் டெல்லி பாஜக கொடுக்கவில்லை. அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என்று சென்னை நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது.

சசிகலா
இந்த பதவியை பயன்படுத்திதான் நான் அதிமுக பொதுச்செயலாளர்.. கட்சியை மீட்க போகிறேன் என்று சசிகலா வாரம் ஒரு "ஆடியோவை ரிலீஸ்" செய்து கொண்டு இருந்தார். ஆனால் இப்போது கோர்ட்டே அவரை நீக்கியது செல்லும் என்று கூறிவிட்டது. இதனால் சசிகலா இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி போய் இருக்கிறார். சென்னையில் சசிகலாவை பார்க்க இந்த மாத தொடக்கத்தில் நிறைய கார்கள் நின்றன.
அந்த கார்களும் தற்போது நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகின்றன. அதிமுகவிற்கு உள்ளேயே சசிகலாவிற்கு ஆதரவாக இருந்தவர்களும் இப்போது பெரிதாக சசிகலாவோடு தொடர்பில் இல்லை என்றே கூறப்படுகிறது. வழக்கு நடக்கும் போதே சசிகலா எதுவும் செய்யவில்லை. பொதுச்செயலாளர் என்று போட்டுக்கொண்டதை தவிர சசிகலா பெரிதாக அதிரடி எதையும் மேற்கொள்ளவில்லை.

அதிமுக
இரண்டு மூன்று சுற்றுப்பயணங்களை மேற்கொண்டார். ஆனால் அந்த பயணங்களும் பெரிதாக சசிகலாவிற்கு உதவவில்லை. இனிமேல் என்ன செய்ய போகிறார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் அதிருப்தியில் புலம்ப தொடங்கி உள்ளன. இந்த நிலையில்தான் சசிகலா சென்னையில் சீக்ரெட் மீட்டிங் ஒன்றை சமீபத்தில் நடத்தி இருக்கிறார். தனது குடும்பத்தை சேர்ந்த இரண்டு பேருடன் சசிகலா இந்த சந்திப்பை நடத்தி இருக்கிறார்.

தினகரன் இல்லை
அந்த குடும்ப நபர் தினகரன் கிடையாது. மற்ற இரண்டு ஆண் முக்கியஸ்தர்களுடன் சசிகலா சந்திப்பு நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பே குடும்பத்தை மொத்தமாக ஒன்றிணைக்க வேண்டும் என்று சசிகலா நினைத்துதான் நடத்தப்பட்டதாம். மன்னார்குடி குடும்பம் மற்றும் அக்குடும்பத்திற்கு நெருக்கமாக இருக்கும் அதிமுக தலைகளை ஒரு குடைக்குள் கொண்டு வர வேண்டும் என்று திட்டமிட்டுதான் இந்த கூட்டம் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி குடும்ப உறுப்பினர்களை மீண்டும் எப்படி ஒன்று சேர்க்கலாம்.

மீட்டிங்
டெல்டாவில் எப்படி ஆதிக்கம் செலுத்தலாம் என்பதை பற்றி பேச சசிகலா அழைத்து இருந்தாராம். ஆனால் அங்குதான் டிவிஸ்ட்டே.. கூட்டத்திற்கு வந்த அந்த இரண்டு தலைகளும் குடும்பத்தை இணைப்பது பற்றி பேசாமல் சொத்து விவகாரம் பற்றி அதிகம் பேசியதாக கூறப்படுகிறது. சொத்துக்களை எப்படி பிரிப்பது, பங்கீடு செய்வது என்று இவர்கள் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.

என்ன பேசினார்கள்
இது தொடர்பான விவாதம் நீண்ட நேரம் நடைபெற்று இருக்கிறது. பல இடங்களில் உள்ள சொத்துக்கள் பற்றி ஆலோசனை செய்யப்பட்டு இருக்கிறதாம். இதில் சில காரசார விவாதங்களும் நடந்துள்ளதாம். எதையோ பேச கூப்பிட்டு கடைசியில் டாப்பிக் வேறு எங்கேயோ சென்றுவிட்டதே என்ற விரக்தியில் சசிகலா தரப்பு இருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications