டாப் கியரில் திமுக.. நடிகையும் அப்செட்.. கரைகிறதா அமமுக?.. அந்த 2 பேர் காரணமாமே.. பரபரக்கும் டெல்டா
அமமுகவில் இருந்து சிலர் திமுகவில் மேலும் இணைவதாக கூறப்படுகிறது
சென்னை: ஒரு முக்கியமான விஷயம் ஓடிக் கொண்டிருக்கிறது.. திமுக பக்கம் ஒரு குரூப்பே அணி மாற போகிறதாம்.. இப்படி ஒரு தகவல் கசிந்து வருவதால், அரசியல் களமே தகித்து காணப்படுகிறது.
அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ள சசிகலா, இந்த நிமிடம் வரை தன் முடிவில் இருந்து பின்வாங்கவில்லை.. அதிமுகவின் பொதுச்செயலாளர் என்றே குறிப்பிட்டு வருகிறார்.. அதன் பெயரிலேயே அறிக்கையையும் விடுத்து வருகிறார்.. அதன்படியே நிர்வாகிகளை சந்தித்தும் வருகிறார்.
நீங்கள்தான் கட்சியை வழிநடத்த வேண்டும் என்று மூத்த நிர்வாகிகள் சொல்லும் அளவுக்கு தன்னுடைய வியூகங்களை பொறுமையாக செயல்படுத்தி வருகிறார்.. முதலில் தென்மண்டல நிர்வாகிகளை சந்தித்து பேசியதில், ஓரளவு அவர்களை சரிக்கட்டி விட்டதாக தெரிகிறது.. அடுத்ததாக அதிமுக வடமாவட்ட நிர்வாகிகள் மீது கவனத்தை திருப்பி வருகிறார்.

மதிப்பு
இதற்கு நடுவில்தான், டிடிவி தினகரனுடனான அதிருப்திகள் வெடித்து வருகிறது.. கட்சியை கலைத்துவிடும்படி சசிகலா கோரியதாகவும், அதற்கு தினகரன் சம்மதிக்கவில்லை என்றும் கடந்த வாரமே செய்திகள் கசிந்தன.. தினகரனை பொறுத்தவரை, அதிமுகவில் போதுமான மதிப்பு தனக்கு கிடைக்கவில்லை என்பதால்தான் அமமுக என்ற கட்சியையே தனியாக ஆரம்பிக்க நேர்ந்தது.. தனக்கான செல்வாக்கை ஓரளவு தக்க வைத்து வரும் தினகரன், எதற்காக மறுபடியும் அதிமுகவுடன் சேர வேண்டும் என்று நினைப்பதாக தெரிகிறது..

மறுப்பு
அதனால் சசிகலாவை சமாதானப்படுத்தவும் ஒருகட்டத்தில் முயற்சி மேற்கொண்டாராம் தினகரன்.. பேசாமல் அமமுகவின் அவைத் தலைவராக இருந்து, வழிநடத்தினால் சிறப்பாக இருக்குமே என்று தினகரன் சொல்ல, அதற்கு சசிகலாவும் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. அதாவது, சசிகலா போட்ட கண்டிஷனை தினகரன் கேட்கவில்லை.. தினகரன் சொன்ன ஐடியாவை சசிகலா கேட்கவில்லை போலும்.

தினகரன்
இப்படிப்பட்ட சூழலில்தான், 2 விதமான செய்திகள் தற்போது முணுமுணுக்கப்பட்டு வருகின்றன.. சசிகலா நடத்தும் நிகழ்வுகளில் கலந்து கொள்ள வேண்டாம் என்றும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சசிகலா சென்றால், அதில் கலந்து கொள்ளகூடாது, அப்படி மீறி கலந்து கொண்டவர்கள் விளக்கம் தர வேண்டும் என்றும் கேட்டிருந்தாராம் தினகரன்.. ஆனால், இதில் அந்த கட்சியின் மகளிர் அணி செயலரான ஒரு சீனியர் நடிகையே சென்றாராம்.. இது தெரிந்து தினகரன் கண்டிக்கவும், அந்த நடிகை அப்செட் ஆகிவிட்டதாக கூறுகிறார்கள்.

2 பேர்
அதேபோல, கட்சியின் குரூப் ஒன்று விரைவில் திமுகவில் இணைய போகிறதாம்.. இதற்கு டெல்டா மாவட்டத்தை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் 2 பேர்தான் முக்கிய காரணமாம்.. இவர்கள்தான், தினகரன் - சசிகலா இடையே அதிருப்திகள் அதிகரித்து வருவதாக செய்திகளை கிளப்பி விட்டு கொண்டிருக்கிறார்களாம்.. ஒருவேளை இவர்களின் அதிருப்திகள் தொடர்ந்தால், விரைவில் திமுகவில் ஆதரவாளர்களுடன் இணையவும் முடிவெடுத்துள்ளனராம்.

சலசலப்பு
ஏற்கனவே கடந்த வாரம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், சென்னை துறைமுகம் பகுதி செயலர் வி.பி.எஸ்.மதன், பகுதி துணை செயலர் கல்லறை எம்.மதன், துறைமுகம் வடக்கு பகுதி இணைச் செயலர் ஆர்.அனிதா, பகுதி பேரவை துணைச் செயலர் ஆர்.மோசஸ் ஆகியோர் அறிவாலயம் சென்று, திமுகவில் தங்களை இணைத்து கொண்டனர்.. இப்போது தென் மாவட்டத்தில் இருந்தே இந்த சலசலப்பு கிளம்பி உள்ளதாக தெரிகிறது..

அதிர்ச்சி
கட்சியை ஒருங்கிணைக்கும் வேலையில் தான் தொடர்ந்து ஈடுபட்டு வரும்போது, அதிருப்தியாளர்கள் திமுக பக்கம் செல்வது சசிகலாவுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.. அதேபோல, எடப்பாடிக்கும் இது கலக்கத்தை தந்துள்ளது.. அதனால் அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் இரு தரப்புமே இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது.. இனி என்ன நடக்க போகிறது என்று தெரியவில்லை.. பார்ப்போம்..!
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications