ஓபிஎஸ் முடிவால் டென்ஷன் ஆன சசிகலா.. “எல்லாத்துக்கும் காரணம் ஒரு ஆள் தான்”.. எடப்பாடி மீது தாக்கு!
சென்னை: ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்துள்ளதை தவறான முடிவு என விமர்சித்த சசிகலா, இந்த நிலைமைகளுக்கெல்லாம் காரணம் ஒன்றே ஒன்றுதான். அவர் வேறு யாருமில்லை. தான் மட்டும்தான் அதிமுக என்று தம்பட்டம் அடித்துக்கொண்டு தனக்கு தானே தலைவராக அறிவித்துக் கொண்டவர் தான் என எடப்பாடி பழனிசாமியை சாடியுள்ளார்.
சட்டசபை தேர்தலில் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து, தனி அணியாகப் போட்டியிட்டு 'எதிரிகளையும் துரோகிகளையும்' வீழ்த்த வேண்டும் என மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா திட்டமிட்டிருந்த நிலையில், இன்று காலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ஓபிஎஸ் திமுகவில் இணைந்தார். இது சசிகலா தரப்புக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் களத்தில் பல்வேறு அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் டி.டி.வி.தினகரன் தலைமையிலான அமமுக, அதிமுக - பாஜக கூட்டணியில் இணைந்தது. எடப்பாடி பழனிசாமியை துரோகி எனக் கூறி வந்த தினகரன், அவருக்கு அருகிலேயே அமர்ந்து பேட்டி கொடுத்தார்.
அதிமுக ஒருங்கிணைப்பு என்ற முழக்கத்தை ஓ.பன்னீர்செல்வம் தொடங்கியபோது அவருக்கு ஆதரவான நிலைப்பாட்டை டி.டி.வி.தினகரன், சசிகலா எடுத்தனர். ஆனால், சசிகலா முடிவுக்கு எதிராக டி.டி.வி.தினகரன், அதிமுக கூட்டணியில் இணைந்தார். இந்நிலையில், சசிகலா தனிக் கட்சி தொடங்கி உள்ளார். கட்சிப் பெயரை விரைவில் அறிவிப்பேன் எனக் கூறியுள்ளார்.
புதிய கட்சி தொடங்கும் சசிகலா, ஓபிஎஸ்ஸையும் தன் பக்கம் சேர்த்துக்கொள்ள திட்டமிட்டார். தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் தனது பலத்தைக் காட்ட தயாராகி வந்தார். இந்தச் சூழலில் ஓபிஎஸ், திமுகவில் இணைந்துள்ளது சசிகலாவை டென்ஷன் ஆக்கியுள்ளது. ஓபிஎஸ்ஸின் முடிவு துரதிருஷ்டவசமானது என சசிகலா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சசிகலா தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழக முன்னாள் முதலமைச்சரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த முன்னோடியும், சட்டமன்ற உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் இந்த முடிவு மிகவும் துரதிருஷ்டவசமானது. தமிழகத்திலிருந்து அகற்றப்படவேண்டிய ஒரு தீய சக்தியாக திமுக விளங்கும் நிலையில் தாய் கழகம் என்று நினைத்து கொண்டு திமுகவில் தங்களை இணைத்துக்கொள்வது ஒரு தவறான முடிவாகத்தான் அமைந்துள்ளது.
ஆனால் இந்த நிலைமைகளுக்கெல்லாம் காரணம் ஒன்றே ஒன்றுதான். அவர் வேறு யாருமில்லை. தான் மட்டும்தான் அதிமுக என்று தம்பட்டம் அடித்துக்கொண்டு தனக்கு தானே தலைவராக அறிவித்துக் கொண்டவர்கள், தன்னை சுற்றியுள்ளவர்களையும் ஏமாற்றிக் கொண்டிருப்பவர்கள், திமுகவினரின் முழு கட்டுப்பாட்டில் இருந்து கொண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள அனைவரையும் வெளியேற்றி விட்டு எம்ஜிஆர், ஜெயலலிதா அவர்களின் கொள்கைகளுக்கு விரோதமாக தொடர்ந்து செயல்பட்டுவரும் துரோகிகளின் அழிவுகாலம் நெருங்கிவிட்டது. இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் எனது தலைமையில் புரட்சித்தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களும், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழிவந்த சிங்கங்களும் எதிரிகளையும் துரோகிகளையும் வீழ்த்துவது உறுதி" எனச் சூளுரைத்துள்ளார்.
2017 ஆம் ஆண்டு ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தியபோது அவரது செயல்பாட்டை விமர்சித்த சசிகலா, ஓ.பன்னீர்செல்வமும் மு.க.ஸ்டாலினும், ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டும் சிரித்து கொண்டும் இருந்தனர் எனக் கூறி இருந்தார். இப்போது ஓபிஎஸ் திமுகவில் இணைந்துள்ள நிலையில், சசிகலாவின் பழைய பேச்சு வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
-
கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஷாக் கொடுத்த வேலுமணி.. அதிமுகவுக்கு தாவிய திமுக கவுன்சிலர்! -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
எடப்பாடியை சந்தித்ததுமே மனம் மாறிய பூவை ஜெகன்மூர்த்தி.. அதிமுக கூட்டணியில் தான் போட்டி என அறிவிப்பு -
"சிதமுக-விற்கு லக்".. அதிமுக கூட்டணியில் புதிய கட்சி.. ஒரு தொகுதியை ஒதுக்கிய எடப்பாடி பழனிச்சாமி! -
தமாகா வேட்பாளர்கள் பெயர்களை அறிவித்த ஜிகே வாசன்! தாமரை சின்னம்.. 5 தொகுதிகளில் கடும் சவால்! -
அதிமுக கூட்டணியில் தாமரையின் '32'.. 2021 புள்ளி விவரம் என்ன.. பாஜகவினர் அறிய வேண்டியவை -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
அன்று ஸ்டாலின்.. இன்று அமைச்சர் சக்கரபாணியை எதிர்த்து.. ஒட்டன்சத்திரத்தில் களமிறங்கும் விடியல் சேகர் -
சென்னை அதிமுக வேட்பாளர்கள் யார்? 12 தொகுதிகளின் பெயர்கள் மட்டும் மிஸ்ஸிங்.. எடப்பாடி கணக்கு என்ன? -
ஒன் மேன் ஆர்மி.. நானே செலவெல்லாம் பார்த்துக்கிறேன்.. அமித் ஷாவிடம் சொன்ன எடப்பாடி.. என்னாச்சு? -
“வருத்தத்தில் இருக்கிறேனா? வதந்தியை பரப்பாதீங்க.. நம்பிக்கை இருக்கு!” - சீனுக்குள் வந்த கவுதமி -
டிக் அடித்த எடப்பாடி.. 2வது கட்ட வேட்பாளர் லிஸ்டை வெளியிடாதது ஏன்? பின்னணியில் மாஸ்டர் பிளான்!












Click it and Unblock the Notifications