மகள் திருமண வரவேற்பில்.. சசிகலாவின் கையை "அழுத்தி பிடித்த" தினகரன்.. இனி எல்லாம் சுபம் தானாம்..!
டிடிவி தினகரன் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சசிகலா கலந்து கொண்டார்
சென்னை: இன்று காலை தஞ்சாவூரில் டிடிவி தினகரன் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.. இதில் சசிகலா பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் 2 விஷயங்கள் நம் கவனத்தை ஈர்த்து வருகிறது.
டிடிவி தினகரன் மகள் ஜெயஹரிணி, காங்கிரஸ் கட்சியின் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணசாமி வாண்டையார் மகன் ராமநாத துளசி ஐயா திருமண வரவேற்பு நிகழ்ச்சி தஞ்சாவூர் அருகே உள்ள பூண்டியில் தற்போது நடந்து வருகிறது.
இதில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து தஞ்சாவூருக்கு கிளம்பிவிட்டார் சசிகலா.. அருளானந்த நகர் அருகே பரிசுத்தம் நகரில் உள்ள தனக்கு சொந்தமான பங்களாவில் தங்கியிருக்கிறார்.

வாண்டையார்
தமிழ்நாடு முழுவதும் ஒரு வாரக் கால சுற்றுப் பயணத்தை அவர் தொடங்கி உள்ள நிலையில், முதலாவதாக தஞ்சைக்கு தான் வந்துள்ளார்.. வல்லம் பகுதியில் அவருக்கு மலர் தூவி உற்சாக வரவேற்பு தரப்பட்டது.. இன்று காலை காலை 11 முதல் 3 மணி வரை இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. கிருஷ்ணசாமி வாண்டையார் வீட்டு நிகழ்ச்சி என்றாலே சுற்றுவட்டாரத்தில் படுபேமஸ்.. டைரக்டர் சங்கர் படம் போல பிரம்மாண்டமாக நிகழ்ச்சிகள் இருக்கும்.. அப்படித்தான், பூண்டி புஷ்பம் கல்லூரில் வளாகத்தில் இதற்கான பிரம்மாண்டமான ஏற்பாடுகள் கடந்த சில நாட்களாகவே நடந்து வந்தது.

தொற்று
தொற்று பரவல் காரணமாக, திருவண்ணாமலையில் நடந்த திருமணத்துக்கு அதிக நபர்களை அழைக்க முடியாமல் போய்விட்டது.. அதனால் வரவேற்பையாவது சிறப்பாக செய்ய வேண்டும் என்று இரு குடும்பத்தினரும் முடிவு செய்திருந்தனர்.. அதுமட்டுமல்ல, புரட்டாசி மாதம் விரதம் கடைபிடிக்கப்படுவதால் பெரும்பாலானோர் அசைவ உணவு சாப்பிடமாட்டார்கள் என்பதால்தான், ஒரு மாதத்திற்கு பிறகு வரவேற்பு நிகழ்ச்சி நடத்த முடிவானது.

ஆடுகள்
அதிக கூட்டம் இருக்கும் என்பதால் ஆயிரக்கணக்கானோர் சாப்பிடக்கூடிய வகையிலான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.. சுமார் 1,000 கிடா ஆடுகளை வெட்டி பிரியாணி வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.. இதற்காகவே சுமார் 600க்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் வந்துள்ளனராம்.. அவர்கள்தான் நேற்றில் இருந்து கல்யாண வீட்டில் பம்பரமாக சுற்றி சுழன்று கொண்டிருக்கிறார்கள்... இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் சசிகலா கலந்து கொண்டு மணமக்களை ஆசீர்வதித்தார்.. இன்று காலை சரியாக 11 மணிக்கு மண்டபத்திற்கு காரில் வந்து சசிகலா வந்திறங்கினார்..

ஜெயலலிதா
ஜெயலலிதா பிரச்சாரத்துக்கு பயன்படுத்தும் அதே காரில் வந்தார்.. அதேபோல அதிமுக கொடியும் காரில் கட்டப்பட்டிருந்தது.. சென்னையில் இருந்து நேற்று இந்த காரில்தான் கிளம்பினார்... தி.நகர் வீட்டில் இருந்து கிளம்பியபோதே சசிகலாவுக்கு, அவரது ஆதரவாளர்கள் ஆரத்தி எடுத்து வழியனுப்பி வைத்தனர்.. அதிமுக கொடி பயன்படுத்தக்கூடாது என்று ஜெயக்குமார் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்துவரும் நிலையில், எதைபற்றியும் கண்டுகொள்ளாமல், கொடியை பறக்கவிட்டுதான் காரில் பயணித்தார்.. தஞ்சாவூர் வந்து சேரும்வரை, வழியெல்லாம் ஆங்காங்கே தொண்டர்களையும் சந்தித்து பேசியபடி பயணித்துள்ளார்.

பயணம்
சமீப காலமாகவே டிடிவி தினகரனுக்கும் சசிகலாவுக்கும் ஏதோ கருத்து மோதல் உள்ளதாகவும், அதனால்தான் அமமுகவை சசிகலா இதுவரை கண்டுகொள்ளவே இல்லை என்றும் ஒரு பேச்சு உள்ளது.. சசிகலா நினைத்திருந்தால், சட்டசபை தேர்தலில் தினகரனுக்கு ஆதரவு தந்திருக்க முடியும், குறைந்தபட்சம் தென் மாவட்டங்களுக்கு பிரச்சாரம் செய்து, அமமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு தந்து, தான் சார்ந்த சமூக ஓட்டுக்களையாவது பெற்று தந்திருக்க முடியும்.. ஆனால், சசிகலா வாயே திறக்கவில்லை.. தினகரனும் அவரை வற்புறுத்தவில்லை.

தினகரன்
அதனால்தான் சித்தி மீது தினகரன் அதிருப்தியில் உள்ளதாக கூறப்பட்டது.. அதேபோல தினகரனின் போக்கும் சசிகலாவுக்கு திருப்தியை தரவில்லை என்று கிசுகிசுக்கப்பட்டது.. இப்படி எத்தனையோ வதந்திகள், புரவிகள் நிலவி வந்த நிலையில், அத்தனைக்கும் இன்றைய நிகழ்வு ஒரு சான்றாக திகழ்கிறது.. வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த சசிகலாவை வரவேற்று, அவரது கைகளையும் இறுகப்பிடித்து கொண்டார் தினகரன்.. அந்த இறுக்கத்தின் அழுத்தம், இருவருக்குமான புரிதலையும் இணக்கத்தையும் வெளிப்படுத்துவதாகவே உள்ளது.

ஓபிஎஸ்
அமமுகவை சசிகலா கண்டுகொள்ளாவிட்டாலும், கைவிட மாட்டார் என்பதையும் உணர்த்துவதாகவே உள்ளது.. அதிமுகவில் சசிகலாவை இணைப்பது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் இடையே மாறுபட்ட கருத்து நிலவி வரும் இந்த சூழலில், "பன்னீர்செல்வம் எப்பொழுதுமே நிதானமாகத் தான் பேசுவார், சரியாகத்தான் பேசி இருக்கிறார். நிதானமாக யோசித்து சரியான கருத்தை சொல்லி இருக்கிறார்" என்று தினகரன் கருத்து கூறியுள்ளது அரசியல் களத்தை சூடாக்கி வருகிறது... இப்படிப்பட்ட தருணத்தில் சசிகலா அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருப்பதும், ஜெயலலிதாவின் பிரச்சார காரில் அதிமுக கொடியை கட்டி கொண்டு கிளம்பியிருப்பதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications