சசிகலா அதிமுக பொதுச்செயலாளர்- அதிமுக கொடியை பயன்படுத்த உரிமை உள்ளது- வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன்
சென்னை: சசிகலா அதிமுகவின் உறுப்பினர்; அதிமுக கொடியை பயன்படுத்த உரிமை உள்ளது என அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சசிகலா 4 ஆண்டு சிறை தண்டனை பெற்றார் . பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் 4 ஆண்டுகாலம் சிறை தண்டனையை நிறைவு செய்துள்ளார் சசிகலா.

இதனை தொடர்ந்து பெங்களூருவில் ஒரு வாரம் ஓய்வெடுத்த அவர் இன்று காலை தமிழகம் புறப்பட்டார். சசிகலா அதிமுக கொடியுடனான ஜெயலலிதாவின் காரில் தமிழகம் நோக்கி புறப்பட்டார். ஆனால் கிருஷ்ணகிரி மாவட்ட போலீசார் அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்த கூடாது என தடை விதித்தனர்.
இதனால் தமிழக எல்லைக்குள் வந்த பின்னர் அதிமுக கொடி இல்லாத காரில் ஏறி சென்னை நோக்கி பயணித்தார் சசிகலா. இது தொடர்பாக சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் கூறுகையில், கர்நாடகாவில் அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்த எந்த ஒரு கெடுபிடியும் இல்லை.
அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது என்பதற்காக நீதிமன்றத்துக்கு செல்லாமல் போலீசாரை ஏன் தமிழக ஆட்சியாளர்கள் பயன்படுத்துகின்றனர்? சசிகலா அதிமுக உறுப்பினர்தான். அதிமுகவின் பொதுச்செயலாளர் என்ற உரிமை தொடர்பாக சசிகலா தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.
அப்படியான நிலையில் சசிகலாவுக்கு அதிமுக கொடியை பயன்படுத்தும் உரிமை உள்ளது. இதனை மீறி போலீசார் தடுத்தால் சட்டப்படி எதிர்கொள்வோம் என்றார்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications