சசிகலாவிற்கு எதிரான அன்னிய செலாவணி மோசடி வழக்கு! விசாரணையை விரைந்து முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: சசிகலாவிற்கு எதிரான அன்னிய செலாவணி மோசடி வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்க சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெ.ஜெ. டிவிக்கு வெளிநாட்டில் இருந்து உபகரணங்கள் வாங்கியதில் மோசடி செய்ததாக அன்னிய செலாவணி மோசடி சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை, எழும்பூர் பொருளாதார குற்ற வழக்குகளுக்கான நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் பட்டியலில் முதல் எதிரியாக ஜெ.ஜெ.தொலைக்காட்சி, இரண்டாவது எதிரியாக தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் பாஸ்கரன், மூன்றாவது எதிரியாக தொலைக்காட்சி தலைவர் மற்றும் இயக்குனர் சசிகலா எனக் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், எதிரிகள் பட்டியலில் தன்னுடைய பெயரை முதல் எதிரியாக மாற்றியதை எதிர்த்து சசிகலா தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் எம்.ஜோதிராமன் அமர்வு, வழக்கு பட்டியலில் முதல் எதிரியாக
மாற்றியதால் விசாரணையில் எந்த பாதிப்பும் இல்லை என கூறி சசிகலாவின் மனுவை தள்ளுபடி செய்தது.
மேலும், எழும்பூர் பொருளாதார குற்ற வழக்குகளுக்கான நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து விசாரிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என, சசிகலா உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டனர்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்











Click it and Unblock the Notifications