"முடிவு கட்டுவேன்.." மதுரை சுஜாதாவிற்கு போன் போட்ட சசிகலா.. சரமாரி குற்றச்சாட்டு.. கசிந்தது ஆடியோ!
சென்னை: அதிமுக மதுரை மாவட்ட நிர்வாகி சுஜாதா ஹர்ஷினியுடன் சசிகலா பேசும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுகவில் மிக கடுமையான உட்கட்சி பூசல் நிலவி வரும் நிலையில், தற்போது அடுத்தடுத்து சசிகலா ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வரிசையாக அடுத்தடுத்து பல்வேறு ஆடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. அதிமுக, அமமுக தொண்டர்களுடன் சசிகலா பேசும் அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கட்சிக்குள் மீண்டும் வருவேன்.. கண்டிப்பாக வருவேன்.. கொரோனாவிற்கு பின் வருவேன் என்று சசிகலா குறிப்பிடுவதாக இந்த ஆடியோவில் பதிவாகி உள்ளது. ஆனால் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியோ, சசிகலா அதிமுக உறுப்பினரே கிடையாது, அவரால் ஒன்றும் செய்ய முடியாது என்று அதிரடியாக சவால் விட்டு இருக்கிறார்.

சவால்
அதேபோல் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகமும், கறுவாடு மீன் ஆனாலும், சசிகலா அதிமுகவில் சேர முடியாது என்று அதிரடியாக கூறி உள்ளார். இந்த நிலையில் அதிமுகவினரின் விமர்சனங்களுக்கு சசிகலா பதில் அளித்துள்ளார். அதில், அதிமுக மதுரை மாவட்ட நிர்வாகி சுஜாதா ஹர்ஷினிக்கு போன் செய்த சசிகலா, அதிமுகவில் நிலவும் பிரச்சனை குறித்து பேசினார்.

பிரச்சனை
சசிகலாவிடம் அதிமுகவினர் குறித்து முறையிட்ட சுஜாதா ஹர்ஷினி, தனது போன்காலில் பல குற்றச்சாட்டுகளை அடுக்கி உள்ளார். அதில், உங்களை கட்சியில் சேர்க்க ஓபிஎஸ்ஸும், பையனும் பேசினார்கள்.. ஆனால் இவர் மட்டும் உங்களை கட்சிக்குள் சேர்க்கவே விடவில்லை. உங்களை உள்ளே விடாமல் தடுக்க இவர் மட்டும் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டார். இப்போ கூட நிறைய பேசுகிறார்கள்.

சின்னம்மா
சின்னம்மாதான் வர வேண்டும் என்று, சின்னம்மா எங்கம்மா என்று சொன்னவர் சிவி சண்முகம். ஆனால் இப்போது சசிகலாவை சேர்க்கவே கூடாது, எந்த காலத்திலும் வர கூடாது என்றுர் என்று சண்முகம் கூறுகிறார். நான் பேஸ்புக்கில் போட்ட பதிவுக்கு கூட எங்களை மிரட்டுகிறார்கள்.

வேண்டும்
அவர்கள் அழைத்தால் நாங்கள் ஏற்க வேண்டும், அவர்கள் வேண்டாம் என்றால் நாங்கள் ஏற்க கூடாது என்கிறார்கள். எங்களை அடிமை போல கட்சியில் நடத்துகிறார்கள், சாதி அரசியல் செய்கிறார்கள், என்று சுஜாதா ஹர்ஷினி என்ற அதிமுக நிர்வாகி அதில் பேசிய உள்ளார். இதற்கு பதில் அளித்த சசிகலா, நான் மீண்டும் வருவேன்; கட்சிக்குள் ஜாதி பார்ப்பது தவறு.

மீட்பேன்
நான் நிச்சயம் கட்சியை மீட்பேன். தலைவர் காலத்தில், அம்மா காலத்தில் கட்சியை நடத்தியது போல நான் நடத்துவேன். தொண்டர்களோடு இருப்பேன். தொண்டர்கள்தான் நமக்கு முக்கியம். எல்லாவற்றுக்கும் நான் முடிவு கட்டுவேன்.

கவலை வேண்டாம்
நீங்கள் கவலைபடாதீர்கள். தொண்டர்கள்தான் கட்சி என்று கருதுகிறேன் நான். மிக விரைவில் வந்து எல்லோரையும் சந்திப்பேன். நாம் கட்சியை மீட்பேன், ஆட்சிக்கும் வருவோம் கவலைப்பட வேண்டாம், என்று சசிகலா அந்த ஆடியோவில் குறிப்பிட்டுள்ளார். சசிகலாவின் இந்த புதிய ஆடியோ பெரிய அளவில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications