ஜெயலலிதா ஆட்சியில் பெண் பிள்ளைகளுக்கு இப்படி நடந்திருக்குமா? “கொடுமை”.. திமுக அரசை விமர்சித்த சசிகலா
சென்னை : ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் மாணவ-மாணவிகள் மிகவும் பாதுகாப்போடு இருந்தனர். ஆனால் இன்றைய திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் எங்குமே பாதுகாப்பு இல்லாத அவல நிலை ஏற்பட்டுள்ள என சசிகலா விமர்சித்துள்ளார்.
கலாஷேத்ரா கல்லூரியில் பேராசிரியர்கள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டிருக்கும் நிலையில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாததைக் கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில், கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக, மாணவிகள் போராடி வரும் நிலையில் தமிழ்நாடு அரசு உடனே விசாரித்து, தவறு இழைத்தவர்களுக்கு கடுமையான தண்டனையை பெற்று தர வேண்டும் என சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாலியல் குற்றச்சாட்டு
இதுதொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னையில் கலாஷேத்ரா அறக்கட்டளை சார்பில் செயல்பட்டு வரும் கலாஷேத்ரா ருக்மணி தேவி கலை கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிப்பதாக அங்குள்ள பேராசிரியர் உள்பட நான்கு நபர்கள் மீது குற்றம்சாட்டி இக்கல்லூரியில் படிக்கும் மாணவிகள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மாணவிகளுக்கு ஏற்பட்டுள்ள இந்த அவல நிலையை அறிந்து நான் மிகவும் வருத்தமுற்றேன். தமிழ்நாடு அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு உரிய விசாரணை மேற்கொண்டு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு கடுமையான தண்டனையை பெற்றுத் தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

பிரபலமான கல்வி நிறுவனத்திலேயே
அதேசமயத்தில் தங்கள் பிரச்சனையை கண்டு பயந்து அமைதியாக இருந்துவிடாமல், தைரியமாக போராட துணிந்த அத்துனை மாணவிகளுக்கும் எனது மனப்பூர்வமான வாழ்த்துகளை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். கலாஷேத்ரா கல்லூரியானது மிகவும் பிரசித்திபெற்ற ஒரு கல்வி நிறுவனமாக இருந்து வந்துள்ளது. இது போன்ற கல்வி நிறுவனத்திலேயே, மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை தருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருப்பது மிகவும் துரதிஷ்டவசமானது. மாணவிகளின் பாதுகாப்பு என்பது மிகவும் அத்தியாவசியமானது. மாணவிகள் கல்வி பயில தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தரவேண்டிய கடமை ஒவ்வொரு கல்வி நிறுவனத்திற்கும் உள்ளது. இதனை சரியாக கல்வி நிறுவனங்கள் கடைபிடிக்கின்றனவா? மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படுகிறதா? என்பதையெல்லாம் தமிழ்நாடு அரசு முறையாக ஆய்வு செய்திட வேண்டும்.

ஜெயலலிதா ஆட்சியில்
ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் மாணவ-மாணவிகள் மிகவும் பாதுகாப்போடு இருந்தனர். ஆனால் இன்றோ தமிழ்நாட்டில் எங்குமே பாதுகாப்பு இல்லாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது மிகவும் கவலை அளிக்கிறது. பெண்களை கடவுளாக வணங்குகின்ற நம் தமிழ் மண்ணில், பெண்ணினத்திற்கு உரிய பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன். எனவே, திமுக தலைமையிலான அரசு சட்டம் ஒழுங்கை சரியாக பாதுகாப்பதன் மூலம் இதுபோன்ற தவறுகள் சமூகத்தில் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளமுடியும்.

அரசின் கடமை
மேலும், தமிழ்நாட்டில் செயல்பட்டுக்கொண்டு இருக்கும் அனைத்து வகையான கல்வி நிறுவனங்களிலும் படிக்கின்ற மாணவச் செல்வங்களை பாதுகாக்கின்ற பொறுப்பும், கடமையும் தமிழக அரசுக்கு உள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். எனவே, தமிழ்நாடு காவல்துறை, கல்லூரி மாணவிகளிடமிருந்து புகார்கள் ஏதும் வரவில்லை என்பதை சொல்லிக்கொண்டு இருக்காமல், கலாஷேத்ரா கல்லூரியில் உள்ள மாணவிகளின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு, நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையோடும் உரிய விசாரணையை மேற்கொண்டு, தவறு இழைத்தவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு கடுமையான தண்டனையைப் பெற்று தரவேண்டும் என வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்" என சசிகலா தெரிவித்துள்ளார்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications