Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போட்டு தந்த சோ- ஜெயலலிதா என்னை துரத்தி அடிக்கவில்லை- வாசல் வரை வழி அனுப்பி வைத்தார்- சொன்னது சசிகலா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2011-ம் ஆண்டு ஜெயலலிதாவின் போயஸ் கார்டனில் இருந்து சசிகலா வெளியேற்றப்பட்டதன் பின்னணி என்ன என்பது குறித்து நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா விவரித்துள்ள தகவல்கள் வெளியாகி உள்ளன.

நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா அளித்த வாக்குமூலத்தில் இது தொடர்பாக இடம் பெற்றுள்ளதாவது: 1990-ம் ஆண்டில் இருந்து 2011 இறுதி வரையில் எனக்கும் ஜெயலலிதாவுக்கும் எந்த ஒரு பிரச்சனையும் இருந்தது இல்லை.

Sasikala explains Why She left from Jayalalthaas Poes Garden Bungalow in 2011?

2011 இறுதியில் ஜெயலலிதாவிடம் சோ ராமசாமி தவறாக கொடுத்த தகவல்கள், அவரது தூண்டுதலால் செயல்பட்ட ஒரு சிலரின் நடவடிக்கையால் ஜெயலலிதா என்னை சோ முன்னிலையில் அழைத்தார். அப்போது, சோ சில தகவல்களை சொல்கிறார்.. அதுபற்றி நான் முழுமையாக உனக்கு பிறகு சொல்கிறேன்.. அதுவரை நீ தி.நகரில் இரு என்றார்.

ஜெயலலிதாவின் சொல்லுக்கு எப்போதும் மறுபேச்சு இல்லாமல் கட்டுபடும் நபராகிய நான், சரி என்று சொன்னேன். நான் அங்கிருந்து கிளம்புவதற்கு முன்பாக, போயஸ் கார்டனில் உள்ளவர்களை அழைத்து ஜெயலலிதாவுக்கான தேவைகள் எனன் என்பதையும் எப்படி செய்ய வேண்டும் என்பதையும் கூறிவிட்டு வாகனத்தில் கிளம்பினேன்.

ஜெயலலிதா வாசல்வரை வந்து கையசைத்து என்னை அனுப்பி வைத்தார். அப்போது பணியில் இருந்த அனைவருக்கும் இந்த விவரம் தெரியும். என் குடும்பம் பற்றி பல அவதூறான தகவல்களை ஜெயலலிதாவிடம், சோவும் அவருடன் தொடர்பில் இருந்த நபர்களும் கூறினர். அதனால் என் குடும்பத்தினர் சிலர் மீது பல வழக்குகள் போடப்பட்டன. ஆனால் சிறிது நாட்களுக்குள் என்னிடம் சகஜமாக தொலைபேசியில் ஜெயலலிதா பேசினார்.

2011 ஆரம்பம்/ இடையிலான கால கட்டத்தில் அதிமுக நலனுக்கு எதிரான செயல்பட்ட நபர்களை ஜெயலலிதா ஒதுக்கி வைத்தார். அவர்கள் இந்த சமயத்தை பயன்படுத்தி எனக்கு எதிராக பல பொய் செய்திகளை பரவலாக பரப்பினர். ஆனால் அந்த செய்திகள் எல்லாம் பொய் என ஜெயலலிதா தெரிந்து கொண்டார்.

பின்னர், எனக்கு வந்தது எல்லாம் தவறான தகவல்கள்.. நீ போயஸ் தோட்டத்துக்கு வா என ஜெயலலிதா அழைத்தார். இதை சோவிடம் தெரிவித்த போது, 30 ஆண்டுகளாக உங்கள் உடன் இருந்த சசிகலாவை நீங்கள் வெளியேற்றியது தவறு என பேசுவார்கள்; ஆகையால் சசிகலா மன்னிப்பு கடிதம் கொடுத்தது போல கடிதம் வாங்கி பின் சேர்த்து கொள்ளுங்கள் என்றார். இதனால் சோ எழுதி கொடுத்த மன்னிப்பு கடிதத்தில் கையெழுத்திட்டுக் கொடுத்தேன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+