Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிமுக கொடியோடு சசிகலா.. எடப்பாடி-ஓபிஎஸ் கூட அமர்ந்த ஸ்டாலின்.. மதுசூதனன் வீட்டில் பரபர காட்சிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக அவைத் தலைவர் மறைந்த மதுசூதனன் உடலுக்கு சசிகலா இன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் அதிமுக கொடி பொருத்திய காரில் சென்று பரபரப்பை ஏற்படுத்தினார்.

Recommended Video

    Who Is Madhusudhanan | AIADMK | Biography | Oneindia Tamil

    அதிமுக அவைத் தலைவராக இருந்த மதுசூதனன், கொரோனா தொற்றாலும் பிறகு, சிறுநீரக பாதிப்பாலும் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.

    80 வயதான மதுசூதனன், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார். இதையடுத்து, இன்று மாலை 4 மணி அளவில் மூலக்கொத்தளம் மின்மயானத்தில் மதுசூதனன் உடல் தகனம் செய்யப்படுகிறது..

    மன வேதனையடைந்த அதிமுக தலைமை

    மன வேதனையடைந்த அதிமுக தலைமை

    மதுசூதனன் மறைவுக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதிமுக அவைத் தலைவரும், கட்சியின் மூத்த முன்னோடியும், முன்னாள் அமைச்சருமான இ.மதுசூதனன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தோம். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உற்றார் உறவினர்களுக்கும், இந்தத் துயரத்தைத் தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும், ஒன்றரைக்கோடி கட்சித் தொண்டர்களின் சார்பிலும், எங்கல் சார்பிலும் எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திக்கிறோம்.

    அதிமுக அஞ்சலி

    அதிமுக அஞ்சலி

    இ.மதுசூதனின் மறைவையொட்டி இன்று முதல் 7ஆம் தேதி வரை மூன்று நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும். அதேபோல், தமிழ்நாடு மற்றும் கட்சி அமைப்புகள் செயல்பட்டுக்கொண்டிருக்கும் பிற மாநிலங்களிலும கட்சிக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் என்பதையும் அனைத்து நிகழ்ச்சிகளும் மூன்று நாள்களுக்கு ரத்து செய்யப்படுகிறது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.

    அதிமுக கொடி பொருத்திய கார்

    அதிமுக கொடி பொருத்திய கார்

    இதனிடையே, தண்டையார்பேட்டையிலுள்ள இல்லத்தில் மதுசூதனன் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு சசிகலா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். தி.நகர் இல்லத்தில் இருந்து புறப்படும்போதே அதிமுக கொடி பொருத்திய காரில்தான் சசிகலா புறப்பட்டார். மதுசூதனன் வீட்டுக்கு சசிகலா அதிமுக கொடி கட்டிய காரில் சென்று சேர்ந்தார்.

    அதிமுக தொண்டர்கள் செயல்பாடு

    அதிமுக தொண்டர்கள் செயல்பாடு

    இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், அதிமுக தொண்டர்கள் சசிகலா வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அவர் வரும்போது சாலையில் இடையூறு இல்லாமல் அவற்றை சரி செய்யும் பணிகளையும் அதிமுக தொண்டர்கள் செய்தனர். மதுசூதனன் உடலுக்கு சசிகலா அஞ்சலி செலுத்தியபோதும் சசிகலா ஆதரவாளர்கள் அவரை சூழ்ந்து நின்று பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தியிருந்தனர். மேலும், அதிமுக தொண்டர்களும் கூட அவரது வருகைக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்பதை கவனிக்க முடிந்தது.

    கிளம்பி சென்ற ஓபிஎஸ், எடப்பாடி

    கிளம்பி சென்ற ஓபிஎஸ், எடப்பாடி

    முன்னதாக, மதுசூதனன் அப்பல்லோவில் சிகிச்சை பெற்றபோதும் அதிமுக கொடி பொருத்திய காரில்தான் சசிகலா சென்றார். அப்போது அங்கே இருந்த எடப்பாடி பழனிச்சாமி வெளியேறிவிட்டார். இருவரும் ஒரே நேரத்தில் அப்பல்லோ மருத்துவமனைக்குள் சந்திக்கும் சூழல் இதனால் தவிர்க்கப்பட்டது. இன்றைய தினமும், சசிகலா வருகைக்கு 1 மணி நேரம் முன்பாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் இருவரும் அங்கேயிருந்து கிளம்பிச் சென்றுவிட்டனர். இதனால் சசிகலா வந்தபோது அதிமுக சீனியர் தலைவர்கள் யாரும் மதுசூதனன் வீட்டில் இல்லை.

     சசிகலாவை அதிமுகவில் சேர்க்க ஓபிஎஸ்சும் எதிர்ப்பு

    சசிகலாவை அதிமுகவில் சேர்க்க ஓபிஎஸ்சும் எதிர்ப்பு

    சசிகலாவை அதிமுகவில் சேர்க்க எடப்பாடிதான் எதிர்க்கிறார், ஓபிஎஸ் ஆதரவு உள்ளது என்ற யூகங்கள் அரசியலில் சுற்றி வந்தன. ஆனால் கடந்த சில நாட்கள் முன்பாக, டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை எடப்பாடி பழனிச்சாமி மற்றும், ஓபிஎஸ் சந்தித்து விட்டு வந்த பிறகு, பன்னீர்செல்வம் அளித்த பேட்டி முக்கியமாக கவனிக்கப்பட்டது. அதாவது அவர் சசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார். தர்மயுத்தம் காலத்தில் சசிகலாவுக்கு எதிராக எப்படி ஆவேசம் காட்டினாரோ அதே ஆவேசம், ஓபிஎஸ் பேட்டியில் இருந்தது. எனவே சசிகலா அதிமுகவில் சேருவதற்கு வாய்ப்பு இல்லை என்ற நிலைதான் இப்போது உருவாகியுள்ளது.

    ஸ்டாலின் அஞ்சலி

    ஸ்டாலின் அஞ்சலி

    இதனிடையே, மதுசூதனன், உடலுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், முன்னாள் அதிமுக சீனியர் அமைச்சர்கள், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் அப்போது அங்கே இருந்தனர். ஸ்டாலின் சில நிமிடங்கள் அங்கேயிருந்த இருக்கையில் அமர்ந்திருந்தார். அப்போது, ஸ்டாலினின் இடதுபுறம் ஓபிஎஸ், வலது புறம் எடப்பாடி பழனிச்சாமி அமர்ந்திருந்தனர்.

    சசிகலா ஆடியோ

    சசிகலா ஆடியோ

    இதனிடையே நேற்று, சசிகலா ஒரு ஆடியோ பதிவு வெளியிட்டிருந்தார். அதில் அவர், மதுசூதனன் அவர்களின் மறைவு அதிமுகவுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு, தலைவர் காலத்திலும் சரி, அம்மா காலத்திலும் சரி, எத்தனையோ சோதனையான காலத்திலும் துணை நின்றவர். தலைவரிடத்திலும், அம்மாவிடத்திலும் மிகுந்த பாசம் கொண்டவர். தலைவர் ஆட்சிக்காலத்தில் சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், அம்மாவின் ஆட்சிக்காலத்தில் அமைச்சராகவும், 2007 ஆம் ஆண்டு முதல் அவை தலைவராக இருந்தபோதிலும் தன்னை ஒரு எளிய தொண்டனாகவே வாழ்ந்து காட்டியவர். மதுசூதனைன் மறைவு செய்தி கேட்டு துயரமும், மிகுந்த வேதனையும் அடைந்தேன். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+