நான் எப்போதும் ஜெயலலிதாவின் அரசியல் விஷயங்களில் தலையிட்டதே இல்லை.. சொல்வது சசிகலா!
சென்னை: நான் எப்போதுமே அக்காவின் அரசியல் விஷயங்களில் தலையிட்டதே இல்லை என சசிகலா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: தமிழக நலனுக்காகவும் மகளிரின் மேம்பாட்டுக்காகவும் மாணவர்களின் நலனுக்காகவும் தொழிலாளர்கள் நலன் மற்றும் வர்த்தகம் தழைத்து ஓங்க, உறுதியான நிலைபாட்டுடன் திறமையான ஆட்சியை தமிழகத்தில் அக்கா புரிந்து வந்தார்.
மத்திய அரசின் பல திட்டங்கள், தமிழக மக்களின் நலனை பெருமளவில் பாதிக்கும் எனும் சூழலில் அவ்வகை திட்டங்களை அக்கா பலமாக எதிர்த்து வந்தார். நான் அக்காவின் அரசியல் மற்றும் நிர்வாக விஷயங்களில் எப்போதும் தலையிட்டதே இல்லை. அக்காவே அதிகாரிகளை அழைத்து விவாதித்து உரிய ஆலோசனைகளை வழங்குவார்.

கட்சி ரீதியான விஷயங்கள்
கட்சி ரீதியான விஷயங்களை என் மூலமாக இரண்டாம் கட்ட தலைவர்களுக்கு அக்கா விவரம் கூற சொல்வார். அக்காவின் அறிவுறுத்தலின் பேரில் அது போன்ற கட்சி ரீதியான விஷயங்களில் நான் செயல்படுவேன். தமிழக மக்களின் நலனை பேணி பாதுகாக்க தனது உடல்நிலையை சற்றும் பொருட்படுத்தாமல் அக்கா தனது அயராத பணியின் காரணமாக தமிழக முதல்வராக சிறப்பாக செயல்பட்டு வந்தார்.

தளராத மனம்
அக்கா அதிக மன உறுதியும், தளராத மனமும் பிடிவாத குணமும் கொண்டவர். தான் எடுத்த முடிவிலிருந்து அதிகம் மாறாதவர். நான் என்னால் இயன்றவரை அக்காவின் நலனை பேணி பாதுகாக்க என் வாழ்க்கையையே அர்ப்பணித்தவள். 2014 இறுதிக்கு பிறகு அக்கா உடல்நலமில்லாமல் போன விஷயம் அக்கா அவர்களிடம் பணியாற்றிய அனைத்து அதிகாரிகள் காவல் துறை தனிபாதுகாப்பு அதிகாரிகள், தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்கள் போன்ற அனைவருக்கும் நன்றாகவே தெரியும்.

ரத்த அழுத்தம்
அக்காவுக்கு ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை வியாதி போன்ற பிரச்சினைகள் இருந்து வந்ததால் நானும் அக்காவும் மூன்று மாதத்திறகு ஒரு முறை அப்பல்லோ மருத்துவமனையில் அனைத்து மருத்துவ பரிசோதனைகளையும் தொடர்ந்து எடுத்து வந்தோம். அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து போயஸ் தோட்ட இல்லத்திற்கு வந்து பரிசோதனைக்கான மாதிரிகளை எடுத்துச் செல்வார்கள். இவ்வாறு சசிகலா தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

ஆதிக்கம்
சசிகலாவின் குடும்பத்தினர் தமிழகம் முழுவதும் மண்டல வாரியாக ஆதிக்கம் செலுத்தினர் என்பது ஊரறிந்த விஷயம். சசிகலா கை காட்டும் நபருக்கே வார்டு கவுன்சிலர் பதவி முதல் அமைச்சர் பதவி வரை கிடைக்கும் என்பதும் அவரிடம் அதிமுக நிர்வாகிகள் விசுவாசமாக இருந்தனர். சசிகலா குடும்பத்தினரால் கொங்கு மண்டலத்தில் நிறைய நிர்வாகிகள் கோலோச்சினர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா!












Click it and Unblock the Notifications