முக்கிய ஆயுதத்தை கையில் எடுக்கும் சசிகலா?.. கை கோர்த்த தினகரன்.. அதிமுகவுக்கு நெருக்கடி?
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் இல்லாமல் கூடிய பொதுக் குழுக் கூட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுக்கும் நடவடிக்கையில் சசிகலா ஈடுபட போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெயலலிதா இறந்த பிறகு அதிமுக பொதுக் குழு கூட்டம் கூடி சசிகலாவை அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்தது. இதையடுத்து அதற்கான கோப்புகளையும் அவரது வீட்டுக்கே சென்று அவரிடம் மூத்த நிர்வாகிகள் ஒப்படைத்தனர்.
இதையடுத்து சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்றவுடன் கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதிமுக பெயரில் பொதுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுச் செயலாளர், துணை பொதுச் செயலாளர் ஆகிய பதவிகளை நீக்கிய அதிமுக நிர்வாகிகள், புதிதாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகளை உருவாக்கினர்.

ஹைகோர்ட்
இந்த கூட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை ஹைகோர்ட்டில் சசிகலாவும் டிடிவி தினகரனும் வழக்கு தொடர்ந்தனர். அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா உள்ள நிலையில் கட்சி விரோதமான செயல்பாடுகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வமும் அவருடன் இருந்த அமைச்சர்களும் நிர்வாகிகள் மேற்கொண்டதாக சசிகலாவும், டிடிவி தினகரனும் குற்றம்சாட்டியிருந்தார்கள்.

பொருளாளர்
அவைத் தலைவராக மதுசூதனன், பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் நியமிக்கப்பட்டதும் செல்லாது என அறிவிக்கக் கோரியும் வாதிட்டனர். அது போல் பொதுக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்கள் செல்லாது என அறிவிக்க வேண்டும். அது போல் கட்சியின் பொதுச் செயலாளர், துணை பொதுச் செயலாளர் ஆகிய பதவிகளிலிருந்து தங்களை நீக்கியது செல்லாது என அறிவிக்கக் கோரினர்.

ஆவணங்கள்
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கட்சி தொடர்பான அனைத்து ஆவணங்களையும் அதிமுக தலைமைக் கழகம் ஹைகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். இந்த வழக்கில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சுமார் 3 ஆண்டுகளுக்கு மேலாக இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.

அக்ரஹார சிறை
தற்போது சசிகலா பரப்பன அக்ரஹார சிறையிலிருந்து விடுதலையாகிவிட்டார். அவர் நாளை மறுநாள் சென்னை வருகிறார். அவர் அதிமுக பொதுச் செயலாளர் என்ற உரிமையுடன் விக்டோரியா மருத்துவமனையிலிருந்து பண்ணை வீட்டிற்கு சென்ற போது காரில் அதிமுக கொடியை பயன்படுத்தியிருந்தார்.

அதிமுகவுக்கு நெருக்கடி
தற்போது நாளை மறுநாள் தமிழகத்திற்கு வருகை தரும் சசிகலா தனது காரில் நிச்சயம் அதிமுக கொடியுடனே வருவார் என சொல்லப்படுகிறது. எனவே இந்த வழக்கை மீண்டும் தூசி தட்டி விசாரிக்க சசிகலாவும் தினகரனும் யோசித்து வருகிறார்களாம். இன்னும் சில மாதங்களில் தேர்தல் வரும் நிலையில் இந்த வழக்கால் அதிமுகவுக்கு நெருக்கடி ஏற்படலாம் என தெரிகிறது.
-
இனிமே சிங்கப் பாதை தான்..ஆக்ஷனுக்கு ரெடியான அதிமுக! திமிறி எழுந்த எடப்பாடி பழனிசாமி! கையில் லிஸ்ட்! -
ஐசியூவில் அதிமுக.. ஆபரேசனுக்கு தயாராவாரா எடப்பாடி? குறுக்கே ஆம்புலன்ஸோடு விஜய்! பரபர பாலிடிக்ஸ் -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
விஷப் பரிட்சைக்கு தயாரான எடப்பாடி! 5 தொகுதி இடைத் தேர்தல்.. அதிமுகவின் ’மாஸ்டர்’ பிளான் என்ன? -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
“ஸ்டாலின் விரும்பும் வரைதான் தவெக ஆட்சி நீடிக்கும்”.. ஒரே போடாக போட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்! -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே! எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் தலைவலி! கட்சி தாவ தயாராகும் தலைகள்! -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
அதிசயத்த பாருங்களேன்.. ஜெயா டிவில ஸ்டாலின் லைவ்! வெளியேறிய விவேக்! உள்ளே வந்த திவாகரன்! பெரிய சேஞ்ச்












Click it and Unblock the Notifications