முன்னாடி உள்ளதை தூக்கிடுங்க.. பின்னாடி இதை போடுங்க.. சசிகலாவிற்கு சீக்ரெட் அட்வைஸ்.. இனி அமோகம்தான்!
சென்னை: தொட்டதெல்லாம் தோல்வி.. போகிற பாதை எல்லாம் முட்டு சந்து என்பதால் கடும் விரக்தியில் இருக்கிறாராம் சசிகலா. ஏதாவது பண்ணி.. தமிழ்நாடு அரசியலில் மீண்டும் லைம்லைட்டில் வந்துவிட மாட்டோமா என்ற ஆசையில், வெறியில் சசி இருக்கிறாராம்.
இப்படிப்பட்ட நிலையில்தான் கஷ்டத்தில் இருந்த சசிக்கு முக்கியமான நபர் ஒருவர் கொடுத்த அட்வைஸ்.. அவரின் மனதை குளிர செய்துள்ளதாம். சென்னை வெயிலிலும் மனது குளிர்ந்த சசிகலா.. அந்த நபர் கொடுத்த அட்வைஸை அப்படியே பின்பற்றலாம் என்ற முடிவில் இறங்கி இருப்பதாக "மன்னை" வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அது என்ன அட்வைஸ்.. யார் அந்த அட்வைஸை கொடுத்தது.?

சசிகலா தோல்வி
சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்ததும் அவர் அதிமுகவை கைப்பற்றுவார், அதிமுகவில் மீண்டும் மிகப்பெரிய சக்தியாக உருவெடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சசிகலா எவ்வளவு முயன்றும் அதிமுகவில் இருக்கும் அவை கூட அவரால் அசைக்க முடியவில்லை. தேர்தல் வரும் வரை பாயிண்ட் வரட்டும் பாயிண்ட் வரட்டும் என்று இருந்தவர்.. தேர்தல் நேரத்தில்.. அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்தது பரபரப்பை கிளப்பியது.

தேர்தல் பிளான்
தேர்தலுக்கு பின்பாவது அதிமுகவை கைப்பற்றுவார் என்றால்.. ஆன்மீக பயணம் போனதோடு சரி.. அரசியலை எல்லாம் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. நீதிமன்ற வழக்கும் இதில் சசிகலாவிற்கு சதி செய்தது. சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது தவறு இல்லை என்று சென்னை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில் சசிகலாவிற்கான ஆதரவு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. முன்பு சசிகலாவிற்கு ஆதரவாக பேசி வந்த பலர் தற்போது மௌனம் ஆகி உள்ளனர்.

சசிகலா ஆதரவு
சசிகலாவும் அதிமுகவை எப்படி மீட்பது.. மீண்டும் எப்படி லைம் லைட்டிற்கு வருவது என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார்.ஒரு பக்கம் டிடிவி தினகரனுடன் கசப்பு காரணமாக அவரும் சசிகலாவிற்கு நேரடியாக பெரிய ஆதரவை கொடுக்கவில்லை. இந்த நிலையில்தான் சசிகலா நாளுக்கு நாள் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார். ஏன் சசிகலா வீட்டு முன் இருந்த கார்களின் எண்ணிக்கை கூட அப்படியே குறைந்துவிட்டதாம். இந்த நிலையில்தான் சசிகலா தனது குடும்ப ஜோசியர் ஒருவரை அணுகி இருக்கிறார்.

கடவுள் பக்தி
தீவிர கடவுள் பக்தி இருக்கும் அவர், தனது குடும்ப ஜோதியரிடம்.. எதுவும் நடக்க மாட்டேங்குது.. என்ன செய்வது என்று கேட்டு இருக்கிறாராம். அதற்கு அவரோ.. உங்கள் பெயரில் கூடுதலாக கடைசியில் ஒரு ஏ சேருங்கள் என்று கூறியதாக தெரிகிறது. அதோடு அப்பா, அம்மாவின் பெயர் கொண்ட விகே இன்ஷியலை தூக்கிவிட்டு, மறைந்த கணவர் நடராஜனின் பெயர் கொண்ட என் இன்ஷியலை போடுங்கள் என்றும் ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது.

ஆலோசனை என்ன?
இதை செய்தால் உங்களுக்கு தொட்டதெல்லாம் துலங்கும் என்று அவர் அட்வைஸ் செய்துள்ளாராம். இதை கேட்ட சசிகலா தரப்பும் செம ஹாப்பியில் இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் கோவில் ஒன்றில் வைத்து பெயரை மாற்றும் திட்டத்தில் அவர் இருக்கிறாராம். அதோடு பிரஸ் ரிலீஸ்களில் புதிய இனிஷியலில் அவரின் பெயர் வர வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications