நேரம் வந்துவிட்டது.. லகலக சசிகலா.. காரை திருப்ப போகும் ஓபிஎஸ்.. எதிர்பார்த்த நாள் நெருங்கிவிட்டதாமே!
பாஜகவுடன் நெருக்கமாக இருந்தும் கூட, இடைத்தேர்தல் என்று வந்தது பாஜக தரப்பு ஓ பன்னீர்செல்வம் வேட்பாளரை வாபஸ் வாங்கும்படியே வலியுறுத்தியது.
சென்னை: அதிமுகவில் எல்லாம் தனக்கு எதிராக திரும்பி உள்ள நிலையில் ஓ பன்னீர்செல்வம் விரைவில் சசிகலாவை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன் சசிகலாவே இதை வெளிப்படையாக குறிப்பிட்டு இருந்தார்.
அதிமுகவில் உட்கட்சி மோதல் ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் காரணமாக உச்சம் தொட்டு உள்ளது. தற்போது எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் கே.எஸ் தென்னரசு அதிமுகவின் பொது வேட்பாளர் ஆகி உள்ளார்.
அவருக்கு இரட்டை இலை சின்னமும் வழங்கப்பட்டு இருக்கிறது. இது ஓ பன்னீர்செல்வம் தரப்பிற்கு மிகப்பெரிய பின்னடைவை கொடுத்து உள்ளது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி தரப்பின் இந்த வெற்றியால் ஓ பன்னீர்செல்வம் 4 முக்கியமான சறுக்கல்களை சந்தித்து இருக்கிறார். சறுக்கல் 1 - ஓ பன்னீர்செல்வம் தனது வேட்பாளர் செந்திலை வாபஸ் வாங்க சொல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். இதனால் அவரும் வாபஸ் வாங்கிவிட்டார். இதனால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இருந்து ஓ பன்னீர்செல்வம் தரப்பு மொத்தமாக வெளியேறி உள்ளது. சறுக்கல் 2 - இரட்டை இலை சின்னம் இப்போதைக்கு தற்காலிகமாக எடப்பாடி தரப்பிடம் உள்ளது.

கையெழுத்து
சறுக்கல் 3- எடப்பாடி பழனிசாமி தரப்பை சேர்ந்த தமிழ் மகன் உசேனுக்கு இதில் கையெழுத்து போடும் உரிமை கிடைத்து உள்ளது. ஓ பன்னீர்செல்வம் வேட்புமனுவில் தற்காலிகமாக கையெழுத்து போடும் உரிமையை இழந்து உள்ளார். சறுக்கல் 4 - அண்ணாமலை சமீபத்தில் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளர் என்று கூறி அறிக்கை வெளியிட்டார். ஓ பன்னீர்செல்வத்தை அதில் வெறும் அண்ணன் என்று குறிப்பிட்டு இருந்தார். இப்படி ஓ பன்னீர்செல்வத்திற்கு சறுக்கல் மேல் சறுக்கல் ஏற்பட்டுக்கொண்டு இருக்கிறது.

சசிகலா
டெல்லி தரப்பில் இருந்தும் ஓ பன்னீர்செல்வத்திற்கு பெரிய சப்போர்ட் வரவில்லை. பாஜகவுடன் நெருக்கமாக இருந்தும் கூட, இடைத்தேர்தல் என்று வந்தது பாஜக தரப்பு ஓ பன்னீர்செல்வம் வேட்பாளரை வாபஸ் வாங்கும்படியே வலியுறுத்தியது. அந்த அளவிற்கு ஓ பன்னீர்செல்வத்திற்கு எதிரான சூழ்நிலை நிலவி வருகிறது. அதிமுகவில் எல்லாம் தனக்கு எதிராக திரும்பி உள்ள நிலையில் ஓ பன்னீர்செல்வம் விரைவில் சசிகலாவை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன் சசிகலாவே இதை வெளிப்படையாக குறிப்பிட்டு இருந்தார்.

சந்திப்பு
இந்த நிலையில்தான் தன்னுடைய பக்கத்திற்கு வலு சேர்க்கும் விதமாக ஓ பன்னீர்செல்வம் விரைவில் சசிகலாவை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் சசிகலா அளித்த பேட்டியில், ரம்பத்தில இருந்து என்னோட உத்தியை பார்த்துட்டு இருக்கீங்க; இதுக்கு மேல நான் வெளிய சொல்ல கூடாது. என்ன நடக்கும் என்று உங்களுக்கே வரும் நாட்களில் தெரியும், என்றார். இதையடுத்து.. ஓபிஎஸ் - இபிஎஸ் ஆகியோரை சந்திப்பதில் உங்களுக்கு பிரச்சனை இல்லையா என்று செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு கோபமா பதில் அளித்த சசிகலா.. என்னங்க இது.. என்னுடைய கட்சிக்காரர்களை நான் சந்திப்பதில் என்னங்க இருக்கிறது. இதில் என்ன இருக்க முடியும். உங்க கிட்ட சொல்லிவிட்டு வேண்டுமானால் நான் முடிவு எடுக்கிறேன், என்று சசிகலா கூறினார்.

ஓபிஎஸ்
இதை பற்றி ஓபிஎஸ் அளித்த பேட்டியிலும் கூட, கண்டிப்பாக சசிகலாவை சந்திப்பேன். ஏன் அவசரப்படுகிறீர்கள். கண்டிப்பாக போய் பார்ப்பேன். எப்போது பார்ப்பேன் என்று சொல்லுவேன். உங்களிடம் சொல்லிவிட்டுத்தான் போய் பார்ப்பேன். உறுதியாக பார்ப்பேன் என்று கூறி இருந்தார். இந்த நிலையில்தான் அதற்கான நேரம் வந்துவிட்டதாக ஓ பன்னீர்செல்வம் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டிடிவி தினகரனின் அமமுக கட்சி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இருந்து பின்வாங்கி உள்ளது. பாராளுமன்றப் பொதுத்தேர்தல் ஓராண்டு காலத்திற்குள் வரவிருக்கும் சூழலில், புதியதோர் சின்னத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும்.

தேர்தல்
ஆகவே, வரவிருக்கிற பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றப் பொதுத்தேர்தல்களில் நமது வெற்றிச்சின்னமான குக்கர் சின்னத்தோடு தேர்தல்களை சந்திப்போம். இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவதை தவிர்ப்பதே சரியாக இருக்கும் என்று டிடிவி தினகரன் குறிப்பிட்டு உள்ளார். இந்த நிலையில்தான் இவர்கள் மூவரும் விரைவில் சந்திக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வர தொடங்கி உள்ளன. சென்னையில் முக்கியமான இடம் ஒன்றில் இவர்கள் சந்திப்பு விரைவில் நடக்கலாம் என்று கூறப்படுகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications