சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முதல் வேலை இதுதான்.. "ஏ டூ இசட்".. பெரிய லிஸ்டை தயார் செய்த சசிகலா.. அவங்களுக்குதான் செக்!

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவை சரி செய்துவிடலாம் என்று சசிகலா கூறிய நிலையில்.. அவர் கூறிய "சரி செய்து விடலாம்" என்பதற்கு என்ன அர்த்தம் என்று கேள்விகள் எழுந்துள்ளது. இந்த நிலையில்தான் சசிகலா முக்கியமான லிஸ்ட் ஒன்றை தயார் செய்து வருவதாக தகவல்கள் வருகின்றன.

தமிழக அரசியல் களம் மீண்டும் சூடுபிடிப்பதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளன. அதிமுகவில் மிக கடுமையான உட்கட்சி பூசல் நிலவி வரும் நிலையில், தற்போது அடுத்தடுத்து சசிகலா ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கட்சிக்குள் மீண்டும் வருவேன்.. கண்டிப்பாக வருவேன்.. கட்சியை சரி செய்து விடலாம்.. கொரோனாவிற்கு பின் வருவேன் என்று சசிகலா குறிப்பிடுவதாக இந்த ஆடியோவில் பதிவாகி உள்ளது.

செம திருப்பம்.. அடுத்த மாதமே சசிகலா ரீ என்ட்ரி.. தமிழகம் முழுக்க டூர்.. அனல் பறக்கும் தமிழக அரசியல்செம திருப்பம்.. அடுத்த மாதமே சசிகலா ரீ என்ட்ரி.. தமிழகம் முழுக்க டூர்.. அனல் பறக்கும் தமிழக அரசியல்

ஆடியோ

ஆடியோ

அமமுக அடிமட்ட தொண்டர்கள் சிலரிடமும், சில அதிமுக நிர்வாகிகளிடமும் சசிகலா இப்படி போனில் பேசி இருக்கிறார். இதை அந்த தொண்டர்களும் உறுதி செய்துள்ளனர். இந்த நிலையில் சசிகலா பெரும்பாலும் ஜூன் அல்லது ஜூலை மாதம் தனது அரசியல் பிரவேசத்தை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக புதிய வீட்டில் குடியேறியதும் தனது அரசியல் பிரவேசத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

என்ன செய்ய போகிறார்

என்ன செய்ய போகிறார்

அதிமுகவில் சிலரை சமாதானம் செய்து, பலரிடம் பேசி, அதன்பின்தான் கட்சிக்குள் மீண்டும் சசிகலா வருவார் என்று கூறப்படுகிறது. சசிகலா 4 வருடமாக சிறையில் இருந்த போதே, தனக்கு எதிராக இருந்த பலரை மன்னித்துவிட்டார் என்று கூறப்படுகிறது. முக்கியமாக சசிகலா சிறைக்கு செல்லும் சில நாட்களுக்கு முன் நடந்த விஷயங்கள் அனைத்தையும் அவர் மன்னித்துவிட்டார் என்றே கூறப்படுகிறது.

பழசு

பழசு

பழசை பேச வேண்டாம்.. நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும். நாம் இப்போது கட்சியை காப்பாற்ற வேண்டும். நல்ல எதிர்க்கட்சியாக இருக்க வேண்டும். இந்த கட்சியை இப்படியே விட்டுவிட கூடாது என்பதில் மட்டும் சசிகலா இப்போது கவனமாக இருக்கிறாராம். முக்கியமாக ஓபிஎஸ் மீதோ அல்லது இபிஎஸ் மீதோ சசிகலாவிற்கு பெரிய மனஸ்தாபம் இல்லை என்றும் கூறுகிறார்கள்.

 சூழ்நிலை

சூழ்நிலை

"அவர்கள் சூழ்நிலை அப்படி" என்று ஓபிஎஸ், இபிஎஸ் குறித்து சசிகலா கூறியதாக தெரிகிறது. ஓபிஎஸ் கூட சசிகலா சிறையில் இருந்து வந்த பின், சசிகலா குறித்து உணர்வுபூர்வமாக பேசி இருந்தார். சமாதான தூது விடுவது போல.. ஓபிஎஸ் பேசி இருந்தார். சசிகலா குற்றமற்றவர் என்பதால்தான் ஜெ. மரணத்தை விசாரிக்க சொன்னேன் என்றும் கூட குறிப்பிட்டு இருந்தார். அப்போதே இதற்கான சமாதான தூதுகள் சென்றுவிட்டன.

ஆனால்

ஆனால்

ஆனால் இவர்களை தவிர கட்சியில் இருக்கும் வேறு சிலருக்கு சசிகலா குறி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. சசிகலா அதிகம் நம்பி இருந்த, தற்போது தனக்கு எதிராக கடுமையாக அரசியல் செய்யும் சிலரை சசிகலா குறி வைத்துள்ளார் என்கிறார்கள். தனக்கு எதிராக லாபி செய்யும் நபர்களின் லிஸ்டை சசிகலா எடுத்துள்ளார். விரைவில் அவர்கள் மீது ஆக்சன் எடுப்பார் என்கிறார்கள்.

எப்படி

எப்படி

மற்றவர்களை எல்லாம் சசிகலா மன்னித்துவிடுவார், ஆனால் ஒரு சிலர் மீது சசிகலா கோபத்தில் இருக்கிறார். அதிமுகவிற்கு உள்ளே வந்ததும் முதல் வேலையாக தன் மூலம் வளர்த்துவிட்டு, பின் தனக்கு எதிராகவே திரும்பிய சில நிர்வாகிகளை சசிகலா விட்டு வைக்க மாட்டார் என்கிறார்கள். இவர்களுக்கான லிஸ்ட் ரெடியாகிக்கொண்டு இருக்கிறது என்கிறார்கள்.

யார்

யார்

ஆனால் அதிமுகவை காப்பாற்றிய சில முக்கிய தலைவர்களை சசிகலா எதுவும் செய்ய மாட்டார். டாப் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டார் என்கிறார்கள். கட்சிக்குள் வந்தால், சில முக்கிய தலைவர்களை கண்டிப்பாக அவர் அனுசரித்துதான் போவார் என்று கூறப்படுகிறது.

English summary
Sasikala prepares a list of AIADMK members as she plans to start her political life again in the party.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X