ராஜமாதாவுக்கே இந்த நிலைமையா? எடப்பாடி தலைமையை ஏற்க சசிகலா தயாராமே! போட்டுடைத்த புள்ளி.. அதகள அதிமுக!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் கடந்த சில தினங்களாக நடந்து வரும் நிகழ்வுகள் ஏற்கனவே பிரிந்து போன முக்கிய தலைவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க எடப்பாடி பழனிச்சாமி தயாராக இருப்பது போலவே தோன்றுகிறது. இந்த நிலையில் முதலமைச்சராகிய சசிகலா மீண்டும் அதிமுகவில் என்ட்ரி கொடுக்கப் போகிறார் என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையை ஏற்க சசிகலா ஒப்புக் கொண்டதாக கூறி அதிர வைத்திருக்கிறார் அதிமுகவின் வைகை செல்வன்.

சில மாதங்கள் அமைதியாக இருந்த அதிமுகவில் தற்போது மீண்டும் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. மீண்டும் சசிகலா, ஓபிஎஸ் ஆகியோரை கட்சிக்குள் கொண்டு வர வேண்டுமென குரல்கள் எழுந்துள்ளது. சசிகலாவை சேர்க்க வேண்டுமென எடப்பாடி பழனிசாமியிடம் சில சீனியர்கள் சொல்லியுள்ளார்களாம்.

Sasikala AIADMK edappadi palaniswami

அதிமுக ஒரு எக்கு கோட்டை என ஜெயலலிதா கூறியிருந்த நிலையில், அவரது மறைவுக்குப் பிறகு அதிமுக பல அணிகளாகவும் கட்சிகளாகவும் சிதறுண்டு கிடக்கிறது. மேலும் எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றது முதல் அந்தக் கட்சி சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் படுதோல்வியை சந்தித்திருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்த போது நடைபெற்ற இடைத் தேர்தல், அதற்குப் பிறகு மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், நகர்ப்புற, ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள், ஈரோடு இடைத்தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் அதிமுக படுதோல்வியை சந்தித்தது.

2024 மக்களவைத் தேர்தலிலும் 40க்கு 40 என தமிழகம் புதுச்சேரியில் அதிமுக மண்ணை கவ்வியது. இதனால் அதிமுக ஒன்றியணைய வேண்டும், டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலா உள்ளிட்டோரை மீண்டு கட்சிக்குள் கொண்டு வர வேண்டுமென்ற கோரிக்கை குரல்கள் எழுந்துள்ளன. மேலும் செங்கோட்டையன் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட சிலர் மீண்டும் சசிகலாவை கட்சிக்குள் சேர்க்க வேண்டும் என பேசி வருகின்றனர். நீண்ட யோசனைக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமியும் அதற்கு சம்மதம் தெரிவித்து விட்டதாகவே கூறப்படுகிறது.

Sasikala AIADMK edappadi palaniswami

ஆனால் கட்சியின் பொதுச் செயலாளர் தான் தான் என உறுதியாக இருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி. இதனால் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ், அவை தலைவராக சசிகலா ஆகியோர் நியமிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. ஆனால் அதன் உறுதி தன்மை தெரியவில்லை. இதற்கு இடையே எடப்பாடி பழனிச்சாமி தலைமையை ஏற்க சசிகலா தயாராகி உள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

உத்திரமேரூரில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய வைகைச் செல்வன் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவை ஏற்றுக்கொள்ள சசிகலா தயாராக இருக்கிறார். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அடுத்த ஆட்சி அமைய வேண்டும் என்பதையும் ஏற்றுக் கொண்டிருக்கிறார் சசிகலா. திமுகவை வீழ்த்த அதிமுக ஒன்றிணைய வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து பேசி வருகிறார். இது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என பேசி இருக்கிறார். இதனால் அதிமுக மீண்டும் ஒன்றிணைய போகிறது என்கின்றனர் அதிமுகவினர். ஆனால் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா தான் அவர் எப்படி சசிகலாவின் தலைமையை எப்படி ஏற்றுக் கொள்வார் என கேள்வி எழுப்புகின்றனர் சசிகலா ஆதரவாளர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+