"சிக்னல்".. டிடிவி சொன்ன "அந்த" வார்த்தையும்.. முனுசாமியின் சமிக்ஞையும்.. தளரும் இறுக்கம்..!
அதிமுக, அமமுக ஒன்றிணையுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
சென்னை: ஒரே ஒரு லட்டரில் எல்லாவற்றையும் முடிவுக்கு கொண்டு வர அதிமுக தலைமை முயன்று வருகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.. செய்ததெல்லாம் தப்பு என்று எழுதி தந்துவிட்டால் கட்சியில் சேர்த்து கொள்வது பற்றி பரிசீலிக்கப்படும் என்று கேபி முனுசாமி சொன்ன வார்த்தை, எதற்கான அறிகுறி என்ற சந்தேகமும் கிளம்பி வருகிறது.
Recommended Video

யாரெல்லாம் சசிகலாவால் கடந்த காலங்களில் பயன்பெற்றவர்கள், யாரெல்லாம் அவருக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறார்கள் என்ற லிஸ்ட் எடுக்கும்படி மறைமுகமாக எடப்பாடியார் தரப்பு உத்தரவிட்டதாக செய்திகள் கசிந்த அதேசமயம், சசிகலாவை பற்றி யாருமே கருத்து கூறக்கூடாது என்றும் முதல்வர் தெரிவித்துள்ளதாகவும் கூறப்பட்டது.
சசிகலாவுக்கு வாழ்த்து சொல்லி நிர்வாகி ஒருவர் போஸ்டர் அடித்து ஒட்டியதுமே அவரை, கூண்டோடு தூக்கியதில் இருந்தே எடப்பாடியாருக்கு சசிகலாவின் வருகை எந்த அளவுக்கு கலக்கத்தை தந்து வருகிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

டிஸ்சார்ஜ்
இப்படிப்பட்ட சூழலில்தான், நேற்று காரில் அதிமுக கொடியை பறக்க விட்டபடி டிஸ்சார்ஜ் ஆகி சென்றுள்ளார் சசிகலா.. இந்த சம்பவம் அதிமுக தலைமையை மேலும் அசைத்து பார்த்து வருகிறது.. இதனால் டென்ஷன் ஆகி, அமைச்சர்கள் ஜெயக்குமாரும், சிவி சண்முகமும் பேட்டி தந்திருந்தனர்.. எனவே, அதிமுக தலைமை இன்னும் கலக்கத்தில்தான் உள்ளது போலும் என்று நினைத்தால், அந்த நினைப்பை லேசாக அசைத்துவிட்டது அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமியின் பேட்டி.

பதிலடிகள்
ஆரம்பத்தில் இருந்தே சசிகலாவை எடப்பாடியாருடன் சேர்ந்து எதிர்த்தவர்களில் கேபி முனுசாமியும் ஒருவர்.. இன்னும் சொல்லப்போனால், இவர்தான் கட்சியில் இப்போதைக்கு சீனியர்.. முக்கியமான அறிவிப்புகள், பதிலடிகளை வெளிப்படுத்தி வருவதும், பாஜக உட்பட கட்சிகளுக்கு மறைமுகமாக பதில் சொல்லி வருவதும் இவர்தான்.

தவறுகள்
இதே முனுசாமிதான் அன்று, "தவறுகள் செய்துள்ள சசிகலாவுக்கு கூடுதல் தண்டனை கிடைக்க வாய்ப்பிருக்கிறது" என்றார்.. இதே முனுசாமிதான், "சசிகலாவை வெளியேற்றிவிட்டால் அமமுக, அதிமுகவில் நாங்கள் அண்ணன், தம்பிகள்" என்றார். இதே முனுசாமிதான், "சசிகலாவுக்கு இனி அதிமுகவில் இடமில்லை.. சசிகலா விடுதலைக்கு பிறகு அதிமுகவிலோ, அரசியலிலோ எந்த தாக்கமும் ஏற்படாது.. தன்னை பொறுத்தவரை ஜெயலலிதாவின் உதவியாளர் அவர்" என்றார்.

கேபி முனுசாமி
அப்படிப்பட்டவர், நேத்து நடந்த களேபரத்திலும் ஒரு பேட்டி தந்துள்ளார்.. அதில், "டிடிவி தினகரன் தான் செய்ததெல்லாம் தவறு என்று கடிதம் எழுதிக் கொடுத்தால் அதிமுகவில் சேர்த்துக்கொள்ள பரிசீலிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார். அதாவது இந்த 4 வருடங்களில் நடந்த தவறுகளை எல்லாம் ஒரே ஒரு லட்டரில் சரியாகிவிடும் என்பது போல தெரிவித்துள்ளார்.

வருத்தம்
அதற்கேற்றவாறு, முனுசாமியின் இந்த கருத்துக்கு இதுவரை கட்சியின் ஒருங்கிணைப்பாளரோ, துணை ஒருங்கிணைப்பாளரோ கருத்து கூறவில்லை.. மறுப்பு கூறவில்லை.. விளக்கம் கூறவில்லை.. முனுசாமி இப்படி ஒரு பேட்டியை கட்சி தலைமைகளின் ஒப்புதல் இல்லாமல் சொல்லி இருக்க வாய்ப்பு இருக்குமா, ஒருவேளை இது முனுசாமியின் தனிப்பட்ட கருத்து என்று எடுத்து கொள்வதா? என்று தெரியவில்லை.. அப்படியே, டிடிவி லெட்டர் தந்துவிட்டால், கட்சியிலும் சேர்த்து கொள்ளப்பட்டுவிட்டால், எடப்பாடியாரின் நிலைப்பாடு என்ன என்பது எதிர்பார்ப்புக்குரிய ஒன்றுதான்..!

டிடிவி தினகரன்
இது எல்லாவற்றிற்கும் மேலாக, "இப்போது பேசும் இவர்கள் எல்லாம் சேர்ந்துதான் பொதுக்குழுவைக் கூட்டி சசிகலாவை பொது செயலாளராக தேர்ந்தெடுத்தனர். பொதுச் செயலாளரை யாரும் நீக்க முடியாது. அவர்களுக்கு கட்சியின் பைலா தெரியுமா? சசிகலாதான் பொதுச் செயலாளராக இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறார்" என்று டிடிவி தினகரனின் பேட்டிக்கு இதுவரை ஒருத்தரும் பதில் சொல்லவில்லை. டிடிவி இப்படி பேசியதற்கும், முனுசாமி சொன்ன அந்த மன்னிப்பு லெட்டருக்கும் ஏதாவது சம்மந்தம் இருக்குமோ என்று சிலர் பொருத்தி பார்க்கவும் துவங்கி விட்டனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications