Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சசிகலாவுக்கு விழுந்த பலத்த அடி.. அஇபுதமமுக ஆரம்பமே இப்படியா? காப்பாற்ற போகும் அந்த "பெரிய கை" யார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தைலாபுரம் தோட்டத்தில் பாமக டாக்டர் ராமதாஸை சந்திக்க வி.கே.சசிகலா மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது, தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது.. அப்படியானால் சசிகலா என்ன செய்ய போகிறார்? ஏற்கனவே தனித்து விடப்பட்ட நிலையில், சசிகலா யாருடன் கூட்டணி சேர முடியும்? இதுதான் தென்மாவட்ட அரசியலை உலுக்கியெடுக்கும் சந்தேகமாக உள்ளது...!

ஜெயிலிலிருந்து ரிலீஸ் ஆகி, அதிமுகவை மீட்டெடுக்கும் நோக்கில் சசிகலா மேற்கொண்டு வரும் பயணங்களுக்கு, ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால், சசிகலாவை யாருமே கண்டுகொள்ளவில்லை..

Sasikala AIPTMMK AIADMK Ramadoss vote bank split Tamil Nadu Assembly Election 2026 TN Election Special

பாமக ராமதாஸ்

பாமக ராமதாஸுடன் கூட்டணி சேர சசிகலா கணக்கு போட்டார்.. குறிப்பாக, வட தமிழகத்தில் வலுவான வாக்கு வங்கியை கொண்டுள்ள பாமகவின் ஆதரவு இருந்தால், அதிமுகவின் அதிகாரப்பூர்வ தலைமைக்கு ஒரு நெருக்கடியை கொடுக்கலாம் என்பதே சசிகலாவின் பிளானாக இருந்தது..

ஆனால், ராமதாஸ் அவரை தவிர்த்துவிட்டதாக தெரிகிறது.. இந்த புறக்கணிப்பு சசிகலாவுக்கு ஒரு தர்மசங்கடமான சூழலையே ஏற்படுத்தியுள்ளது.. சசிகலாவின் அரசியல் அங்கீகாரம் தற்போதைய சூழலில் கேள்விக்குறியாகவே இருக்கிறது என்பதே உண்மை..

சசிகலாவின் புதிய கட்சி

சசிகலாவின் பிரதான நோக்கமே, சிதறிப் போயுள்ள அதிமுகவை ஒன்றிணைத்து, அதன் ஒற்றைத் தலைமையாக மீண்டும் உருவெடுப்பதுதான்.. இதற்காகவே அவர் "சின்னம்மா" என்ற பிம்பத்தை முன்னிறுத்தி தொண்டர்களை சந்தித்து வருகிறார்..

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட பிளவுகளைச் சரிசெய்து, திமுகவை வீழ்த்தும் ஒரே சக்தியாக அதிமுகவை மாற்ற வேண்டும் என்பதே அவரது லட்சியமாக இருக்கிறது.. ஆனால், அதிமுகவின் இப்போதை தலைமை அவரை ஒருபோதும் உள்ளே அனுமதிக்கத் தயாராக இல்லை..

இதனால், சசிகலா ஒரு அரசியல் கட்சியை போல செயல்பட்டாலும், சட்டப்பூர்வமாக அதிமுகவின் அங்கமாக மாற முடியாமல் தவித்து வருகிறார்.. இந்த இக்கட்டான நிலையில், சசிகலா மாற்று அணியை உருவாக்குவதை தவிர வேறு வழியில்லை என்றே தெரிகிறது..

டாக்டர் ராமதாஸ்

டாக்டர் ராமதாஸ் சசிகலாவை தவிர்த்தது ஒரு அரசியல் ராஜதந்திரமாகவே பார்க்கப்பட வேண்டும்.. ஒருசேவளை சசிகலாவுடன் கரம் கோர்ப்பது என்பது அதிமுகவின் அதிகாரப்பூர்வ தலைமையை பகைத்து கொள்வதற்கு சமம் என்று ராமதாஸ் கருதியிருக்கலாம்..

மேலும், தேர்தல் அரசியலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு இருக்கிறது என்பதை மிகத் துல்லியமாகக் கணிக்கும் ராமதாஸ், இப்போதைய நிலையில் சசிகலாவால் ஒரு பெரிய அரசியல் மாற்றத்தைக் கொண்டு வர முடியாது என்று தீர்மானித்திருக்கலாம்.. ஒரு பலவீனமான தரப்புடன் கூட்டணி வைத்து தனது கட்சியின் எதிர்காலத்தைப் பணயம் வைக்க அவர் விரும்பவில்லை.. எனவே, ராமதாஸின் இந்த முடிவு ஒரு முதிர்ச்சியான அரசியல் நகர்வாகவே அரசியல் விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது..

பெரிய கை யார்

எனினும், சசிகலாவின் வருகையாலும், அவரது அரசியல் முன்னெடுப்புகளாலும் அதிமுகவின் வாக்கு வங்கிதான் கடுமையாகப் பாதிக்கப்படும்.. குறிப்பாக தென் தமிழகத்தில் முக்குலத்தோர் சமூகத்தின் வாக்குகள் சசிகலா மற்றும் ஓ பன்னீர்செல்வம் பக்கம் பிரியும் சூழல் உள்ளது.. இந்த வாக்குகள் அதிமுகவின் பாரம்பரிய வெற்றிக்கு மிகவும் அவசியமானவை..

சசிகலா தனித்து போட்டியிட்டாலோ அல்லது ஒரு சிறிய கூட்டணியை அமைத்தாலோ, அது அதிமுகவின் வெற்றி வாய்ப்புகளை நேரடியாக பாதிக்கும். இதனால் திமுகவுக்கு சாதகமான சூழல் உருவாகும் என்பதில் சந்தேகமில்லை..

சசிகலாவை பொறுத்தவரை, தனக்கு இருக்கும் இந்த வாக்கு வங்கியை சரியாகப் பயன்படுத்தி, அதிமுக தலைமைக்கு ஒரு பாடத்தைக் கற்பிக்கவே விரும்புவார்.

சசிகலாவுக்கு ஒரே ஆப்ஷன்

சசிகலாவுக்கு முன்னால் இப்போது இருப்பது ஒரேயொரு ஆப்ஷன்தான்.. அது ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் போன்றவர்களுடன் இணைந்து ஒரு வலுவான "மூன்றாவது அணியை" உருவாக்குவதுதான். இதன் மூலம் அதிமுகவின் வாக்குகளைத் தன் பக்கம் இழுத்து, தன்னை ஒரு தவிர்க்க முடியாத சக்தியாகக் காட்டிக்கொள்ள முயலலாம்.. ஆனால் இந்த வாக்கு வங்கியை யார் சரியாகப் பயன்படுத்தப் போகிறார்கள் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது.

அதேசமயம், பாஜக போன்ற கட்சிகள் சசிகலாவைத் திரைமறைவில் ஆதரிக்க வாய்ப்புள்ளதா என்பதும் இனிவரும் காலங்களில் தான் தெரியவரும்.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+