இந்த ஆடியோவிலும் கொங்கு மண்டல நிர்வாகிகளுக்கு எதிராக பொங்கும் சசிகலா.. என்ன செய்வார் ஈபிஎஸ்?
சென்னை: கொங்கு மண்டலத்தினர் அதிமுக என்ற கட்சிக்காகத்தான் ஓட்டு போட்டுள்ளனர் என வி கே சசிகலா தொண்டரிடம் பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது.
Recommended Video
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் ஒதுங்கியிருந்த சசிகலா, அத்தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்த பின்னர் அவரது தலையீடு தலைத் தூக்க தொடங்கிவிட்டது. கடந்த சில மாதங்களாக அதிமுக நிர்வாகிகளுடன் சசிகலா பேசி வரும் ஆடியோ ரிலீஸ் ஆகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
சசிகலாவிடம் பேசும் தொண்டர்கள் பெரும்பாலானோர் அதிமுக சரி செய்ய உங்கள் தலைமை வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கிறார்கள். சசிகலாவுக்கு தான் விரைவில் நிர்வாகிகளை சந்திப்பதாக உறுதி அளித்து வருகிறார்.

சசிகலா
இந்த நிலையில் அதிமுகவினர் யாரும் சசிகலாவுடன் பேசக் கூடாது என தலைமை கூட்டறிக்கை விடுத்துள்ளது. எனினும் தொண்டர்கள் பேசித்தான் வருகிறார்கள். இதற்கு காரணம் கட்சியில் இரு தலைமைகள் இருப்பதால் இரு அணிகளாக பிரிந்து கிடக்கிறார்கள்.

தேர்தல்
இதனால் கட்சியில் பொறுப்பு, பதவி, தேர்தலில் சீட் உள்ளிட்டவற்றை பெற முடியவில்லை என்பது தொண்டர்களின் ஆதங்கம். இதே ஒற்றை தலைமையாக இருந்தால் எந்த பிரச்சினையும் இல்லை என்பது இவர்களின் எண்ணமாக இருக்கிறது. இரட்டை தலைமையால் கட்சி விசுவாசிகள் ஓரங்கட்டப்படுவதாக நினைத்து வேதனை தெரிவிக்கிறார்கள்.

மாவட்ட நிர்வாகி
இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக நிர்வாகி சுரேஷிடம் சசிகலா பேசும் ஆடியோ ரிலீஸாகியுள்ளது. இதில் சசிகலா கொஞ்சம் காட்டமாகவே பேசியுள்ளாராம். அந்த ஆடியோவில் கட்சியை சரி செய்ய வேண்டும், நான் சீக்கிரம் வருவேன். தொண்டர்கள்தான் கட்சி. சாதி, மத, பேதம் இல்லாமல்தான் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் கட்சியை வளர்த்தார்கள்.

குறை வேண்டாம்
அது போல் இந்த கட்சியை நான் நிச்சயம் கொண்டு வருவேன். கொங்கு மண்டலத்தில் இருப்பவர்கள் கட்சிக்காகத்தான் ஓட்டு போட்டுள்ளனர். ஒருவர் இருவர் செய்த தவறுக்காக ஒட்டுமொத்த நபர்களையும் குறைச் சொல்ல வேண்டாம். எனக்கு தொண்டர்கள்தான் எல்லாமே.

ஆதிக்கம்
தொண்டர்கள் எல்லாரும் என்னுடன் இருக்கிறீர்கள். மக்களுக்கு நல்லது செய்வோம். விரைவில் சந்திப்போம் என சசிகலா கூறியுள்ளார். இந்த ஆடியோவில் கொங்கு மண்டலம் குறித்து சசிகலா பேசியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தற்போது கட்சியில் கொங்கு மண்டலத்தினரின் ஆதிக்கம் அதிகம் இருப்பதாகவே சொல்லப்படுகிறது.

அதிமுக
இது தென் மாவட்டம், வடமாவட்டம், டெல்டா மாவட்டம் ஆகியவற்றைச் சேர்ந்த அதிமுகவினரை வேதனைக்குள்ளாக்குகிறது. கட்சியில் எதிர்க்கட்சித் தலைவர், அதிமுக கொறடா ஆகிய இரு பதவிகளும் கொங்கு மண்டலத்தினருக்கே சென்றுள்ளது. இவர்களின் ஆதிக்கத்தை மனதில் வைத்துதான், மக்கள் கட்சிக்காகத்தான் ஓட்டு போட்டார்கள், குறிப்பிட்ட வேட்பாளருக்காக இல்லை என சசிகலா சொல்லாமல் சொல்லியுள்ளதாகவே பார்க்கப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications