தேவருக்கு முன் "சபதம்".. அரசியல் பயணமாகிறது சசிகலாவின் ஆன்மீக பயணம்.. தொடங்கியது இன்னிங்ஸ் 3!
சென்னை: மூன்றாம் கட்ட ஆன்மீக பயணத்தை இன்று தொடங்கி உள்ளார் வி.கே.சசிகலா. இன்று சென்னையில் இருந்து அவர் திருச்சி செல்கிறார்.
Recommended Video
சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது தவறு இல்லை என்று சென்னை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் சசிகலாவிற்கான ஆதரவு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.
சசிகலா ஏதாவது செய்வார்.. அதிமுகவில் மீண்டும் நுழைவார் என்று நம்பி அவருடன் நெருக்கமாக இருந்த தலைகள் இப்போது விரக்தி மோடிற்கு சென்றுள்ளனர்.

கசப்பு
ஒரு பக்கம் டிடிவி தினகரனுடன் கசப்பு காரணமாக அவரும் சசிகலாவிற்கு நேரடியாக பெரிய ஆதரவை கொடுக்கவில்லை. இந்த நிலையில்தான் சசிகலா நாளுக்கு நாள் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார். முன்னதாக அதிமுகவில் இருந்து தன்னை நீக்கியது செல்லும் என்ற சென்னை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன் என்று சசிகலா தெரிவித்துள்ளார். ஆனால் இனிமேல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டு, அதில் சசிகலாவிற்கு ஆதரவாக தீர்ப்பு வருவதெல்லாம் கஷ்டம்தான்.

சசிகலா
சசிகலா எப்படியாவது அதிமுகவை மீட்டு எடுப்பார் என்று நம்பி அவருடன் நெருக்கமாக இருந்தவர்களும் இப்போது விலக தொடங்கிவிட்டனர். சசிகலாவை சந்திக்க வந்த கார்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துவிட்டது. பாயிண்ட் வரட்டும் பாயிண்ட் வரட்டும் என்று சொல்லும் அளவிற்கு சசிகலாவும் கட்சியை மீட்பேன் மீட்பேன் என்று சொல்லி வருகிறாரே தவிர இதுவரை அதிரடியாக கூட்டங்கள் எதையும் அவர் நடத்தியதாக தெரியவில்லை.

ஆன்மிக பயணம்
முன்னதாக இரண்டு கட்டமாக அவர் ஆன்மீக பயணத்தை மேற்கொண்டார். தென் மாவட்டங்களுக்கும், டெல்டா மாவட்டங்களுக்கும் சென்றார். ஆனால் இதில் திருச்செந்தூரில் முன்னாள் அதிமுக நிர்வாகி ஓ ராஜாவை சந்தித்ததை தவிர, சசிகலா, சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெரிதாக சந்திப்புகள், மீட்டிங்குகள் எதையும் இந்த ஆன்மீக பயணத்தில் செய்யவில்லை. இந்த நிலையில்தான் இன்று மூன்றாம் கட்ட ஆன்மீக பயணத்தை தொடங்கினார் வி.கே.சசிகலா.

இன்று தொடங்கும் 3வது இன்னிங்ஸ்
சென்னையிலிருந்து திருச்சி சிக்கல் சிவலிங்கம் கோயிலுக்கு இன்று செல்கிறார் சசிகலா. அதை தொடர்ந்து திருச்செந்தூர் கோயிலுக்கு சென்று வேல் வழங்குகிறார். இதற்கு பின் மதுரைக்கு செல்கிறார். இங்கு இதையடுத்து மே 10ஆம் தேதி மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தரிசனம் செய்ய உள்ளார். இதோடு இவரின் ஆன்மீக பயணம் நிறைவுக்கு வருவதாக கூறப்படுகிறது. அதன்பின் அரசியல் பயணத்தை தொடங்க உள்ளாராம்.

தேவர் சபதம்
மதுரையில் அதே தேதியில் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்த உள்ளார். அங்கு சபதம் மேற்கொள்ளும் இவர், மற்ற தலைவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய உள்ளார். அதை தொடர்ந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கும் முடிவில் சசிகலா இருப்பதாக கூறப்படுகிறது. புதிய கட்சி தொடங்கும் திட்டத்தில் இப்படி பயணிக்கிறாரா அல்லது அதிமுகவில் உள்ள அதிருப்தி தலைகளை தன் பக்கம் இழுக்க பார்க்கிறாரா என்ற கேள்வியை இந்த பயணம் எழுப்பி உள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications