அதிமுக அதிகார யுத்தம்:புரட்சி பயணத்தை இன்று தொடங்கினார் சசிகலா- தடுக்குமா ஈபிஎஸ் கோஷ்டி?
சென்னை: அதிமுகவில் யாருக்கு செல்வாக்கு? என்கிற அதிகார யுத்தம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் நானே என்ற கோதாவுடன் தமிழகம் தழுவிய 'புரட்சி' பயணத்தை சசிகலா இன்று தொடங்கி உள்ளார். அதிமுகவுக்கு உரிமை கோரும் சசிகலாவின் இந்த புரட்சி பயணத்தை ஒற்றைத் தலைமையை வலியுறுத்தும் எடப்பாடி கோஷ்டி பழனிசாமி தடுத்து நிறுத்துமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
Recommended Video
அதிமுகவின் புதிய ஒற்றைத் தலைமை எடப்பாடி பழனிசாமிதான் என்கிறது அவரது தரப்பு. இதனால் அதிமுகவின் புதிய பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். ஆனால் அதிமுகவில் நடைமுறையில் உள்ள இரட்டைத் தலைமை தொடர வேண்டும் என்கிறது ஓ.பன்னீர்செல்வம் கோஷ்டி.

அதிமுக பொதுக்குழு
அதிமுகவின் இந்த அதிகார மோதல், கடந்த 23-ந் தேதி நடந்த பொதுக்குழுவில் பகிரங்கமாக வெடித்தது. எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக அறிவிக்கும் தீர்மானத்தை மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தினர். இதனால் அப்பொதுக்குழுவில் முன்னதாக அறிவிக்கப்பட்ட 23 தீர்மானங்களும் நிறைவேறவில்லை. ஜூலை 11-ல் கூடும் புதிய பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக அறிவிக்க அவரது கோஷ்டியினர் திட்டமிட்டுள்ளனர்.

அதிமுக பொதுச் செயலாளர்
அதிமுகவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் கோஷ்டி பதவிக்காக இப்படி அடித்துக் கொண்டிருக்கும் நிலையில் சசிகலா திடீரென அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதிமுக பொதுச்செயலாளர் என்ற அடைமொழியுடன் சசிகலா வெளியிட்ட அறிக்கையில் இன்று முதல் தமிழகம் முழுவதும் புரட்சிப் பயணம் மேற்கொள்வதாக கூறியிருந்தார்.

சசிகலா பயணம்
அதில், சென்னை தியாகராய நகர் இல்லத்தில் புறப்பட்டு கோயம்பேடு, பூவிருந்தவல்லி, திருவள்ளூர் சாலை வழியாக திருத்தணி சென்று அங்கிருந்து புரட்சி பயணத்தை தொடங்குகிறார்; திருத்தணி, குண்டலூரில் அதிமுக தொண்டர்கள், பொதுமக்களை சந்திக்கிறார்.; குண்டலூரில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார் என அவரது பயண திட்டம் விவரிக்கப்பட்டிருந்தது. திட்டமிட்டபடி சசிகலா இன்று பிற்பகல் தமது புரட்சி பயணத்தை தொடங்கினார்

ஈபிஎஸ் கோஷ்டி எதிர்ப்பு
அதேநேரத்தில் அதிமுகவில் தங்களுக்கே செல்வாக்கு அதிகம் என கூறி வரும் ஈபிஎஸ் கோஷ்டி, சசிகலாவின் இந்த பயணத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கூடும்; ஏற்கனவே அதிமுக கட்சி கொடியை சசிகலா பயன்படுத்தக் கூடாது என நீதிமன்றம் சென்றனர்; அதனால் இன்றைய சசிகலா பயணமும் அதிமுகவில் பிரச்சனைகளை எழுப்பக் கூடும்; சசிகலாவின் இந்த பயணம் அதிமுகவில் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல இருக்கக் கூடும் எனவும் கூறப்படுகிறது.
-
அதிமுக இரு அணிகளின் வாபஸ் மனுக்கள் ஏற்கப்படுமா? இன்று அறிவிக்கும் சபாநாயகர்.. பரபரப்பில் ர.ரக்கள் -
சிவி சண்முகம் எங்களுடன் தான் இருக்காரு.. அதிமுகவில் கருத்து வேறுபாடு சரியாகிவிட்டது.. எஸ்பி வேலுமணி! -
உதிருது இரட்டை இலை! 4 இல்ல.. 10 பேர்! தவெகவுக்கு தாவும் 6 சமஉ.க்கள்? தனிப்பெரும்பான்மை நோக்கி விஜய் -
எடப்பாடிக்கு டிமிக்கி கொடுக்கும் 11 பேர்.. எஸ்கேப்பாகும் வேலுமணி.. அதிர்ச்சிக்கு ரெடியாகிறதா அதிமுக? -
எடப்பாடியிடம் சீறிய சிவி சண்முகம்.. மன்னிப்பு கடிதம் எழுதி தரவேண்டுமா? தந்தால் இமேஜ் என்னவாவது? -
கண்கள் பனித்தது.. இதயம் இனித்தது! எடப்பாடி தான் எங்களுக்கு பொதுச் செயலாளர்! யூடர்ன் அடித்த வேலுமணி! -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்..மீண்டும் இணையும் அதிமுக கோஷ்டிகள்! கரங்கள் இணையும்..மனங்கள் இணையுமா? -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
கீழ்தளத்தில் ராஜினாமா.. மேல்தளத்தில் இணைப்பு.. தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டது உண்மை.. ஓ.எஸ்.மணியன்! -
சென்னை சிறுவனுக்கு பாலியல் தொல்லை! கோட் சூட் போட்டோஷூட் நடத்தினால் மட்டும் போதாது! இபிஎஸ் அட்வைஸ் -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி!












Click it and Unblock the Notifications