வெள்ள பாதிப்புகளை பார்க்க வாங்க... அவங்க வெலவெலக்கட்டும்- சசிகலாவுக்கு தூபம் போடும் ஆதரவாளர்கள்
சென்னை: தமிழகத்தின் பல மாவட்டங்களை பதம் பார்த்திருக்கும் மழை வெள்ளத்தை முன்வைத்து அரசியல் ஆதாயம் தேடுவதில் அரசியல் கட்சிகளை மிஞ்சவே முடியாது என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. தற்போது வெள்ள பாதிப்புகளை பார்வையிட சசிகலா வரவேண்டும் என அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனராம்.
வடகிழக்கு பருவமழையால் கடுமையான வெள்ளத்தால் தமிழகத்தில் 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதில் சென்னை மாநகரம் மிகவும் பாதிப்புக்குள்ளானது.

முதல்வர் ஸ்டாலின் ஆய்வு
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் விசிட் அடித்து தேவையான மீட்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டார். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக போர்க்கால நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதியாக சென்று ஆய்வு நடத்தி வருகிறார் ஸ்டாலின். அனைத்து அரசு இயந்திரங்களும் முழு வீச்சில் களத்தில் செயல்பட்டு வருகின்றன.

அதிமுக- திமுக
இந்த நிலையில், அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் பாதிக்கப்பட்ட பகுதிகளை விசிட் அடித்தன. அதிமுகவைப் பொறுத்தவரையில் தங்களது ஆட்சியில் சிறப்பாக செயல்பட்டதாக தம்பட்டம் அடிக்கின்றனர். இதற்கு திமுக பதிலடி கொடுக்கிறது. குறிப்பாக 2015-ம் ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு பேரழிவை சுட்டிக் காட்டியே அதிமுகவினர் வாயை அடைத்துவிடுகின்றனர் திமுகவினர்.
Recommended Video

சசிகலாவுக்கு அழைப்பு
பாஜக தலைவர் அண்ணாமலையின் போட் பயணம் பெரும் விவாதப் பொருளாகிவிட்டது. இந்த வகையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சசிகலாவை அவரது ஆதரவு அதிமுகவினர் பலரும் அழைத்திருக்கிறார்கள். மக்களிடம் இதனால் நெருக்கம் உருவாகும் என்றும், நீங்க இருக்கும் தி.நகர் பகுதியின் நிலைமை என்ன என்பதை அனுபவ ரீதியாக மக்களிடத்தில் சொன்னால் அனுதாபம் கூடுதலாகவே கிடைக்கும்; அத்துடன் எடப்பாடிக்கு கவுண்ட்டர் கொடுத்தது போலவும் இருக்கும் என்றும் சொல்லியிருக்கிறார்கள்.

காத்திருக்கும் தொண்டர்கள்
ஆனால், தற்போதைய நிலையில் வெளியே வர சசிகலா விரும்பவில்லையாம். அதே நேரத்தில் அறிக்கை கொடுத்தால் போதும் என சொல்லி அழைப்பை புறக்கணித்திருக்கிறார் சசிகலா. இருந்தாலும், சசிகலா வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்க்க வரவேண்டும்; இப்போது துள்ளிக் கொண்டிருக்கும் அதிமுக இரட்டைத் தலைமை என்ன செய்கிறது என பார்க்கத்தான் போகிறோம் என்று இலவு காத்து கிடக்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications