ஐயோ.. "வீடியோவா?".. வேற வழியே இல்லையாமே.. கடைசி அஸ்திரத்தை "அவர்" கையில் எடுக்கிறார்.. என்னாகும்?

கதிர்காமுவிடம் சசிகலா பேசும் ஆடியோ வெளியாகி உள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: வேலுமணி வீட்டில் ரெயிடு நடந்து பரபரப்பு கிளம்பி கொண்டிருக்க, இன்னொரு பக்கம் சசிகலா தரப்பிலும் இதே பரபரப்பு தொற்றி கொண்டுள்ளது.. அந்த வகையில் 2 விதமான தகவல்கள் கசிந்து வருகிறது.

நாளுக்கு நாள் சசிகலாவின் சவுண்டு அதிகமாகி கொண்டுதானிருக்கிறது.. எடப்பாடி பழனியோ அமைதியை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்.. தினகரனோ, ஏற்கனவே சைலண்ட் மோடில்தான் உள்ளார்.. ஓபிஎஸ்ஸோ சொல்லவே வேணாம், ஆல்ரெடி அவர் சைலண்ட்தான்.. ஆனால் சில விஷயங்களில் அழுத்தமாக இருக்கிறார்.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக, அதிமுக கூடாரம் ஆட்டம் கண்டு வருகிறது.. முதலில் தொண்டர்களிடம் மட்டும்தான் சசிகலா பேசுவதாக சொன்னார்கள்..

நிர்வாகிகள்

நிர்வாகிகள்

பிறகு நிர்வாகிகள் என்றார்கள்.. பிறகு முக்கிய தலைவர்கள் என்று லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது. இதையெல்லாம் எடப்பாடி பழனிசாமி அசால்ட்டாக விட்டுவிட்டார் என்று எடுத்து கொள்ள முடியாது.. அதேசமயம், சசிகலாவின் அசுர வளர்ச்சியையும் அவரால் தடுக்க முடியாத சூழல் ஏற்பட்டு வருகிறது. 30 வருஷம் ஜெ.விடம் லாபி செய்த சசிகலாவுக்கு, எடப்பாடி பழனிசாமியையும், ஓபிஎஸ்ஸையும் சமாளிப்பது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை..

 எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

ஆனால், அதிமுக என்ற ஆலமரம் கலையக்கூடாது என்ற ஒரு விஷயங்களுக்காக, பல விஷயங்களில் சசிகலாவின் பொறுமை வெளிப்படுகிறது.. சசிகலா இந்த அளவுக்கு பொறுமையாக இருப்பதே பெரிய விஷயம்தான்.. ஆனால், யாரையுமே ஒரு அளவுக்கு மேல் சீண்டினால், அவர்கள் முன்பிருந்த இயல்பை விட அசுர பலம் பெற்றுவிடுவார்கள்.. அந்த பலமே எதிர்தரப்பை காலி செய்துவிடும்.. இதுதான் இயற்கை.. இதில் எடப்பாடி பழனியும் விதிவிலக்கல்ல..!

சசிகலா

சசிகலா

இப்போது விஷயம் என்னவென்றால், சசிகலா அடுத்த கட்டத்துக்கு மூவ் ஆகிறாராம்.. அதாவது, ஆடியோ மட்டுமே ரிலீஸாகி கொண்டிருக்கும் நிலையில், வீடியோ ஒன்றையும் ரிலீஸ் செய்ய போகிறாராம்.. இந்த விஷயத்தை கேள்விப்பட்டுதான் அதிமுக கூடாரமே கதிகலங்கி போயுள்ளது.. காரணம், சில தினங்களுக்கு முன்புகூட சசிகலா ஒரு தனியார் டிவிக்கு பேட்டி தந்திருந்தார்.. அதில் அவர் பேசிய விஷயங்கள் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தி விவாத பொருளாக உருமாறியது..

 ஊழல் பிரச்சனைகள்

ஊழல் பிரச்சனைகள்

ஆனாலும், அதிமுக இரட்டையர்களை பற்றி பெரிதாக எதுவும் பேசவில்லை.. அவர்களை எந்த குறையும் சொல்லவுமில்லை.. அதனால், சசிகலாவால் தங்களுக்கு எந்தபிர பிரச்சனையும் பெரிதாக இருக்காது என்றுதான் இரட்டை தலைமை கணக்கு போட்டது.. அதனால்தான், ஊழல் பிரச்சனைகளை சமாளிக்க டெல்லி சென்றது, திமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியது என தன்னுடைய கவனத்தை எதிர்பக்கமாக திருப்பியது.. ஆனால் இப்போது விஷயமே வேறு மாதிரி வெடித்து கிளம்பி உள்ளது.. சசிகலா வெளியிடப்படும் அந்த வீடியோ என்ன என்பதுதான் பரவலான எதிர்பார்ப்பாக எழுந்துள்ளது..

 ஆஸ்பத்திரி

ஆஸ்பத்திரி

ஏற்கனவே ஒரு வீடியோ ஆர்நகர் தேர்தலின்போது திடீரென வெளியாகி பரபரப்பை கிளப்பியது.. ஆஸ்பத்திரியில் படுக்கையில் அமர்ந்தவாறு ஜெயலலிதா ஜூஸ் குடித்த அந்த வீடியோ பெருத்த அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.. ஓபிஎஸ் சொன்ன மர்மம் எதுவும் இங்கு நடக்கவில்லை என்பதை நிரூபணமாக்க உதவியது இந்த வீடியோ... டிடிவி தினகரன் வெற்றி பெற இந்த வீடியோ பெருத்த உதவியாகவும் இருந்தது.. இதற்கு மறைந்த வெற்றிவேல், மிகப்பெரிய காரணகர்த்தா என்பதையும் இங்கு நாம் நினைவுகூர வேண்டி உள்ளது.

வீடியோ

வீடியோ

இந்த நேரத்தில்தான், ஒரு முக்கிய வீடியோவை சசிகலா தரப்பினர் வெளியிடவுள்ளதாக தகவல்கள் கசிகின்றன.. இந்த வீடியோ எதற்காகவென்றால், சசிகலா மீதான குற்றச்சாட்டில் இருந்து தப்பித்து, மறுபடியும் அதிமுகவை கைப்பற்ற உதவும் என்ற நம்பிக்கையில் வெளியிட உள்ளதாக சொல்கிறார்கள்.. எனினும், இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை...

 பெண் தொண்டர்கள்

பெண் தொண்டர்கள்

அதேசமயம், அடுத்தடுத்த தேர்தல்களை தமிழகம் சந்திக்க உள்ள நிலையில், அதிலும் பெண் தொண்டர்கள் மத்தியில் நல்ல பெயரை ஈட்டித் தரும் என்ற கணக்கை போட்ட, கடைசி ஆயுதமாக இந்த வீடியோவை வெளியிடக் கூடும் என்கிறார்கள். அதுமட்டுமல்ல, ஜெயலலிதா மரணத்தில் மர்மம் எதுவும் கிடையாது என்பது போன்ற பல்வேறு கருத்துக்களை உருவாக்குவதற்கு இந்த வீடியோ நிச்சயம் பயன்படும் என்கிறார்கள்.

டேமேஜ்

டேமேஜ்

இந்த வீடியோ வெளியானால், இரட்டை தலைமைக்கு மேலும் சறுக்கல் ஏற்படும், அவர்களின் இமேஜ் டேமேஜ் சரியும் என்றும் கணக்கு போடப்படுகிறது.. ஆனால் இதெல்லாம் உண்மையா? நடக்குமா? சாத்தியமா? ஒரு வீடியோவை வைத்து கொண்டு, ஆலமரம் போன்ற கட்சியை தன்வசம் கொண்டு வந்துவிட முடியுமா? அதை ரத்தத்தின் ரத்தங்கள் ஏற்பார்களா? அதிமுக தலைமைக்கு இந்த வீடியோ கலக்கத்தை தருமா? என்பதெல்லாம் மில்லியன் டாலர் கேள்விகள்.

ஜெயலலிதா

ஜெயலலிதா

அதேசமயம், இப்படி வீடியோவை காட்டி, கட்சியை கைப்பற்றும் நிலைமை சசிகலாவுக்கு கிடையாது என்கிறது மற்றொரு தரப்பு.. கடைசிவரை ஜெயலலிதாவுடன் பாசத்தையும், நட்பையும், இறுக்கமாக தொடர்ந்து வந்த சசிகலாவுக்கு, வீடியோவை வெளியே காட்டி, அதன்மூலம் ஜெ.இமேஜை குலைக்கவும் வாய்ப்பில்லை.. சசிகலா ஒருபோதும் அப்படியெல்லாம் செய்ய மாட்டார்.. அப்படியே செய்தாலும், அது சசிகலாவுக்குதான் மைனஸ் ஆகிவிடும் என்கிறார்கள்.. இப்படி இருவேறு கருத்துக்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன.

Recommended Video

    போலி மரியாதை கொடுத்த தலைவர்கள்.. கேலி செய்து நடித்து காட்டிய ஜெ.. கேசி பழனிசாமி சுவாரஸ்ய தகவல்
     அவைத்தலைவர்

    அவைத்தலைவர்

    இதற்கு நடுவில் இன்னொரு "டாக்" ஓடிக் கொண்டிருக்கிறது.. சசிகலவை அவைத்தலைவர் பொறுப்புக்குக் கொண்டுவந்தால் என்ன? என்ற ரீதியில் அதிமுகவுக்குள் ஒரு விவாதம் எழுந்துள்ளதாம்.. இதற்கு பின்னணி காரணமாக ஓபிஎஸ் இருப்பதாக தெரிகிறது.. ஆனால், இதுகுறித்து உறுதியான பதிலை இதுவரை ஓபிஎஸ் சொல்லவில்லையாம்..

    ஓபிஎஸ்

    ஓபிஎஸ்

    ஒருவேளை, திமுகவை சமாளிக்கவும், கட்சியை காப்பாற்றவும் அவைத்தலைவர் பதவிக்கு சசிகலாவை அமர்த்த ஒன்றுகூடி முடிவெடுப்பார்களா என்பது தெரியவில்லை.. ஆனால், சசிகலாவை பொறுத்தவரை பொதுச்செயலாளர் தவிர்த்து வேறு எந்தப் பதவியையும் ஏற்க மாட்டேன் என்று கறாராக இருப்பதால், இதுக்கு சான்ஸ் இல்லை என்றே தெரிகிறது.. இனி அடுத்தடுத்து என்னதான் நடக்க போகிறது? பார்ப்போம்..!

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+