Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பீறிட்ட கண்ணீர்.. அதே இடம்.. அதே மாதிரி.. ஜெ. நினைவிடத்தில் அஞ்சலி.. ரீ-என்ட்ரி கொடுத்தார் சசிகலா

ஜெயலலிதா நினைவிடம் இன்று செல்கிறார் சசிகலா

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்றைய தினம் சசிகலா ஜெயலலிதாவின் நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்தினார்.. அப்போது கண்ணீர் மல்க தன்னுடைய அஞ்சலியை ஜெ.சமாதி முன்பு செலுத்தினார்.. 4 வருடம் கழித்து இன்று மீண்டும் சமாதிக்கு சென்றுள்ளார் சசிகலா.. இந்த இடைப்பட்ட காலத்தில் அவருடைய அரசியல் பயணத்தை சற்று பின்னோக்கி திரும்பி பார்ப்போம்..!

Recommended Video

    ADMKக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது - Jayalalitha நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் சசிகலா பேட்டி

    2016, டிசம்பர் 5ம் தேதி முதலே ஜெயலலிதாவின் நிழல் பிம்பம் சசிகலா, திரையில் தோன்ற பளிச்சென தோன்றியது.. அதுவரை 30 வருடங்கள் அதிமுகவில் லாபி செய்தவர்.. தன்னை பகைத்து கொண்டு எந்த ஒரு நிர்வாகியும் கட்சிக்குள் நீடிக்க முடியாது என்ற நிலையை ஏற்படுத்தியவர்..

    எம்பி, எம்எல்ஏ எந்த தேர்தலாக இருந்தாலும், அதற்குரிய வேட்பாளர்கள் லிஸ்ட்டை பரிசீலித்து, ஓகே சொல்வது வரை கட்சியை மறைமுக கன்ட்ரோலில் வைத்திருந்தவர் சசிகலா.. ஜெ.இறந்த அன்றுதான் சசிகலாவின் நேரடி அரசியல் துவங்கியது.

     விசுவாசம்

    விசுவாசம்

    அன்றைய தினமே எம்எல்ஏக்கள் கூடி, அவசர கூட்டம் நடத்தினர்.. சட்டமன்ற குழு தலைவராக ஓபிஎஸ்ஸை தேர்ந்தெடுத்தனர்.. ஜெ.வின் விசுவாசத்துக்குரியவரான ஓபிஎஸ், முதல்வராக பதவியேற்றார்.. ஆனால், இங்குதான் அதிமுக சீனியர்கள் கனகச்சிதமாக காய் நகர்த்தி, சசிகலா மீது கவனத்தை திருப்பினர்.. கட்சியை வழிநடத்த வேண்டும் என்று சசிகலாவிடம் நேரடியாகவே கேட்டுக் கொண்டனர்.

     பதவியேற்பு

    பதவியேற்பு

    இதையடுத்து, டிசம்பர் 29-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூடியது.. பொதுசெயலாளராக சசிகலாவும் தேர்வானார்.. பதவியுமேற்றார்.. இப்போது அதே சீனியர்கள் சசிகலாவை அடுத்த கட்ட உயர்வுக்கு கொண்டு செல்ல முயன்றனர்.. அதன்படி, தமிழகத்தின் முதல்வராக பதவியேற்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.. அப்போதுதான் பிரச்சனை வெடித்தது..

    அஞ்சலி

    அஞ்சலி

    காரணம், ஜெ.இருந்தபோது ஓபிஎஸ் விசுவாசத்துக்குரியவர் என்ற பெயரை பெற்றிருந்தாலும், அமைதியான முதல்வர் என்ற பெயரை பொதுமக்களிடம் பெற்றிருந்தாலும், ஜெ.மறைவுக்கு பிறகு, ஜல்லிக்கட்டு விவகாரத்தை அவர் சிறப்பாக கையாண்டார்.. அப்போதுதான் தனக்கென செல்வாக்கை நாடு முழுவதும் பெற்றார், ஜல்லிக்கட்டு விவகாரம் உலக அளவில் பேசப்படும்போதெல்லாம், முதல்வர் ஓபிஎஸ்ஸும் சேர்ந்தே பேசப்பட்டார்.. மேலும் வர்தா புயலை திறன்பட கையாண்ட வெற்றியும் ஓபிஎஸ்ஸுக்கே வந்து சேர்ந்தது.. இப்படிப்பட்ட நேரத்தில் சசிகலாவை முன்னிறுத்தவும், அதிருப்தி வெடித்தது..

     சட்டமன்ற குழு

    சட்டமன்ற குழு

    சட்டமன்ற குழு தலைவராக சசிகலாவை ஏற்று, பிப்ரவரி 5-ம் தேதி எல்லா எம்எல்ஏக்களும் கையெழுத்து போட்டார்கள்.. ஓபிஎஸ் தன்னுடைய முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.. முதல்வராக சசிகலாவை பொறுப்பேற்க ஆளுநர் எந்நேரமும் அழைப்பு விடுக்கலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.. ஆளுநர் எப்போது அழைத்தாலும் செல்வதற்கு சசிகலாவும் தயாராகவே இருந்தார்.. ஆனால், அந்த நேரம் பார்த்து ஆளுநர், மும்பையில் இருந்ததால், சசிகலா விவகாரம் தள்ளி போய்க்கொண்டே இருந்தது. இப்படிப்பட்ட சூழலில்தான், அதாவது பிப்ரவரி 7-ம் தேதி இரவு 9 மணிக்கு ஜெயலலிதாவின் சமாதிக்கு திடீரென சென்றார் ஓபிஎஸ்..

    பேட்டி

    பேட்டி

    அங்கேயே உட்கார்ந்து கண்மூடி தியானம் செய்தார்.. தியானத்தில் உட்கார்ந்த அந்த 40 நிமிஷம் தமிழ்நாடே பரபரப்பானது.. பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, கட்டாயப்படுத்திதான் தன்னிடமிருந்து ராஜினாமா கடிதம் பெற்றுவிட்டார்கள் என்று சொல்லி ஷாக் தந்தார். கட்சி பிளவு என்பது சமாதியிலேயே அந்த நொடியே ஆரம்பமானது.. மறுநாளே சசிகலா எம்எல்ஏக்களிடம் பேசும்போது, துரோகம் என்ற வார்த்தையை பயன்படுத்தி, ஓபிஎஸ்ஸை மறைமுகமாக சுட்டிக்காட்டினார்.. அத்துடன் ஜெயலலிதாவுக்கு மாற்று தன்னுடைய தலைமை தான் என்ற மெஸேஜ்ஜையும் அழுத்தமாக பதிவு செய்தார்.

    கூவத்தூர்

    கூவத்தூர்

    இப்படியே விட்டால், கட்சி பிளவுபடும், அணி உருவாகும், அணி தாவல் ஏற்படும், என்று நினைத்து, 130 எம்எல்ஏக்களையும் தன்னிடம் பத்திரப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார் சசிகலா. இதற்காகவே கூவத்தூரில் சொகுசு விடுதி ஒன்றில் தங்க வைத்தார்... இதையடுத்து, பிப்ரவரி 14ம் தேதி சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு சிறை தண்டனை என்று பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உறுதி செய்தது.. அப்போதுதான் வேறு வழியில்லாமல் அதிமுக சட்டப்பேரவை குழு தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

     நினைவிடம்

    நினைவிடம்

    சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சரணடைய பெங்களூரு கிளம்பினார்.. முன்னதாக ஜெயலலிதா நினைவிடத்திற்கு வந்தார்.. அஞ்சலி செலுத்தினார்.. கண்கள் முழுக்க கோபமும், ஆத்திரமும் நிறைந்து கிடந்தது.. ஏமாற்றம் தென்பட்டது.. சமாதியில் கையால் ஓங்கி அறைந்து சபதமும் எடுத்துக் கொண்டார்... நேராக பெங்களூரு சிறைக்கு சென்றார்.. 4 வருடங்கள் தண்டனையை அனுபவித்தார்.. இந்த 4 வருட காலத்தில் குடும்ப உறுப்பினர்களும், கட்சியின் மூத்த தலைவர்களும் சசிகலாவை சென்று சந்தித்து விட்டு வந்தார்கள்.. அதற்குள் டிடிவி தினகரனுக்கு அதிமுகவில் பிரச்சனை வந்து, அமமுக என்ற கட்சியை ஆரம்பித்துவிட்டார்..

     திவாகரன்

    திவாகரன்

    தினகரனுக்கும் திவாகரனுக்கும் சண்டை வந்து, திவாகரன் வேறு ஒரு கட்சியை ஆரம்பித்துவிட்டார்.. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இரட்டிப்பு தலைமையானது, 2017, செப்டம்பர் 12ம் தேதி அதிமுக பொதுக்குழுவை கூட்டி சசிகலாவை பொதுசெயலாளர் பதவியில் இருந்து நீக்கியது... இதனை சட்டரீதியாக சசிகலா சிறையிலிருந்தே எதிர்கொண்டு வருகிறார்.. 4 வருட சிறை தண்டனை முடிந்து சசிகலா விடுதலையாகி வெளியே வந்தார்.. அதிமுகவை கைப்பற்றுவாரா? எடப்பாடி பழனிசாமியை சந்திப்பாரா? ஓபிஎஸ் சசிகலாவை சென்று நேரில் சந்தித்து ஆதரவு தருவாரா? சசிகலா அமமுகவை பொறுப்பேற்று நடத்துவரா? என்பன போன்ற பல எதிர்பார்ப்புகள் கிளம்பின.

     நிர்வாகிகள்

    நிர்வாகிகள்

    ஆனால், அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டார்.. அதற்கு பிறகு கட்சி நிர்வாகிகளிடம் போனில் பேசி ஆடியோக்கள் வெளிவந்தன.. ஆரம்பத்தில் நிர்வாகிகளிடம் பேசிய ஆடியோக்கள் வெளிவந்தநிலையில், கடைசியாக மாஜி எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மேயர்களோடு உரையாற்றும் ஆடியோக்கள் வெளியானது.. நான் விட மாட்டேன், கட்டாயம் வந்துடுவேன்... கட்சியை மீட்பேன்... தைரியமா இருங்க என்பன போன்ற வார்த்தைகளே அந்த ஆடியோக்களில் பெரிதும் இடம்பெற்றிருந்தன.

    தீர்மானங்கள்

    தீர்மானங்கள்

    சசிகலாவின் இந்த நடவடிக்கைகளுக்கு அதிமுக எதிர்வினையாற்றியது.. ஒவ்வொரு மாவட்டத்திலும் அவரைக் கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன... சசிகலாவுடன் தொடர்பிலிருந்த 20 பேர் அதிரடியாக கட்சியிலிருந்து நீக்கமும் செய்யப்பட்டனர்... ஆனால், சசிகலாவுக்கு ஆதரவாக ஒரு சில இடங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இப்போது, அதிமுக பொன்விழா கொண்டாட்டங்கள் நடக்க போகிறது..

     ஆதரவா?

    ஆதரவா?

    இதையொட்டி இன்று மெரினாவில் உள்ள எம்ஜிஆர் ஜெயலலிதா மற்றும் அண்ணா சமாதிகளுக்கு சென்று சசிகலா மரியாதை செலுத்த முடிவு செய்ததாக செய்திகள் வந்தன.. அதிமுக-வை வசப்படுத்துவாரா? அமமுகவை அதிமுகவுடன் இணைப்பாரா? வேறு ஏதாவது முக்கிய முடிவை அறிவிக்க போகிறாரா? எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார், கே.பி.முனுசாமி போன்றவர்கள் மட்டுமே சசிகலாவுக்கு எதிர்ப்பை காட்டி கொண்டிருக்கும் நிலையில், சசிகலாவின் ஆல்டைம் அனுதாபியாக இருக்கும் ஓபிஎஸ் இனியாவது வாய் திறப்பாரா? என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

    எதிர்பார்ப்பு

    எதிர்பார்ப்பு

    எடப்பாடி பழனிசாமியின் நம்பிக்கைக்கு பாத்திரமான வேலுமணி, தங்கமணி இருவருமே சசிகலா அனுதாபிகள் என்றாலும், அதை இனியாவது வெளிக்காட்டி கொள்வார்களா? என்றும் தெரியவில்லை.. கொடநாடு உட்பட பலவித சிக்கலில் சிக்கியிருக்கும் எடப்பாடி பழனிசாமி இனி சசிகலாவை நேரடியாக எதிர்கொள்ளும் நிலைமைக்கு வந்துள்ளார். அரசியலை பொறுத்தவரை ஒருவருடைய வீழ்ச்சியில்தான், இன்னொருவரின் எழுச்சி அடங்கி இருக்கிறது என்பதுபோல, சசிகலாவின் இந்த ரீஎன்ட்ரி, யாருக்கான எழுச்சி? யாருக்கான வீழ்ச்சி? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+